Tuesday, September 29, 2009

கோமாளியா தெரிஞ்சோமுங்க நாங்க...!!


கிட்டத் தட்ட ஒன்றரை மாசமா உங்கள தொந்தரவு பண்ணாம ரொம்ப கஷ்டமா போச்சு ங்க எனக்கு... அதான் திரும்பவும் கிறுக்கலாம்னு வந்துட்டேன்...!!

போன மாசம் 22 ஆம் தேதி நான் என் கணவரோட அலுவலக நண்பரோட மனைவியோட இந்தியாவுக்கு கிளம்பினேன்ங்க... ஜெர்மனி ல இருக்கறப்ப rediff news, அந்த news இந்த news னு படிச்ச எல்லாத்துலயும்... பன்றிக் காய்ச்சல் ரொம்ப அதிகமா பரவிற்றுக்கு எல்லா எடத்துலையும்னு தான் படிச்சேன்ங்க... அதனால நானும் என்னோட கூட வந்தப் பெண்ணும் முகக் கவசம், அப்புறம் கைக்கு alcohol sanitizer gel, gloves இதெல்லாம் வாங்கிக்டு போனோம்ங்க..

விமானத்துல போயி உக்காந்த்துக்கிட்டோம் நாங்க... ஆனா, ஒருத்தர் கூட முகக் கவசம்( face mask ) போட்டுக்கலைங்க... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... அதனால கொஞ்ச நேரம் நாங்களும் அதப் போட்டுக்கல... ஆனா, எங்க பக்கத்துல ( பக்கத்து row la ) உக்காந்துற்றுந்த ஒரு ஆளு இஷ்டத்துக்கு தும்பல் போட ஆரம்பிச்சிட்டாரு... அதனால, நாங்க ரெண்டு பேரும் பயந்து போயி உடனே முகத்துக்கு கவசத்த எடுத்து போட்டுக்கிட்டோம்... ஆறு மணி நேர பயணத்துக்கு அப்புறம் துபாய் விமான நிலையத்துக்கு வந்தது சேர்ந்தோம்.. அங்க தான் கூட்டம் அலை மோதுமே...! இங்க தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு பேசிக்கிட்டு நாங்க விமாத்த விட்டு இறங்கி நடந்துக்கிட்டு இருந்தோம்... எங்க ரெண்டு பேரத் தவிர வேற யாருமே கவசம் போடலீங்க...!! எங்க பக்கத்துல உக்காந்திருந்தவர் தும்மனார்னு தானங்க நாங்க mask போட்டுக்கிட்டோம்? கடைசியில என்னாச்சு தெரியுங்களா...?? அந்த ஆளு எங்கள பாத்து எதோ சொல்லிட்டு சிரிச்சிட்டு போறாரு... என்னத்த பண்றது??!!

அப்பவும் நாங்க கண்டுக்கலங்க... அப்டியே தான் நாங்க போக வேண்டிய கேட் (gate) ku போனோம்... போற வழில லாம் எல்லாரும் முக மூடி கொள்ளகாரங்கள பாக்கற விதமா பாத்தாங்க எங்கள!! எங்கள மாறி இன்னும் ரெண்டு பேர்(ரெண்டு பேர் னா எண்ணி ரெண்டு பேர் ங்க...) கவசம் போட்டுக்கிற்றுந்தாங்க! அதப் பாத்ததும் ஒரு வித திருப்தி வந்துச்சி எங்களுக்கு... சரி நமக்கு துணையா இன்னும் ரெண்டு பேர் இருக்காங்கங்கர நிம்மதியும் வந்துச்சி...

ஆனா... அவங்களும் வேறேதோ விமானத்துல போயிட்டாங்க போல... நாங்க போக வேண்டிய கேட்(gate) கு வரல அவங்க... :(

பெங்களூருக்கு போற விமானத்துல வந்து உக்காந்தும் ஆச்சு நாங்க... அந்த விமானத்துலையும் யாரும் முகக் கவசம் போடலைங்க... போதாக் குறைக்கு எங்கள கடத்தல் காரங்க, கொள்ளகாரங்கள பாக்கற மாறியே பாக்கறாங்க!! ஆனாலும் நாங்க கவசத்த களட்டல... நம்ம ஒடம்பு தானே ங்க நமக்கு முக்கியம்?? என்ன சொல்றீங்க?? ;)

நாலு மணி நேரத்துக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தோம்... அங்க immigration கு முன்னாடி பன்றி காய்ச்சல் இருக்கானு சோதிக்கப் போறதா சொன்னாங்க... சரி னு அங்க போனா... காய்ச்சல் இருக்கா னு temperature check (கடனே னு ) பண்ணிட்டு அனுப்பிட்டாங்க... அதுக்கப்பறம் immigration முடிஞ்சி ஒரு வழியா வெளிலயும் வந்துட்டோம்...
ஆனா, துபாய் லயாவது எங்களைத் தவிர இன்னும் ரெண்டு பேர் முகக் கவசம் போட்டுக்கிட்டு இருந்தாங்கங்க... இங்க... பெங்களூருல ஒருத்தங்க கூட போடல...

மக்கள் கிட்ட பன்றிக் காய்ச்சலைப் பத்தின விழிப்புணர்வு இல்லியா? இல்ல... பத்திரிகை ல லாம் படிச்சது லாம் பொய்யா?? (எதோ... வெளில போனாலே எல்லாரும் முகக் கவசத்தொடத் தான் போறாங்க, அப்டி இப்டி னு போட்டிருந்தாங்க..) எங்களுக்கு ஒன்னும் புரியல... மொத்தத்துல துபாய் விமான நிலையத்துலையும் சரி பெங்களூரு விமான நிலையத்துலையும் சரி... நானும் என்னோட கூட வந்த பெண்ணும் கோமாளிகளாட்டம் திரிஞ்சிக்கிற்றுந்தோம்... !!









தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Tuesday, August 18, 2009

இன்னும் கொஞ்ச நாளுக்கு உங்களுக்கு லீவ் விட்டுட்டேன்ங்க!!


இன்னும் கொஞ்ச நாளைக்கி உங்கள தொல்ல பண்ணாம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்ங்க நானு... இந்தியாவுக்கு கிளம்பறேன் இந்த சனிக்கிழமை!! வேணும்ங்கற துணி மணி, வீட்டுக்காக வாங்கின எல்லாத்தையும் சரி பாத்து ஒன்னொன்னா எடுத்து வெக்கணும்!! என் கிறுக்கல்கள் பக்கம் வர முடியாது... :( :) அதான், இன்னும் ஒரு பத்து பன்னிரண்டு நாள் பொழச்சிட்டு போங்கன்னு லீவ் விட்டுட்டேன் உங்க எல்லாருக்கும்!! ;)



இருங்க இருங்க... ரொம்ப சந்தோஷப் படாதீங்க... ஊருக்கு போனதும் இல்லைன்னாலும், கூடிய சீக்கிரம்(செப்டம்பர் மாசம் பாக்கலாம்) திரும்பவும் வருவேன் உங்கள தொல்ல பண்றதுக்கு!! :) அதுவரைக்கும் வேணும்னா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கோங்க... ;)



தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Monday, August 17, 2009

நாயும் நம்மள மாறித் தானுங்க!!


நாய் நன்றியுள்ளது ன்னு நாம சொன்னாலும், பொதுவா... மிருகங்களுக்கு யோசிக்கற திறன் கிடையாது.. அதுங்களுக்கு 5அறிவு தான், அதனால எந்த ஒரு விஷயத்தையும் யோசிச்சி அதுக்கப்புறம் செயல்படத் தெரியாதுன்னு தான் நாம நினைக்கறோம்.. நானும் அப்டித் தானுங்க நெனச்சிக்கிட்ருந்தேன்...



ஏதாச்சும் படத்துல நாய் அழகா எதையாவது யோசிச்சி செஞ்சா.. உதாரணத்துக்கு

1.ஒரு பந்த தூக்கி போட்டா அத ஓடிப் போயி எடுத்துக்கிட்டு வரும் போது...

2.தன்னை வளர்ப்பவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துச்சின்னா அந்தத் தீங்க எதிர்த்துப் போராடறது..



அதுக்கு பழக்கப் படுத்தி இருக்காங்க ன்னு தான் நான் நெனச்சிக்குவேன்...



ஆனா, நான் நெனச்சது தப்புன்னு என்னோட 'விக்கி' எனக்கு (அதோட செயல்களால)புரிய வெச்சிடுச்சிங்க... அப்டி என்ன செஞ்சிதுன்னு பாக்கறீங்களா...?? பெருசா ஒன்னும் இல்லங்க... சாதாரண தினசரி வேலைகள் தான்...



உதாரணமா இதச் சொல்றேன்ங்க...

தெனமும் அதுக்கு(எங்க விக்கி கு) சாப்பாடு கொடுத்ததுக்கு அப்புறம் எங்க அம்மா குளிர்சாதனப் பெட்டி லேருந்து குடி தண்ணீர எடுத்து அதோட கிண்ணத்துல ஊத்தி வெப்பாங்க... அதுவும் சமத்தா அத குடிச்சிட்டு போயி படுத்துக்கும்!



ஒரு நாள், எங்க அம்மா அதுக்கு சாப்பாடு மட்டும் போட்டுட்டு... மறதில தண்ணிய குடுக்காம விட்டுட்டாங்க... அது கொஞ்ச நேரம் எங்க அம்மாவையே சுத்தி சுத்தி வந்துச்சி.. அப்பவும் எங்க அம்மாவுக்கு புரியல! அவங்களோட வேலைஎல்லாத்தையும் முடிச்சிட்டு போயி உக்காந்துட்டாங்க... எங்க விக்கி என்ன பண்ணுச்சி தெரியுமா ங்க? அம்மா வோட புடைவை அதோட வாயால பிடிச்சி இழுத்துக்கிட்டு சாப்பிடும் அறைக்கு(dining hall) போயி, குளிர்சாதனப் பெட்டி கிட்ட போயி நின்னு எங்க அம்மாவ பாத்துச்சி... அப்பவும் அது என்ன சொல்லுதுன்னு புரியாம 'என்ன டா? என்ன வேணும் உனக்கு?னு கேட்ருக்காங்க அம்மா... அது குளிர் சாதனப் பெட்டிய ஒரு முறை பாக்குது, அப்புறம் போயி அதோட சாப்பாடு தட்டையும் கிண்ணத்தையும் வெச்சிருக்ற அலமாரிய காட்டுது... திரும்ப வந்து குளிர்சாதனப் பெட்டிய காட்டுது...' அத பாத்துட்டு நான் அம்மா அது தண்ணி கேக்குதோ என்னமோ னு சொல்லி கொஞ்சம் தண்ணிய(குளிர்சாதனப் பெட்டி லேருந்து எடுத்து) ஊத்திக் குடுக்க அது அந்தத் தண்ணிய குடிச்சிட்டு போயி படுத்துக்கிச்சி!!



இன்னொரு உதாரணம் ங்க...



எங்க அப்பா தான் அத 'சூச்சு' போக வெளில கூட்டிக்கிட்டுப் போவாரு... ஆனா, மழை வந்துற்றுந்ததனால ஒரு நாள் ரொம்ப நேரம் ஆகியும் அப்பா அத வெளில கூட்டிட்டு போகல!! (எங்க விக்கி ரொம்ப சமத்துங்க... அவன் குட்டியா இருக்கும் போது ஒரு முறை தான் வீட்ல 'சூச்சூ' போயிட்டான், அப்போவே அவன அம்மா திருத்திட்டாங்க... அவன் சுச்சு போன எடத்த காட்டி வெளில தான் போகணும் னு சொன்னாங்க... அன்னிலேருந்து அவன் எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்குள்ள அப்டி போக மாட்டான்!!) வெளில னு சொன்னதும் நம்ம நண்பர் 'ராஜ்' அதாங்க... நம்ம 'குறை ஒன்றும் இல்லை ராஜ்' கௌண்டற கூட்டிக்கிட்டு 'தெருவ நாசம் பண்ணா மட்டும் பரவா இல்லியா ன்னு' வந்திடப் போறாரு...



கொஞ்சம் பொறுமையா மேல படியுங்க ராஜ்... நான் வெளில னு சொன்னது எங்க வீட்டுக்கு வெளில தான், சாலைல இல்ல... எங்க தோட்டத்துல ஒரு எடத்த ஒதுக்கிட்டோம் அவனுக்காக!! :)



சரி நானு என்ன சொல்ல வரேன் னு சொல்லிடறேனே... மழை வந்ததால ரொம்ப நேரமா விக்கி ய அப்பா வெளில கூட்டிட்டு போகல! மழை வருதுங்கறதால அதுவும் பேசாம இருந்துச்சி... ஆனா, மழை நின்னுப் போன அப்புறம் அப்பா எதோ வேலையா விக்கி ய வெளில கூட்டிட்டு போகாம விட்டத மறந்துட்டாரு போல.. அது... அப்பாவா நம்மள கூட்டிட்டு போவாங்க னு பாத்து பாத்து இது ஆவறதில்ல னு நெனச்சிதோ என்னவோ... நேரா போயி அப்பாவோட ஆடைய பிடிச்சி இழுத்துது... அப்பாவுக்கு ஒன்னும் புரியாம 'என்ன டா?னு கேட்டு அது பின்னாடியே நடந்து போனாருங்க... அது, வாசல் வர போயி நின்னுக்கிட்டு, அப்பாவ ஒரு முறை பாக்குது, வாசல் கதவ ஒரு முறை பாக்குது...'





அப்பவும் அப்பாவுக்கு புரியல!! போடா னு சொல்லிட்டு ஹால் ல வந்து உக்காந்துக்கிட்டாறு... அது திரும்பவும் வது அப்பாவ ஒரு முறை பாத்துட்டு, வாசல் கதவ காட்டுச்சி... அப்பவும் என்னன்னு புரியாம அப்பா அத பாக்கவே... நேரா போயி வாசல் கிட்ட நின்னுக்கிட்டு அதோட கால தூக்கி அது சூச்சு போற பாணியில ஒரு முறை நின்னு காட்டிட்டு கால எறக்கிட்டு திரும்பவும் அப்பாவ பாத்துட்டு வாசல் கதவ காட்டுச்சி!!



இத்தனிக்கும், நாங்க எங்க விக்கி ய பழக்கப்படுத்தல் ங்க... அதாங்க... training குடுக்கல... ஆனாலும் எவ்ளோ யோசிக்குது பாருங்க அது?! இந்த ரெண்டு உதாரணம் தான் இருக்கு னு நெனைக்காதீங்க... நான் எங்க விக்கி ய பத்தி சொல்ல ஆரம்பிச்சேன் நா ஒரு நாள் இல்ல எத்தன நாள் ஆனாலும் சொல்லிக்கிட்டே இருக்கலாம்... ஆனா, 'நீங்க ல்லாம் பாவம்'ல... அதான் இதோட நிறுத்திக்கறேன்(இப்போதைக்கு.. ஹி ஹி ;))!!




தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Friday, August 14, 2009

குட்டிப் பாப்பா என்ன பண்ணுது?? பாக்கலாம் வாரீகளா??


வெவேவேவா :0 நான் எங்க இருக்கேன் னு கண்டு பிடிங்க பாக்கலாம்!!



என்ன அப்டி பாக்கறீங்க? என்ன மாறி டான்ஸ் ஆடுங்க பாக்கலாம்! ;)



நான் சமத்தா குளிச்சேன்னா என் தலைல இருக்கற பூ வாடவே வாடாதாம், எங்க அம்மா தான் சொன்னாங்க!! அதான் குளிக்கப் போறேன்... :)





எனக்கு தூக்கம் வந்துடுச்சி பா... அப்பரம் பாப்போம்...!!




பூச்சி...!! :)











தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Thursday, August 13, 2009

கதை கதையாம் காரணமாம்!!


"எல்லா வேலையும் நானே தான் பாக்கணும், இதென்ன வீடா இல்ல சத்திரமா? எல்லா வேலையையும் நான் மட்டும் செய்ய முடியாம இங்க கெடந்து தவிக்கறேன், போதாதுன்னு என்ன வேல வாங்கிக்கிட்டு, சொகுசா உக்காந்த்துக்கிட்டு பதம் பாக்கறீங்க?!" சந்தடி சாக்கில் உக்கார்ந்த இடத்திலிரிந்து அதிகாரம் செலுத்தும் தன் மாமியாரை சாடினாள் லக்ஷ்மி!










லக்ஷ்மிக்கு அன்பான கணவன், 2 குழந்தைகள்- ஒரு ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை.. ஆண் பிள்ளை மூத்தவன்... படு சுட்டி... இளையவள் அமைதியின் உருவம்.. கணவன்(சந்திரன்) அன்பானவன், ஆனால், ஊருக்காக பயப்படுபவன்... சொந்த பந்தங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் இயல்புடையவன்! இவர்கள் சென்னையில் வசிப்பதால் ஊரிலிருந்து எந்த விசேஷத்துக்கு எவர் வந்தாலும் இவர்கள் வீட்டில் தான் ஐக்கியமாவார்கள்!




வந்தவர்கள் எதிரில் தன் மருமகள் லக்ஷ்மியை மேலும் கடிந்து விழுவாள் மாமியார் காரி... "இதென்னடி? சாம்பார்ல இவ்ளோ கடுக போட்டிருக்க? உங்கப்பன் வீட்டு சொத்தா? என் பய்யன் கஷ்டப்பட்டு, இராத்திரியும், பகலுமா உழச்சி சம்பாதிக்கறான்.. நீ என்னடான்னா இப்டி வீணா செலவு பண்ற..." வந்தவங்களுக்கு உக்காந்த இடத்துல உபசரிப்பு வேறு! காபி குடுத்தா அத குடிச்சிட்டு அந்த டபராவ கூட எடுத்துட்டு போயி சமயக் கட்டுல போட மாட்டாங்க! அவங்க போடலாம்னு எந்திரிச்சாலும் இந்த மாமியாக் காரி விடமாட்டா.. அங்கிட்டு வெச்சிடுங்க.. எல்லாம், அவ எடுத்துக்டு போவா ம்பா...




சமயலரையிலேருந்து லக்ஷ்மி தனக்குத் தானே முனுமுனுத்துக்குவா... "ஆமா ஆமா... அதான், சம்பளமில்லாத வேலைக்காரி நானொருத்தி இருக்கேனே இந்த வீட்ல! யாரும் சமயக் கட்டுப் பக்கம் வராதீங்க"... எத்தன வேல னு தான் அவ தனியா செய்வா பாவம்? காலைல எந்திரிச்சது லேருந்து வாசல் தெளிச்சி கோலம் போட்டு, சமையல் செஞ்சிட்டு, வீடு பெருக்கி தொடச்சிட்டு, துணி துவச்சி காய போட்டு, சாமான் கழுவி போட்டு... ஹப்பாடா னு உக்காந்தா, அப்போ தான் ஏதாவது வேல சொல்லுவா மாமியா காரி!




இது போதாதுன்னு, நாத்தனாரோட பொண்ணு மேல்படிப்பு படிக்கறதுக்கு இங்கயே வந்து டேரா போட்டுட்டா! ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல... அஞ்சு வருஷம் இங்கயே தங்கிட்டா!! சரி சின்ன பொண்ணு தான னு அவளுக்கும் தன் பிள்ளைகளுக்கு செய்யற மாறித் தான் செஞ்சா லக்ஷ்மியும்... ஆனா, அந்த பொண்ணு செய்யரதை எல்லாம் செஞ்சிக்கிட்டு, அவ பாட்டியோட கூட்டு சேந்துக்கிட்டு லக்ஷ்மிய கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டா...


ஒரு நாள், அவளோட(லக்ஷ்மியின் நாத்தனார் மகள்) புத்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டுத் தரச் சொல்லி அவளோட மாமாவ(சந்திரன) நச்சரிக்கவே, அவரும், போட்டுத் தரேன் னு, புத்தகம் எல்லாத்தையும் வாங்கி வெச்சிக்கிட்டு, அட்டைகள போட ஆரம்பிச்சாரு! அட்ட போடற மும்மரத்துல... ப்ளேட பக்கத்துல தரைல வெச்சிட்டாரு...



தன் அப்பா அந்த ப்ளேடை வெச்சி அட்டைய கிழிக்கரத பாத்துக்கிட்டே அவரோட மூத்த மகன்(ஒரு இரெண்டு வயசு இருக்கும் ங்க) திடீர்னு பக்கத்துல வந்து அத எடுத்து பாத்திருக்கான்,... அட்டைய குடுக்க சொல்லி கேட்டிருக்கான்.. ஆனா, அந்த பொண்ணு அட்டைய எல்லாம் எடுத்து இன்னொரு பக்கமா வெச்சிட்டு தர முடியாதுன்னு சொல்லி இருக்கா... இந்த (வாலு) கொழந்த உடனே ப்ளேட வெச்சி அவனோட கைய அருத்துகிற்றுக்கான்!! ரத்தம் ஆறா ஓடவே வலில அழ ஆரம்பிச்சிட்டான், அத பாத்துட்டு அவனோட அம்மாவும் அப்பாவும் பதறி அடிச்சிக்கிட்டு போயி மருத்துவ மனைக்கு கொழந்தைய தூக்கிக்கிட்டு ஓடி, கொழந்த திரும்பவும் சிரிக்கரதுக்குள்ள ஒரு வழியா ஆயிட்டாங்க ரெண்டு பேரும்!!




எதோ... காயம் அவங்க அம்மா அப்பாவுக்கு பட்ட மாறி அவங்க தான் ஓய்வெடுத்தாங்க வீட்டுக்கு வந்து! அந்தச் சுட்டிப் பய தாவி குதிச்சி விளையாட போயிட்டான்!!








இந்தக் குட்டிக் கண்ணன் பிறந்தது கிருஷ்ணாஷ்டமி அன்னிக்கி தான்.. குட்டிக் கண்ணன் தான் அவங்களுக்கு பொறந்திருக்கான் னு அவனுக்கு அவங்க அப்பா 'கோகுலகிருஷ்ணன்' னு பேர் வெச்சாரு! பேர் வெச்சது நாலயா, இல்ல அந்த நாள்ல பொறந்தது நாலயானு தெரியல... அந்தப் பேருக்குரிய வேலைகளைத் தான் அந்தப் பய்யன் செய்ய ஆரம்பிச்சான்!!




................. தொடரும்!! ;)





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Wednesday, August 12, 2009

என்னத்தங்க தலைப்பு வெக்கறது இதுக்கு?


இந்த இடுகையை "குட் பிளாக்ஸ்" பகுதியில் வெளியிட்ட இளமை விகடனுக்கு என் நன்றிகள்...!!



இன்னும் இரெண்டு நாள் தான் இருக்கு சுதந்திர தினத்துக்கு! ஆமாம், நமக்கு ஆங்கிலேயர்கள் கிட்டேருந்து சுதந்திரம் கெடச்சி வருஷக் கணக்குல ஆயிடுச்சி தான்... ஆனா, சுதந்திரம் கெடச்சும் நாம யாரும் அத சரிவர உபயோகிக்க தெரியாம, திரும்பவும் அவனுங்க கிட்ட தான் அடிமையா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்! நம்ம நாட்ட விட்டுட்டு வெளி நாட்டுக்கு வந்து நெறைய சம்பாதிக்கரோமுங்கர பேர்ல, அவங்களுக்கு ஒழச்சி கொட்டி மத்தவன் நாட்டுக்கு சேவை செய்யறோம்... காசுக்காக அண்டை நாட்டுக் காரனுக்கு ஒழச்சி, அவன் நாட்ட முன்னேத்தரதுக்குப் பேர் அடிமைத் தனம் தானே?

கொஞ்ச நாளா யாரப் பாத்தாலும் இது 'recession time' .... 'வேல போயிடுச்சி', 'அலுவலகத்துல வேல கம்மி ஆயிடுச்சி ' இப்டித் தான் சொல்லிக்கிட்டு திரியறாங்க... இதுல ஒரு விஷயத்த நாம யோசிக்கனும்ங்க... நாம நம்ம நாட்ட விட்டுட்டு மத்தவன் கிட்ட கை ஏந்திக்கிற்றுக்கோம்... இது ஒரு வகையில பிச்ச எடுக்கறது தான் ங்க... :( இன்னும் சொல்லப் போனா அத விட கேவலம்!

(யார் மனசையும்(வெளி நாட்ல வசிக்கரவங்களையும், அங்க வேல செய்யறவங்களையும்)புண்படுத்தணும்னு நான் இதச் சொல்லல.. ஆனா, வெளி நாட்ல வாழ்ந்துக்கிட்டு நம்ம நாட்டுக்காக ஏதும் செய்ய முடியாத சூழ்நிலையில்(தனிப்பட்ட காரணங்களால்) வாழும் இந்தியர்களில் ஒருவளான என்னுடைய ஆதங்கம் தான் இது)

அமெரிக்க குடியரசுத் தலைவர் 'ஒபாமா' ஒரு பேட்டில(meeting ல) அவங்க நாட்ட முன்னேத்தரதுக்கான வழிகள பத்தி பேசும் போது... "தம் நாட்டிலும்(அமெரிக்கா வில்) இந்தியா மற்றும் சீனா விற்கு இணையான கல்வியை வழங்க அதற்கு தகுந்த கல்விக் குழுவை (educational trusts) அமைக்கப் போவதாகச் சொன்னார்".

எல்லா வகையிலையும் சிறந்து விளங்கர அமெரிக்க நாடே நம் நாட்டோடக் கல்வியையும், இளைஞர்களையும் அவங்களோட திறமையையும் பாத்து வியப்படையுது... ஆனா நாம ஜாதி மத வெறி பிடிச்சு அலையறோம்! அது போதாதுன்னு மொழி வெறி வேற! இப்டி லாம் யோசிக்காம கொஞ்சம் சமயோசித உணர்வு இருக்கறவங்களும்...

"நம்ம நாட்டுக்காக ஒழச்சி நம்ம நாட்ட முன்னேத்தணும்னு நாம நெனச்சாலும் இந்த படுபாவி அரசியல்வாதிங்க விட மாட்டானுங்க ' "னு சுலபமா(!) சொல்லிட்டு நம்ம பொழைக்கற வழிய பாப்போம் னு வெளி நாட்டுக்கு போயிடறாங்க...

வேற்றுமையில் ஒற்றுமை னு நாம ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டு திரியறோம்! ஆனா, நடக்கறத பாத்தா வயத்தெரிச்சல் தான் மிஞ்சுது.. இலங்கை ல நம்ம தமிழர்கள தாக்கராங்கனும் போது நம்மளால ஆதங்கப் படறத தவிர வேற என்னங்க செய்ய முடிஞ்சிது? பதவி ல இருக்கறவங்க அவங்கவங்க பதவிய தக்க வெச்சிக்க கடைசி நிமிஷத்துல உண்ணா விரதம் அது இது னு சொன்னாங்களே தவிர வேற என்ன செஞ்சாங்க? சரி நம்ம மத்திய அரசு தக்க சமயத்துல ஒரு குரல் கொடுத்திருக்கலாம்ல? அத செஞ்சாங்களா? அவங்களுக்கு தமிழர்கள்னா அவ்ளோ இளக்காரமா? இல்ல, இதே அவங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) ஏற்பட்டிருந்தா சும்மா விட்டிருப்பாங்களா?

நேத்திக்கி, ஒரு பதிவு படிச்சேன்ங்க நானு... அதுல, நம்ம இந்தியாவ 20 அல்லது 30 நாடுகளா பிரிச்சா தான் ஆசியாவ மேம்படுத்த முடியும்னு சீனா சொல்லுதாம்! இந்த கொடுமைய எங்க போயி சொல்றது? வேற்றுமையில் ஒற்றுமை னு நாம சொல்றது அவங்களுக்கு 'atrocious' அஹ படுதாம்! இந்தியாவ பல நாடுகளா(ஐரோப்பா நாடுகள் மாறி) பிரிச்சாத் தான் தெற்கு ஆசியாவை மேம்படுத்த முடியுமாம்(?)! ஜாதிகளையும் பிரிவுகளையும் அப்போ தான் ஒழிக்க முடியுமாம்! இதுக்கு, பாகிஸ்தான், புடான், நேபால் போன்ற தோழமை(!) நாடுகளோட ஒத்துழைப்ப பெறப்போகுதாம் சீனா! இல்ல... தெரியாம தான் கேக்கறேன்.. அதென்ன ங்க நம்மள பிரிக்கறதுல அவனுங்களுக்கு அவ்ளோ ஆர்வம்? அது சரி... நமக்கு நாமலே அடிச்சிக்கிட்டு இருந்தா மத்தவனுங்க மூக்க நொழைக்காமலா இருப்பானுங்க?! இது... "இரெண்டு பூனை சாப்பாட்ட பிரிச்சி சாப்ட அடிச்சிக்கும் போது ஒரு கொரங்கு வந்து எல்லாத்தையும் அது தின்னுட்டு போன கதையாத் தான் முடியப் போவுது..."




தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Tuesday, August 11, 2009

ஆத்தாடி...!! எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...!!


அப்போ எனக்கு என்ன வயசிருந்திருக்கும்னு கூட எனக்கு நினைவில்ல! ஆனா நான் சின்ன புள்ளயா இருந்தப்ப தான் இந்த சம்பவம் நடந்துச்சி... எங்க அம்மாவும் அப்பாவும் வெளில எங்கயோ போக கிளம்பிக்கிற்றுந்தாங்க... என் பாட்டி(அப்பாவோட அம்மா) எங்க அத்த வீட்டுக்கு போயிருந்தாங்க, ஆனா எங்க பாட்டியோட அம்மா எங்க கூட இருந்தாங்க... அவங்க இருக்காங்கங்கர தைரியத்துல என்னையும், அண்ணாவையும் வீட்லயே விட்டுட்டு அம்மாவும் அப்பாவும் வெளில கிளம்பி போயிட்டாங்க(எங்க போனாங்கன்னு கூட எனக்கு சரியா நினைவில்ல)!...

பெரிய ஆயா(பாட்டி யோட அம்மாவ நாங்க அப்டித் தான் கூப்டுவோம்!) தொலைக்காட்சிப் பெட்டில எதோ பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நான், என் அண்ணா அப்பரம் என் வீதியில் வசிக்கும் என் தோழி மூவரும் விளையாடிக் கொண்டிருந்தோம்... கொஞ்ச நேரத்துல எங்க பெரிய ஆயா வந்து என் அண்ணாவ கூப்டாங்க..

" 'கோகு' ( என் அண்ணா பேர் கோகுலகிருஷ்ணன்) இங்க வாடா கண்ணா... யாரோ ஒருத்தர் வந்திருக்கார் பாரு.. உங்க அப்பா தான் அனுப்பினாராம்... வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கறதுக்காக பட்டி வாங்கிக்கிட்டு வரச்சொன்னாராம், நம்ம 'பித்தள அண்டா'வ எடுத்துக்கிட்டு போயி வாங்கிக்டு வந்து வீட்ல வெக்க சொன்னாராம் அப்பா வரதுக்குள்ள..." னு எங்க பெரிய ஆயா சொல்ல நானும் அண்ணாவும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு நின்னோம்... அப்பரம் அண்ணா- வந்திருக்கிற ஆள் கிட்ட "எங்க அப்பா எங்க கிட்ட ஏதும் சொல்லலியே! எப்போ சொன்னாங்க உங்க கிட்ட?"னு கேட்டான்...

அதுக்கு அந்த ஆளு இதோ இப்போ தான் வழில பாத்தேன் அப்பாவ.. உன்னையும் கூட்டிட்டு போகச்சொன்னாரு.. னு சொன்னார்.. அதோட, வாப்பா போகலாம் னு சொல்லிட்டு எங்க வீட்டு குளியலறையில இருந்த பித்தள அண்டாவ (நல்லா பெரிய, கனமான அண்டா ங்க அது, நல்ல வெல போகும்) எடுத்துக்கிட்டு போயி அவர் வந்த மிதிவண்டில உக்காந்துக் கிட்டு அண்ணாவ தூக்கி முன்னாடி உக்கார வெச்சிக்கிட்டு இதோ வந்துடறோம் னு சொல்லிட்டு போனார்...

ஐயோ... அண்ணாவ வேற கூட்டிட்டு போயிட்டாரே இந்த ஆளு... நாம எப்டி விளையாடறதுன்னு நானும் என் தோழியும் புலம்பிக்கிட்டே உள்ள போயி நாங்க மட்டும் விளையாட ஆரம்பிச்சோம்.. ஆனா... அண்ணாவும் அந்த ஆளும் போயி ரொம்ப நேரம் ஆச்சு, ரெண்டு பேரும் திரும்பி வரவே இல்ல.. எனக்கென்னமோ பயமா இருந்துச்சி... என் தோழி கிட்ட அதப் பத்தி சொல்ல.. அவளும் என்ன di செய்கிறது, சரி வா.. வெளில போயி பாக்கலாம்னு சொன்னா.. நாங்க ரெண்டு பெரும் வெளில வாசல் கிட்ட போயி நின்னுக்கிட்டு போற வரவங்களலாம் பாத்துக் கிற்றுந்தோம்... ஆனா அண்ணா வரல... :(

எனக்கு ஒன்னும் புரியல, என்ன பண்றதுன்னும் தெரியல! பெரிய ஆயா கிட்ட போயி இதப் பத்தி கேக்கலாம்னு பாத்தா "அவங்க பயத்துல அழவே ஆரம்பிச்சிட்டாங்க... ஐயோ, புள்ளைய தனியா அனுப்பிட்டனே நானு! இப்போ உங்க அப்பா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்னு தெரியலியே னு பாடறாங்க!"

ரெண்டு மணி நேரம் கழிச்சி, அண்ணா மட்டும் வந்தான்... 'அண்ணா' னு ஓடிப் போயி வந்துட்டியா? எங்க போயிட்ட நீ? பயந்தே போயிட்டோம் தெரியுமா னு நான் அழ ஆரம்பிக்க... அண்ணா சொன்னான்...

"இல்ல டா குட்டி... பிள்ளையார் கோவில் வர தான் டா போனோம்... அங்க போனதும் அந்த ஆளு என்ன கீழ எறக்கி விட்டுட்டு, நீ இங்கயே இருப்பா.. நான் மட்டும் போயி சுண்ணாம்பு பட்டி வாங்கிக்கிட்டு வந்துடறேன் னு சொல்லிட்டு போயிட்டாரு... போனவர் வரவே இல்ல.. நான் பாத்துப் பாத்து வீட்டுக்கு வந்துட்டேன்"

அப்பாவும், அம்மாவும் வெளில போறதையும் வீட்ல சின்ன புள்ளைங்களும், ஒரு வயசான பாட்டியும் தான் இருக்காங்க ங்கறதையும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு தான் அந்த ஆளு எங்க வீட்டுக்கு வந்து தெரிஞ்சவன மாறி ஆயா கிட்ட எங்க அப்பா பேர சொல்லி எங்கள ஏமாத்திட்டு அண்டாவ திருடிக்கிட்டு போயிற்றுக்கான்...

ஆத்தாடி...!! எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...!!

இதெல்லாம் நடந்து முடியரதுக்கும், அம்மா அப்பா வீட்டுக்கு வரதுக்கும் சரியா இருந்துச்சி... அப்பா கிட்ட நடந்தத சொன்னதும் பயந்து போயிட்டாங்க பாவம்.. ஆனா 'அண்ணாவுக்கு நல்லா திட்டும் விழுந்துச்சி'... யாராச்சும் வந்து என் பேர சொன்னா உடனே போயிடுவியா? யார் என்னனு விசாரிக்கரதில்லியா? இப்டிலாம் கேட்டு திட்டினாங்க... எனக்கு அப்பா மேல கோவம் தான் வந்துச்சி அப்போ... அண்ணாவ போக சொன்னது பெரிய ஆயா தான? அப்போ அவங்கள தான திட்டனும், பாவம் அண்ணாவ மட்டும் திட்டறாங்க இந்த அப்பானு நெனச்சிக்கிட்டேன்... (இப்போ தான புரியுது அவங்கள திட்ட முடியாம தான் அண்ணாவ திட்டி இருப்பாங்க அப்பானு!)

எது எப்டியோங்க... அண்டா போனது போயிட்டு போகுது... அந்த அண்டா இல்லன்னா வேற வாங்க முடியும் காசிருந்தா! அந்த அண்டாவ திருடிக்கிட்டு போனவன் எங்க அண்ணாவையும் கூட கூட்டிட்டு போயி யார்டயாவது வித்துற்றுந்தா... என்ன ஆகறது?? அய்யய்யோ... யோசிக்கரதுக்கே பயமாவுல இருக்கு... :(






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Monday, August 10, 2009

நீங்க மட்டும் தான் அழகா துணி உடுத்தனுமா என்ன??


நீங்க மட்டும் அழகழகா துணி போட்டுக்கறீங்க... எங்களுக்கு மட்டும் உங்களுக்கு ஒதவாத துணிய போடறீங்க?!


இங்க பாருங்க... எங்களுக்கும் வித விதமா துணிய தச்சி விக்கறாங்க...
இனிமே, எங்களுக்கும் அழகான துணி வாங்கிக் கொடுத்தாத் தான் உங்கள சொமந்துக்கிட்டு வெளில வருவோம்! சொல்லிட்டோம் ஆமா...!!





































தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

பன்றிக்காய்ச்சல் கிருமியும்...அது பரவாமல் இருக்க பின்பற்றவேண்டிய வழிகளும்...


"வெளி நாடுகள்ல சுகாதாரமா இருப்பாங்க, நாமளும் அங்க போனா அப்டி இருக்க முடியும்...!!" ஒரு காலத்துல இப்டி தான் நெனச்சிற்றுந்தோம் எல்லாரும்... நம்ம இந்தியர்கள் நாலும் இந்தியான்னாலும் அவ்ளோ கேவலம் அவனுங்களுக்கு(வெள்ளக் காரனுங்களுக்கு)..

என்னமோ அவனுங்க எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கற மாறியும், நாமல்லாம் எதோ குப்ப மேட்டுல இருக்கற மாறியும் தான் பாப்பானுங்க நம்மள?! என்னத்த சுகாதாரமுங்க இருக்கு அங்க?? சும்மா சொல்லிக்கவேண்டியது தான்... இன்னும் சொல்லப் போனா மேலை நாடுகள்லேருந்து தான் எல்லா விதமான புதுப் புது நோயும் வருது நம்ம ஊருக்கு! :( "எய்ட்ஸ்"ங்கற கொடுமை இவனுங்க கிட்டேருந்து தான் நமக்கு தொத்திக்கிச்சி... அது போதாதுன்னு இப்ப புதுசா "பன்றிக்காய்ச்சல்"னு ஒரு கொடுமை வந்து எல்லாரையும் கலங்க வெச்சிக்கிற்றுக்கு... எய்ட்ஸ் கிருமி (HIV) பரவாம இருக்க நாம கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துட்டா மட்டும் போதும்...

ஆனா... இப்போ வந்திருக்கற பன்றிக் காய்ச்சல் கிருமி(H1N1) காத்துல பரவக்கூடிய ஒன்னு! இதக் கட்டுப்படுத்த முடியாம, அந்தக் கிருமி தாக்கியத கண்டுபிடிக்கறதுக்கு முன்னாலேயே இறந்து போனவங்களோட(போறவங்களோட) எண்ணிக்க எரிக்கிட்டேத் தான் போகுது... அப்பாவி மக்கள் எத்தன பேர் இதனால அவதிப் படறாங்கன்னு நினைக்கரச்சே கதி கலங்குது...

பன்றிக்காய்ச்சல் "FLU" என்னும் வகையைச் சேர்ந்தது... இவ்வகையான நோய்க்கு தடுப்பு ஊசி இருக்கு.. ஆனா, பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தற கிருமிக்கு(H1N1) இவ்வூசியைப் போட்டாலும் எவ்விதப் பயனுமில்லை... இன்னும் H1N1 கிருமிக்கு தடுப்பு ஊசி தயாரிக்கப்படலைங்கறது ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம்...
இந்தப் பன்றிக் காய்ச்சல் வராம தடுக்க தடுப்ப ஊசி(vaccine) ஏதும் இன்னும் இல்லைன்னாலும், இந்தக் காய்ச்சல் பரவாம தடுக்கறதுக்கு ஒரு சில வழிகள் இருக்கு...

அவை பின்வருமாறு...

1. இடைவெளி:

உடல் நிலை சரியில்லாதவர்களிடத்தில்( இருமல், தும்மல், காய்ச்சல் ) சற்று ஒதுங்கி உக்காருங்கள்.

2. ஓய்வெடுங்க:

உங்களுக்கு இருமலோ, தும்மலோ, காய்ச்சலோ இருந்தா வெளில(பள்ளி, கல்லூரி,அலுவலகம்,...) போகாம வீட்லயே இருந்திடுங்க. இதன் மூலம், ஒருவேளை உங்களை இந்தக் கிருமி தாக்கி இருந்தா அது மத்தவங்களுக்கு பரவாம நீங்க தடுக்க முடியும்!

3. மறைக்கவும்:

உங்களுக்கு தும்மலோ, இருமலோ வந்தா ஒரு கைத்துணியை(handkerchief) வைத்தோ அல்லது பயன்படுத்திய பின் தூக்கி எரியக்கூடிய காகிதத்தையோ (tissue paper) வைத்து உங்கள் வாயை மறையுங்கள்...

4. கை கழுவுங்கள்:

அடிக்கடி உங்கள் கையை கழுவுங்கள்... இதன் மூலம், கிருமி தாக்குதலை ஓரளவு கட்டுப் படுத்தலாம்... அடிக்கடி கை கழுவ இயலாதவர்கள் "alcohol based gel" (தமிழாக்கம் தெரியவில்லை மன்னிக்கவும் ) பயன்படுத்தவும்...

5. தொடாதீர்கள்:

இந்தக் கிருமி ஒரு மேஜையின் மீதோ அல்லது வேறெதும் பொருளின் மீதோ சில நொடிகள் உயிருடன் இருக்க வல்லது... எனவே, தேவையில்லாமல் உங்கள் கண், மூக்கு மற்றும் வாயினைத் தொடாதீர்கள்! ஏனென்றால் நீங்கள் உங்களையும் அறியாமல் அந்தக் கிருமியைத் தொட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது!

6. முக மூடி:

தேவைஎனில் உங்கள் முகத்தை (கண்களைத் தவிர்த்து) ஒரு முக மூடியை(mask) அணிந்து கொண்டு செல்லுங்கள்!

குறிப்பு:

இதெல்லாம் நான் கேள்விப்பட்ட, எனக்குத் தெரிஞ்ச வழிகள் (preventive measures)... வேற ஏதாவது விட்டுப் போயிருந்தா தயகூர்ந்து சொல்லுங்க!

நன்றி!!






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Friday, August 7, 2009

அட! இப்டியும் சமாளிக்கலாமா இவங்கள?


நாம ஏதாவது ஒரு முக்கியமான வேலைய செஞ்சிகிற்றுப்போம்ங்க... அந்த நேரம் பாத்து தான் நம்மளோட தொலைப்பேசியோ(தொல்லைப்பேசியோ) இல்லன்னா நம்ம செல்பேசியோ அழைப்பு மணி விடுக்கும்! யாரோ தெரியலியே... ஏதாவது முக்கியமான அழைப்பா இருக்கப் போகுதுன்னு நாமளும் செய்யற வேலையக் கூட விட்டுட்டு அரக்க பறக்க ஓடிப் போயி அத எடுத்துப் பேசுவோம்!

அந்தப் பக்கத்துலேருந்து ஒரு பொம்பள புள்ள இனிக்க இனிக்க பேசும்...
"சார்/மேடம் நாங்க '....' வங்கிலேருந்து பேசறோம், வாழ்த்துக்கள்! எங்களோட சுயக் கடன் (personal loan) வழங்கும் திட்டத்துல கடன் பெற நீங்க தகுதியானவர்... உங்களுக்கு நாங்க '....' லட்சம் கடனா கொடுக்கறோம்... வாங்கிக்கங்க! மத்த வங்கிகள விட எங்க வங்கியில வட்டி ரொம்ப கம்மி தான்... யோசிக்காதீங்க," அது இதுன்னு பேசிக்கிட்டே போவாங்க!!




நாம வேணாம்னு சொன்னாலும் விடாம நச்சரிப்பாங்க... (அதென்னமோ... நம்மள கடன்காரனுங்களா ஆக்குறதுக்குன்னே ஒரு கும்பல் இத மாறி அலையறாங்க... என்ன பண்றது?) அட... வேணாம்மா! வேணும்னா நானே சொல்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டோம்னு வையுங்க... அவ்ளோ தான், நாம தொலைஞ்சோம்... உடனே...
"சார்/மேடம் உங்க முகவரிய சொல்லுங்க நாங்க எங்களோட ஊழியர அனுப்பி வெக்கறோம்... அவர் உங்களுக்கு எங்க திட்டத்தைப் பத்தி விளக்கமா சொல்லுவார்!" னு சொல்லுவாங்க!

என்ன திட்டம்ங்க இவங்களுது?? வாங்கற சம்பளம் கம்மியா இருந்தாலும் இருக்கறத வெச்சிக்கிட்டு நிம்மதியா வாழுரவங்கள ஆச காட்டி கடன் வாங்க வெச்சி அப்புறம் அதுக்கு வட்டிய வேற போட்டு... (ஒரு கால கட்டத்துல அவங்க வாங்கன கடன விட அதுக்கு கட்ட வேண்டிய வட்டிய பெருசா பூதம் மாதிரி வளத்தி விட்டுட்டு ) மாச சம்பளத்த மொத்தமா வட்டிக்கே குடுக்கற நெலமைக்கு கொண்டு வர்றதா?

சமீபத்துல எங்க அம்மாவுக்கும் இத மாறி அழைப்புங்க நெறைய வந்திருக்கு! அவங்களும் கொஞ்ச நாள் 'வேணாம்ங்க, வேணாம்மா' இப்டிலாம் சொல்லி பாத்திருக்காங்க... ஆனா இந்த ப்ரெச்சனை ஒயர மாறி தெரியல... ஒரு நாள் காலைல எங்க அப்பா அலுவலகத்துக்கு கிளம்பறதுக்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்கும் போது எங்க அம்மா அப்பாவுக்கு மத்தியான சாப்பாடு கட்றதுக்கு எதோ அவசர அவசரமா சமச்சிக்கிற்றுந்திருக்காங்க... அந்த நேரம் பாத்து அவங்களோட செல்பேசி அழைப்பு வரவே இவங்களும் போயி எடுத்துப் பேசி இருக்காங்க... (எங்க அண்ணா வோட அழைப்புக் காக காத்துக் கிட்டிருந்திருக்காங்க பாவம்!)

அந்த நேரம் பாத்து யாரோ ஒரு பொண்ணு நான் முன்னாடி சொன்ன மாறியே 'சுய கடன்' தரோம் வாங்கிக்கோங்க னு சொல்லி இருக்காங்க... அத கெட்ட அம்மாவுக்கு எரிச்சல் வரவே...

"சரிம்மா தாங்க வாங்கிக்கறேன் ஆனா திருப்பி லாம் கேக்காதீங்க, நான் கட்ட மாட்டேன் னு சொல்லி இருக்காங்க!!"

அந்த பொண்ணு உடனே...
"என்ன மேடம்? ஏன் அப்டி சொல்றீங்க?னு கேட்க..."

எங்க அம்மா...
"ஆமாம்மா, நான் கடன் வேணாம் னு சொன்னா நீ கேக்க மாட்டேங்கற, நான் வேலைக்கு லாம் போகல, வீட்ல தான் இருக்கேன், என் கிட்ட எது காசு? நான் எப்டி உனக்கு திருப்பி கற்றது? எதோ நீ ஆசப்படுறியே னு தான் நீ தர்ற பணத்த வாங்கிக்கறேன்னு சொல்றேன் னு சொல்லி இருக்காங்க!!"

கடுப்பான அந்தப் பொண்ணு உடனே செல்பேசி இணைப்ப துண்டிச்சிட்ட்ருக்காங்க!:) அப்புறமா அழைப்பு ஏதும் வரலியாம் அம்மாவுக்கு...

அட... இப்டியும் ஒரு வழி இருக்கா இவங்கள சமாளிக்க னு நான் நெனச்சிக்கிட்டேன்?! :) ஆனா, அந்த பொண்ண நெனச்சாத் தான் ஐயோ பாவம்னு இருந்துச்சி!!





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Thursday, August 6, 2009

குளியலறையால் வந்த தலைவலி...!!


நான் பொறந்து வளந்ததெல்லாம் சென்னை ங்க...!! வாக்கப்பட்டதுக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்தேன்... சென்னை வெயிலைப் பத்திதான் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குமே?! அதனாலேயே பெங்களூர் குளிரு எனக்கு பழக கொஞ்ச நாள் ஆச்சு... அதுக்குள்ளஎங்க வீட்டுக்காரருக்கு ஜெர்மனிக்கு கிளம்பும் படி அவரோட அலுவலகத்துல உத்தரவு வரவே நானும் அவரோட போன வருஷம் நவம்பர் மாசம் ஜெர்மனிக்கு வந்தேனுங்க!! நவம்பர் மாசம் நம்ம ஊர்லையே குளிருமே?!! இங்கத்து குளிர சொல்லவா வேணும்?? எப்படியோ.... கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திக்கிட்டு அறையில இருக்கற room heater அஹ போட்டுக்கிட்டு உக்காந்துக்கிற்றுந்தேன்...




குளிர எப்படியோ சமாளிக்க கத்துக்கிட்டாச்சு.. (போகப் போக இந்த குளிர் பழகிப் போயி சென்னைக்கு வந்தப்ப வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது வேற கத!!)




நம்ம வீடுகள்லலாம் குளியலறைங்க... "நானும் இருக்கேன்ங்க உங்க வீட்டுலங்கர மாறி தான் இருக்கும் எதோ ஒரு மூலையில", ஒருத்தங்க போயி நின்னா அந்த அறையே நெரம்பிடர மாறி தான் கட்டுவோம்... இங்க வந்து பாத்தா படுக்கை அறைய விட குளியலறை தானுங்க பெருசா இருக்கு!




அட... அது இருக்கட்டும்ங்க... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் குளியலறைக்கு கதவு மட்டும் தானுங்க இருக்கும், காத்தோட்டத்துக்காக ஒரு ஓரத்துல ஒட்டன மாறி ஜாலி வெச்சிருப்பாங்க...!! ஆனா, இங்க(ஜெர்மனி ல) என்னடான்னா... ஒரு ஜன்னலே வெச்சிருக்காங்க..!! அதுவும் கண்ணாடில... நடுவுல ஒரு ஜாலியுமில்ல, க்ரில்லுமில்ல! இங்க வந்த புதுசுல எனக்கு ஒரு நிமிஷம் 'ஆத்தாடி, இங்கிட்டு நின்னு குளிக்கறது வெளிலேருந்து பாக்கலாம் போலிருக்கே..' னு நெனச்சி என் கொலையே நடுங்கிடுச்சில?! அப்பரம் பாத்தா, அந்த ஜன்னல்ல (கண்ணாடில) எதோ ஒட்டி வெச்சிருக்காங்க... sticker ஆம்! வெளில லாம் ஏதும் தெரியாதாம்... :) சரி தான்...




ஜன்னல் கத இப்டி ஆனாலும், சினிமாவுலயும்-விளம்பரத்துலையும் அழகா




'பாத் டப்' ல குளிக்கற மாறி காட்டுவானே.. அதே மாறி ஒன்னு இருந்துச்சிங்க.. ஆஹா.... அதப் பாத்த உடனே அவ்ளோ சந்தோசம் என் மனசுல...(!) யம்மாடி!! அத உபயோகிச்சப்ப்ரம் ல அத சுத்தம் பண்றது எவ்ளோ கொடுமைனு தெரிஞ்சிது?!!


அதோட ஏறக்கட்டியாச்சுப்பா அந்த தப்ப:(




சரி... குளியலரைலையே இன்னொரு பக்கமா 'cubicle'



வெச்சிருக்காங்களே... நமக்கு அது தான் சரிப்படும் னு நெனச்சி அது கிட்ட போனா அதுல என்னடான்னா நாம குளிச்சதுக்கப்ரமா அந்த கண்ணாடிகளையும் குளிர்ந்த தண்ணியில குளிப்பாட்டிட்டு தான் வரணுமாம்! இல்லன்னா பளபளன்னு இருக்கற அது உப்பு பூத்து போயி 'ஈ' னு பல்ல காட்டுது! இந்த கொடுமைய எங்க போயி சொல்றது?




அட இருங்கப்பா...!! இன்னொரு கொடுமையுமிருக்குங்க... அதையும் சொல்றேன் கேளுங்க... நம்ம குளியலறைய தெனமும் தண்ணி ஊத்தி கழுவி தள்ளி சுத்தம் பண்ணுவோம்ல? ஆனா இங்க என்னடான்னா.. ஒரு சொட்டு தண்ணி தரையில விழப்படாதாம்! அப்டி தவறி விழுந்துடுச்சின்னா உடனே அத சுத்தம் பண்ணிடனுமாம்! இல்லன்னா அது தரையில ஊறி ஊறி கீழ் வீட்டு செவுத்துல(நாங்க இருக்கறது இரெண்டாவது மாடியில) ஒழுகுமாம்..!! யப்பா சாமி... இது என்னடா கொடும??





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

கோஸ் புலாவ்


தேவையானவை:
பட்டை- 1/2 இன்ச்அளவு
லவங்கம்-3
எண்ணெய்- 5 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கோஸ்- 1/2 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய் - 2
பட்டாணி- 1/4 கப்
கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு
தேங்காய் பால்-1 கப்
பாசுமதி அரிசி- 2 கப்
தண்ணீர்- 3 கப்

செய்முறை:
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை,லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கறிவேப்பிலை சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • கோசை பொடியாக நறுக்கிக் கொண்டு, வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
  • இத்துடன் பட்டாணியையும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.
  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் குக்கரில் வைத்து, அத்துடன் வாணலியில் வதக்கியவற்றை சேர்த்து, 1 கப் தேங்காய்ப் பாலும் 3 கப் தண்ணீரும் சேர்த்துக் கிளறி விட்டு குக்கரை மூடி விடவும்.
  • ஒரு விசில் வரும் வரை வைத்து, இறக்கிய பின் அத்துடன் கொத்துமல்லித் தழைகளை சேர்த்து லேசாகக் கிளறி விடவும்.
  • இதற்கு, தக்காளி தயிர் பச்சடி அருமையாக இருக்கும்!

( இது என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த புலாவ். செய்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்!)

குறிப்பு:

தேங்காய்ப் பால் செய்முறை-

  1. சிறு துண்டங்களாக நறுக்கிய தேங்காயை மிக்சியில் துருவிக் கொண்டு, பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
  2. அரைத்த விழுதைக் கையில் பிழிந்து சாறு எடுக்கவும் , இதனை முதல் தேங்காய்ப் பால் என்பார்கள்.
  3. இன்னொரு முறை, பிழிந்து எடுத்த திப்பியுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் இரண்டாம் தேங்காய்ப் பால் கிடைக்கும்,






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Wednesday, August 5, 2009

என் அண்ணன்...!!


இன்று ரக்க்ஷா பந்தன்... நம் நாட்டில் ஒவ்வொரு தங்கையும், (அக்காவும் தான்) தன் அண்ணனுக்காக (தம்பிக்கும் தான்) நோன்பு இருந்து அவன் நன்றாக நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் நாள்!! இது வட இந்திய கலாச்சாரம் அல்லது பண்டிகை என்று சிலர் நினைக்கலாம்... உண்மை தான், நாம் அப்படிப் பார்த்தால் தீபாவளி கூட தமிழர் பண்டிகை இல்லையே!! தமிழர் பண்டிகை என்று பெயர் பெற்றது பொங்கல் மட்டுமே!!

இந்த இனிய நாளில் நானும் என் அண்ணனுக்கு ஆண்டு தோறும் ராக்கி கட்டி விட்டு அவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுவேன்... இது எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து செய்து வருகிறேன்... ஆனால் இந்த வருடம் என்னால் என் அண்ணனை நேரில் கூட பார்க்க முடியவில்லை (தற்சமயம் வெவ்வேறு நாட்டில் வசித்து வருகிறோமென்பதால் !)... என்னதான் இப்பொழுது மின்னஞ்சல், தொலைப்பேசி என்று அனைத்தும் நாம் உபயோகப்படுத்தினாலும் நேரில் பார்த்துக் கொள்ளும் பேசிக் கொள்ளும் தருணங்களின் நெகிழ்ச்சி இவற்றில் வருவதில்லையே?!

என்னடா இது... பெரிய பாச மலர் சிவாஜி கணேசன் சாவித்திரி அண்ணன் தங்கை போல் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்கள் தானே? சிறு வயதில் நாங்கள் போடாத சண்டையென்று ஒன்று கிடையவே கிடையாது! ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வோம்... ஆனால் வேறொருவரிடம் இது நாள் வரையில் இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை... இந்த சமயத்தில் எனக்கு "ஸர்ப் எக்ஸ்செல்" இன் ஒரு விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது...

அந்த விளம்பரம் வந்து சில ஆண்டுகள் ஆகின்றது.. ஆனால்.. அதைப் பார்க்கும் போது எனக்கு என் அண்ணன் நினைவு தான் வரும்... அந்த விளம்பரத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்... ஆனால் அது ஹிந்தியில் தான் கிடைத்தது... அதைக் கீழே உள்ள லிங்கில் தொடுத்துள்ளேன்.. பாருங்களேன்...

அருமையா எடுத்திருப்பாங்க இந்த விளம்பரத்த...!! என் அண்ணனை நான் பிரிந்திருக்கும் இந்தத் தருணத்தில் அவனை நினைத்துக் கொண்டிருந்த போது என் மனதில் தோன்றிய வரிகள்...

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த

நம் பெற்றோர்- ஒன்று

சேர்ந்தனர் திருமணத்தில்!

இருவரின் பாசப்பிணைப்பில் பிறந்தவர்கள்

நாம் இருவர்!

நீ முன்னே செல்ல

...உன்னைத் தொடர்ந்தவள் நான்!

வாழ்க்கையில் வரும் மேடு பள்ளங்களை

எதிர்கொண்டு அதனைத்

தனிமனிதனாய்க் கடந்து வந்தவன் நீ...!

அவற்றை நான் எதிர்கொள்ளும்

சூழ்நிலையில் என்னை

வழிநடத்தியவன் நீ!!

என் வாழ்க்கையென்னும் பாதையிலே

சிறு சிறு தோல்வி கண்டு

நான் அஞ்சிடவே...

முயற்சி திருவினையாக்குமென்பதை

உணர்த்தி என்னை வழிநடத்தியவன் நீ!!

உன்னைப் போலவே

என்னைத் தாங்குபவனாக...

ஒருவனைத் தேடிப்பிடித்து- என்

வாழ்க்கைத் துணையாக்கினாய் நீ!!

என் ஒவ்வொரு வெற்றியிலும்

என் உயிர் மூச்சாய் இருந்த நீ...

இக்கணம் என்னைத் தாங்க

இன்னொருவன் வந்துவிட்டாநென

ஓய்வெடுக்க நினைத்துவிட்டாயோ?!!

Sunday, August 2, 2009

வி.ஜி.பி பயணம்...!!


எனக்கு ஒரு 8வயசு இருக்கும்ங்க... வி.ஜி.பி கோல்டன் பீச் க்கு போகனும்ங்கறது அப்போலாம் பெரும்பாடு!! சரியான பேருந்து வசதி கிடையாது.. பேருந்து இருந்தாலும் அதுல ஏறி எடத்த பிடிக்கரதுக்குல போதும்டா சாமின்னு ஆயிடும்...!! அன்று காந்தி ஜெயந்தி வேறு... சொல்லவே வேணாமே நம்ம ஊரு பேருந்துல ஏறுற கூட்டத்த பத்தி?! அந்த கூட்டத்த இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாமுன்னு நாங்களும் கிளம்பினோம் வி.ஜி.பி. க்கு...

காலைல 6மணிக்கு என்ன எழுப்பினாங்க அம்மா... அவ்ளோ காலைலேகுளிச்சி கிளம்பி அழகு தேவதை மாறி இருந்தாங்க எங்க அம்மா... போயி குளிச்சிட்டு வா... வி.ஜி.பி. க்கு போரோம்னாங்க... எனக்கு ஒரே சந்தோஷம்... துள்ளி குதித்து வெளில வந்து பாத்தா அப்பாவும் கிளம்பிற்றுந்தாங்க... நானும் குளிச்சி கிளம்பிட்டேன்.. அப்புறம் போயி அண்ணாவ எழுப்பினேன், அவனும் கிளம்பி வந்துட்டான் சீக்ரமா... பாட்டிக்கு கால் வலிங்கரதனால அவங்க வரல.. ஆக, நாங்க 4பேரும் கிளம்பி பேருந்து நிலையத்துல வந்து நின்னப்ப காலை ஒரு 7மணி இருக்கும்ங்க...

இன்னிக்கி பூரா விளையாடப் போரோம்ங்கரத நெனச்சி நெனச்சி என் மனசுக்குள்ள உற்சாகம், பூரிப்பு எல்லாம் கலந்து ரெக்க கட்டி பரந்துற்றுந்துச்சி.. நாங்களும் நின்னோம் நின்னோம் நின்னுக்கிட்டே இருக்கோம்.. 7.30 ஆகுது 8ஆகுது இன்னும் எங்க வந்து நின்னோமோ அங்கேயே நின்னுக்ற்றுக்கோம்... எந்த பேருந்துல ஏறினா வி.ஜி.பி. க்கு போகமுடியும்னு எனக்கு தெரியாததனால நானு ஒவ்வொரு பேருந்து வந்து நிற்கும் போதும் எங்க அப்பாவியும் பேருந்தையும் மாத்தி மாத்தி பாத்துக்ற்றுந்தேன்... ஒவ்வொரு பேருந்தாக வந்து நிற்கும்... நிறைய பேர் அதுல ஏறுவாங்க... கொஞ்ச நேரம் ஆகும்.. ஓட்டுனர் வந்து பேருந்த நகர்த்திட்டு போவார்... பாத்து பாத்து எனக்கு பொறுமையே போயிடுச்சி... அப்பாவ கேக்கவே கேட்டுட்டேன்.. "அப்பா நாம போக வேண்டிய பேருந்து வருமா வராதான்னு! "

அவர் ஒரு பேருந்த காட்டி இதோ போகுது பாருடா செல்லம்... இந்த பேருந்துல போயிருக்கலாம் நாமன்னு ரொம்ப சர்வ சாதாரணமா சொல்றாரு! என்னப்பா? பின்ன ஏன் நாம அதுல ஏறல னு நான் கேட்க... அவர் சொன்னார்.. "இல்ல மா அதுல ஒரே கூட்டமா இருந்துச்சி... அதான் அடுத்த பேருந்துல போகலாம்னு விட்டுட்டோம்" எனக்கு அப்பா மீது ஒரே கோபம்... கூட்டமா இருந்தா என்னவாம்?! ஏறி போயிற்றுக்கலாம்ள னு மனசுக்குள்ளயே நெனச்சிக்கிட்டேன்... சரி அடுத்த பேருந்து எப்ப வரும் எப்ப வரும்னு பாத்துக்ற்றுந்தா அது வந்துச்சி நல்லா ஆடி அசஞ்சி ஒரு 8.30மணிக்கு...

சரி இதுலயாவது எடம் கெடச்சிதா? அதுவும் இல்ல... நாங்க போறதுக்குள்ள ஒரு கூட்டமே வந்து அடிச்சிக்கராங்கப்பா எடம் பிடிக்கறதுக்கு... ஒருத்தர் பொம்பளைங்க இருக்குறாங்கன்னு கூட பாக்காம அவரோட தோள்பட்டைய நல்லா அகலமா விரிச்சிக்கிட்டு பேருந்து ஏறும் வழியில போயி நின்னுக்கிட்டாறு... நின்னுக்கிட்டு ஒரு ஊரையே உள்ள போக சொல்றாரு(அவரோட சொந்தமாம்)... அவங்கள தவிர யாரையும் உள்ள போக விட மாற்றாருங்க! யாராவது உள்ள நுழைய பாத்தா அவங்கள பிடிச்சி தள்ளிப்புட்டு... "அட.. இரூய்யா... நாங்க குடும்பமா வந்திருக்க்ரோம்ங்கராறு..." (அப்போ மத்தவங்கல்லாம் எப்டி வந்திருக்காங்க?)

சரி... ஒரு வழியத்தான் இவர் அடச்சிட்டாறு... இறங்கும் வழின்னு ஒன்னு இருக்கும்ல?! அந்த பக்கம் போகலாம்னு அங்க பாத்தா அங்க இதுக்கு மேல கூத்தாவுல இருக்கு!! ஒரு பாட்டியம்மா ஒரு பெரிய கூடை, அப்புறம் ஒரு மூட்டை, நெறைய சாமான் சேர்த்து கட்டிய ஒரு அன்னக் கூடை, ஒரு பெட்டின்னு எல்லாத்தையும் வழில வெச்சிட்டு ஒரு கூலி ஆள வெச்சி ஏத்திக்கிற்றுக்கு.... சரி... அதோட சாமான் அது என்னவேனா பண்ணிக்கட்டும்ங்க... வேற யாரையும் பேருந்துல ஏற விடமாட்டது... மீறி ஏறலாம்னு போனவங்கள "கட்டையில போறவனே... கண்ணு தெரியல... சாமானெல்லாம் ஏத்தித்தராட்டி போற, செத்த நேரம் காத்துக்கெடந்தா கொரஞ்சியா போயிடுவ?" அப்டின்னு திட்டியே தீக்குது அந்த பாட்டி!!

சரியாப்போச்சு... இந்த கலாட்டா முடியறதுக்குள்ள பேருந்துல ஜனங்க நிரம்பி வழியறாங்க!! அப்பா... அம்மாவைப் பாத்து அடுத்த வண்டியில போகலாமானு கேக்க... எனக்கு கோபம்... முடியவே முடியாது... இதுல எடம் இல்லாட்டியும் பரவால்ல... இந்த பேருந்துலையே போயிடலாம்னு நான் ஒரே அடம் பிடிக்க அப்பாவும் சரின்னு சொல்லிட்டாரு.... ஒரு வழியா, அந்த பேருந்துல ஏறி நான் அம்மா பக்கத்துலயும், அண்ணா அப்பா பக்கத்துலயுமா நின்னுக்கிட்டோம்...

பேருந்து ஓட்டுனரும் வந்தார்... பேருந்து கொஞ்ச தூரம் போக போக... நிக்க கூட எடம் தராம இடிச்சிக்கிற்றுந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கொரஞ்சிது... ஹப்பாடான்னு கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டுக்கிட்டோம் நானும் அம்மாவும்! இன்னும் கொஞ்ச தூரம் போனப்புறம் பெண்கள் பக்கத்தில் (ladies seat) ரெண்டு எடம் காலியாச்சு... ஆனா... ஒரு எடத்துக்கு பின்னால இன்னொரு எடம்.. அம்மா என்ன உக்கார சொன்னாங்க... நான் நீயும் என் பக்கத்துல உக்காந்தா உக்காந்துக்கறேன் மா... இல்லன்ன உக்கார மாட்டேன் னு நான் சொல்ல அங்கு உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் அம்மா பணிவுடன் கேட்டுக் கொண்டார்... ஆனா, அவங்க ரெண்டு பேருக்குமே ஜன்னலோர இடத்த விட்டு எந்திரிச்சி வர மனசில்லாம முடியாதுநிட்டாங்க...

அம்மாவும்... சரி டா குட்டிமா... அம்மா உன் பின்னாடியே தான உக்காரப் போறேன்... கொஞ்ச தூரத்துல நாம எரங்கிடபோறோம்னு(!) சொல்லி என்ன சமாளிச்சி தனியா உக்கார வெச்சாங்க... சாலை மேடும் பள்ளமுமா இருந்துச்சி... அதனால... பேருந்து ஓட்டுனர் break போட்டு போட்டு ஒட்டிக்ற்றுந்தார்... எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. அம்மா கிட்ட வாந்தி வரமாறி இருக்குமானு நான் சொல்ல... என் பக்கத்துல இருந்தவாங்க கிட்ட அம்மா ஜன்னல் ஓரத்துல இடம் தர சொன்னாங்க... ஆனா... நான் சும்மா சொல்றேன் னு நெனச்சிக்கிட்டு அவங்க... என்னம்மா? என்ன புளுகுற? ஒண்ணா உக்கார எடம் தரலைன்னு இப்டி draamaa போடரியானு கேவலமா கேட்டாங்க... அங்க உக்காந்துக்ற்றுந்த மத்தவங்களும் என் பக்கத்துல உக்காந்துக்ற்றுந்தவங்களுக்கு தான் பரிஞ்சு பேசினாங்க...

அம்மாவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம கொஞ்சம் போருத்துக்கொமா னு என்னையே சொல்லிட்டாங்க... ஆனா... என்னால முடியல... எவ்ளவோ முயற்சி செஞ்சு பாத்தேன்... கடைசியா தாங்க முடியாம எனக்கு முன்னாடி ஒரு பர்தா போட்ட ஆன்டி யோட தலையில வாந்தி எடுத்துட்டேன்... அப்புறம் என் பக்கத்துல உக்காந்திருந்தவங்க எந்திரிச்சி அய்யே... என்னம்மா இது...? நீ சும்மா சொல்றனில்ல நெனச்சிக்கிட்டேன்... நீ இங்க வா னு அம்மாவுக்கு அவங்க எடத்த விட்டுட்டு பின்னாடி (அம்மா உக்காந்திருந்த எடத்துக்கு ) போயிட்டாங்க... அதுக்கப்றம்... அம்மா வந்து நான் வாந்தி எடுத்தவங்க பர்தாவ தண்ணி ஊத்தி(water bottle எடுத்துட்டு வந்திருந்தோம்) தொடச்சி விட்டாங்க... வாந்தி எடுத்தது எனக்கு அசதியாயிடுச்சி... (பாவம் அந்த பர்தா போட்ட ஆன்டி!!)

அப்புறம் கொஞ்ச நேரத்துல அப்பா நாங்க உக்காந்திருந்த எடத்துக்கு வந்து அடுத்த நிறுத்தத்துல(stop) எறங்கனும்னு சொல்லி எந்திரிச்சி வரச் சொல்லிட்டு போனார்... ஐய்யா...!! வி.ஜி.பி. க்கு வந்தாச்சு... இந்த சந்தோஷத்துல என்னோட அசதிஎல்லாம் பறந்தே போயிடுச்சி...


எங்கள மாறி நெறைய பேர் வந்திருந்தாங்க கூட்டம் கூட்டமா... எல்லாரையும் வரவேர்க்கரதுக்குன்னு வி.ஜி.பி. காரவுங்க 'ஒரு மீச கார மாமாவ வாசல் கிட்டயே நிக்க வெச்சிருந்தாங்க!' அவரோட மீசையப் பாத்தா பயமா இருந்துச்சி எனக்கு... ஆனா... ரெண்டு பசங்க அவர் கிட்ட போயி அவர் மீசைய பிடிச்சி இழுத்தாங்க... ஆனா அவர் அசைய கூட இல்ல... அத பாத்துட்டு நான் அப்பாவ ஏன்ப்பா அவர் செல மாறி நிக்கறாருன்னு நான் அப்பாவ கேக்க... அவர் அப்படி நின்னா தான் அவருக்கு சோறு போடுவாங்கன்னு அப்பா சொல்ல...(சம்பளம் அது இதுனு சொன்னா கொழந்தைக்கு புரியாதேன்னு அப்பா அப்டி சொன்னாருன்னு இப்போ நெனச்சிக்கறேன் நானு) ஐயோ பாவம்னு தோனுச்சி எனக்கு...

சரி னு... உள்ள போனோம்... கொஞ்ச நேரம் விளையாடிட்டு...


அப்புறம் தண்ணில ஆட்டம் போட பீச் கு போனோம்... அண்ணாக்கு தண்ணி ல ஆட பயம்! அதனால வர மாட்டேன்னு சொல்லிட்டான்... சரி அம்மாவோட விளையாடலாம்னு பாத்தா அவங்களும் வர மாட்டேன்ன்கறாங்க... என்னனு கேட்டா புடைவை வீணா போயிடும்ங்கறாங்க... பீச் ல விளையாடுவோம்னு தெரிஞ்சிக்கிட்டே எதுக்கு நல்ல புடைவைய கட்டிக்கணும் இந்த அம்மா? வேற ஏதாச்சும் கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்ல னு கோவம் வந்துச்சி எனக்கு! (அம்மாவும் வந்துட்டா அண்ணா தனியா எப்டி நிப்பான்னு தான் அம்மா வந்திருக்க மாட்டாங்கன்னு அன்னிக்கி எனக்கு தோனல!) அப்பா மட்டும் என் கூட வந்தாங்க... அதுவும் என் கைய கேட்டியா பிடிச்சிக்கிட்டு பாதம் மட்டும் நெனையர அளவுக்கு தான் தண்ணில நின்னுற்றுந்தோம்...





அப்பா.. இன்னும் உள்ள போகலாம்னு நான் சொல்ல... அப்பா... இல்ல மா... அது ஆபத்து... அப்டி போகக்கூடாதுன்னு அவர் சொல்ல எனக்கு வெறுப்பா இருந்துச்சி... அங்கிருந்த மத்தவங்க எல்லாரும் தண்ணில அப்டி ஆடிற்றுந்தாங்க... கொஞ்ச பேர் நீச்சல் அடிக்கறாங்க... கொஞ்ச பேர் குதிச்சு குதிச்சு ஆடறாங்க... இன்னும் கொஞ்ச பேர் பந்து போட்டு விளையாடறாங்க... ஆனா என்னால மட்டும் விளையாட முடியல...

அந்த பாதம் நெனையர அளவுக்கு நின்னது கூட கொஞ்ச நேரம் தான்... ரொம்ப நேரம் தண்ணில ஆடினா(!) ஜலதோஷம் பிடிச்சிக்குமாம்... போயி அம்மாவும் அண்ணாவும் உக்காந்துக்ற்றுந்த மணல்ல அவங்க பக்கத்துல உக்காந்துக்டோம்... வீட்லேருந்து கொண்டு வந்திருந்த அம்மா செஞ்ச ஆளூ சப்பாத்தியும் கொஞ்சம் நொறுக்கு தீனியும் அந்தக் கடலை நான் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில்






என் வாய்க்குள் திணிக்கப்பட்டு என் வயிற்றுக்குள் இறங்கியது...

கொஞ்ச நேரம் கழிச்சி... ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்தவர் "நேரம் ஆயிடுச்சி, கெளம்பு கெளம்புன்னு எல்லாரையும் துரத்த ஆரம்பிச்சார்..." இதென்ன? அதுக்குள்ளே நேரம் ஆயிடுச்சானு நான் யோசிக்கரதுக்குள்ள அப்பா அம்மாவையும் எங்களையும் வாங்க வாங்க போகலாம்னு கிளப்பினார்...! அம்மா என்னோட கைய பிடிச்சிக்கிட்டு நடந்தாங்க... பீச்ச விட்டு போக மனசே இல்லாம திரும்பி திரும்பி அந்தக் கடலையே மொறச்சி மொறச்சி பாத்துக்கிட்டே நடந்தேன் நான்...

வி.ஜி.பி.ya விட்டு வெளில வந்துட்டோம் நாங்க... பேருந்து நிலையத்துக்கு போனா அங்க ஏற்க்கனவே கூட்டம் அலை மோதுது... எங்க கூட வி.ஜி.பி. லேருந்து வந்த கூட்டம்... போதா குறைக்கு ஒரு மணிநேரமா எந்த பேருந்தும் வரலையாம்... என்ன பண்றது? சரி... எப்போ வருதோ வரட்டும்னு நின்னுற்றுந்தோம்... அங்கிருந்த கூட்டம் இன்னும் ஏறிக்கிட்டே இருந்துச்சு... ஒரு வழியா பேருந்தும் வந்துச்சி... ஆனா... எங்களுக்கு முன்னாடியே ஒரு கூட்டம் போயி ஏறிட்டாங்க... நிக்கறதுக்கு கூட எடமில்லாம ஜன்னல், கதவு(ஏறும்,இறங்கும் வழி) இதையெல்லாம் வேற பிடிச்சிக்கிட்டு தொங்கராங்கப்பா... அய்யய்யோ... பாக்கறதுக்கே பயம்மால இருந்துச்சி...!!





இவ்ளோவுக்கும் அங்கிருந்த பாதி கூட்டம் தான் ஏற முடிஞ்சிது அந்த பேருந்துல!
எப்டியோ ஆடி அசஞ்சி அந்த பேருந்து கிளம்பிடுச்சி... சரி... அடுத்த பேருந்து எப்ப வரும்டா சாமின்னு காத்துக் கெடந்தோம்... ஒரு வழியா அதுவும் வந்துச்சி... நாங்க அதுல ஏறவும் ஏறிட்டோம்!! ஆனா உக்கார இல்ல நிக்கறதுக்கு கூட எடமில்ல எங்க யாருக்கும்... கொஞ்ச தூரம் போனப்ப்ரம் திடீர்னு 'டாம்'னு சத்தம் கேட்டுச்சி... ஓட்டுனர் கீழ ஏறங்கிப்போயி பாத்துட்டு வந்தாரு... திரும்ப வந்து "bus breakdown" ங்க... எல்லாரும் கீழ எறங்குங்க... வேற ஏதாவது பேருந்து வந்துச்சின்னா அதுல ஏத்தி விடரோம்னு சொல்லி எல்லாரையும் கீழ ஏறக்கிட்டார்...

பேருந்து என்னமோ அந்தப்பக்கம் நெறைய வருது... ஆனா... எங்க பெருந்திலேருந்த கூட்டத்த பாத்துட்டு பயந்துட்டான்களோ என்னவோ யாருமே வண்டிய நிறுத்தல!! ஒரு வழியா கஷ்டப்பட்டு ரெண்டு பேருந்து நின்னுச்சி... ஆனா... அதுல ஏற்க்கனவே கூட்டம் நிரம்பி வழிஞ்சிற்றுந்துச்சி... எங்க கூட வந்த கூட்டத்துலேருந்து முக்கால்வாசி கூட்டம் அந்த 2பேருந்துகல்ளையும் ஏறிப் போயிட்டாங்க... மீதி பேர் அந்த வழில போன லாரில ஏறிப் போயிட்டாங்க...

ஆனா... அப்பா இதேதுளையும் ஏற மாட்டேன்னு சொல்லிட்டார்... கொழந்தைங்க இருக்காங்க.. அவங்கள கூட்டிக்கிட்டு எப்டிங்க இந்த கூட்ட நெரிசல்ல போகமுடியும்னு கத்த ஆரம்பிச்சிட்டார் நாங்க வந்த பேருந்தின் ஓட்டுனரிடம்... "ஏன்னா சார்? கைக்கொழந்தை இருக்கற மாறி பேசறீங்க? இவ்ளோ பெரிய பசங்களா இருக்காங்க!னு" அவர் சொல்ல... அப்பாவுக்கு கோபம் வந்துடுச்சி... என்னங்க இப்டி பேசறீங்க? நாங்க பைசா குடுத்து பயணச்சீட்டு வாங்கி இருக்கோம்... நீங்க நாங்க எறங்க வேண்டிய எடத்துல கூட்டிட்டு போயி எறக்கித்தான் ஆகணும்... இல்லன்னா நான் கன்ஸ்யுமர் கோர்ட் கு போவேன்னு வாதாட... பேருந்து ஓட்டுனர் பயந்து விட்டார்... சரி அப்போ கொஞ்ச நேரம் காத்துக்ற்றுங்க சார்... மெக்கானிக் க கூப்ற்றுக்கோம்... வந்துடுவார்... அப்டின்னு சொல்லிட்டு போயிட்டார்... அப்புறம் அந்த மெக்கானிக் வந்து பேருந்தை சரி செய்து தந்தப்புறம் நாங்க நாலு பேர் மட்டும்(எங்கள இடிக்கவும் ஆளில்ல... ஜன்னல் எடம்னு சண்ட போடவும் ஆளில்ல...!!) அந்த பேருந்துல பயணம் செஞ்சி எங்க ஊரு பேருந்து நிலையத்துக்கு வந்து சேந்தோம்... :-)

Friday, July 31, 2009

காதல் சின்னம்- மூளையா இதயமா?


இதயத்துக்கும் உணர்ச்சிகளுக்கும்(அன்பு, காதல்...) சம்பந்தமே இல்லை தானே?! பிறகு ஏன் அதைக் காதல் சின்னம்னு சொல்றாங்க?

இதப்பத்தி யோசிச்சி நாம நம்ம தலைய பிச்சிக்க்ரத விட... வாங்களேன் இதயத்துக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் விவாதத்தைக் கேட்கலாம்!!

மூளை - வணக்கம் இதயம்! நல்லா இருக்கியா?

இதயம் - அடடே... வாங்க வாங்க... நான் நல்லா இருக்கேன்... நீங்க நல்லா இருக்கீங்களா?

மூளை - எதோ இருக்கேன் போங்க...

இதயம் - அட... என்னாச்சு?? ஏன் இப்டி சலிச்சிக்கறீங்க?

மூளை - சலிச்சிக்காம பின்ன வேற என்ன செய்யச்சொல்லுரீக? இந்த மனுஷ பயலுங்க தான் இப்டி நன்றி கெட்ட தனமா நடந்துக்கரானுங்கன்ன நீயும் அப்டித்தான் இருக்க! நீயாவது அவனுங்களுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லி புரியவெக்கப்படாதா? நீயும் இப்டி அவனுங்களோட சேந்து ஆடுறியே?!

இதயம் - என்ன? மூளையாரே! ஏதேதோ சொல்றீக! என்ன தான் சொல்ல வரீக நீங்க??

மூளை - இப்டி கேளு... நான் சொல்லுறேன்...
... நீ யாரு? உன்னோட வேலை என்ன? இந்த பாவி மனஷனுங்களோட ரத்தத்த சுத்திகரிச்சி அத இவனுங்க உடன்பு முழுக்க ஓட விடறதுக்கு உழைக்கறவன் தானே?

இதயம் - ஆமா... அதுக்கென்ன இப்போ? அதுக்கும் நீங்க சொல்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

மூளை - அட இருப்பா! என்ன பேச விடு... நான் கேக்கறதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு போதும்...

இதயம் - ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சரி கேளுங்க...

மூளை - நீ ரத்தத்த சுத்திகரிச்சி அத மனுஷ பயலுங்க ஒடம்புல ஓட விடுறவன்... சரி.. நான் யாரு? இவனுங்க உணர்ச்சிய செயல்படவெச்சி அத கட்டுப்படுத்தவும், அத வெளிப்படுத்தவும் உதவறவன்... என்ன? நான் சொல்றது சரி தானே?

இதயம் - ஆமாங்க.. சரி தான்..

மூளை - அப்படி இருக்கறப்ப இந்த மனுஷ பயலுங்க என்ன தான காதல் சின்னமா வெச்சிருக்கணும்? படுபாவிங்க.. எதுக்கு உன்ன சின்னமா சொல்றானுங்க?
அவனுங்க தான் அப்டி புத்தி கெட்டுப் போயி அப்டி செஞ்சானுங்கன்னா... உனக்கெங்க போச்சு புத்தி?? நீயாவது சொல்லி இருக்கனுமா வேணாமா?

அத விட்டுப்புட்டு, நீயும் ஈ னு இளிச்சிக்கிட்டே அவனுங்க பின்னாடி போற! உனக்கு வெக்கமா இல்ல?

இதயம் - நான் எடுத்துச் சொல்ல வேண்டியது மனுஷனுங்களுக்கில்லைய்யா... உனக்குத் தான்...

மூளை - என்ன கிண்டலா? என்ன சொல்லணும் எனக்கு? அதுவும் நீ?

இதயம்- உன்ன விட நான் தான் ஒசந்தவன்! அதனாலத் தான் என்ன மதிச்சி அவங்க காதல் சின்னம் னு சொல்றாங்க...



மூளை - எது? நீ என்ன விட ஒசந்தவனா? ஹி ஹி... சர்தான் போயா

இதயம் - நான் சொல்றது உண்மைப்பா... நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது?

மூளை - சரி அதையும் பாத்துர்லாம்யா... எந்த விதத்துல நீ ஒசந்த்வனுங்கர நீ?

இதயம் - நான் உங்களோட போட்டி போட விரும்பல... சரி... இத மட்டும் கேளுங்க...

நீங்க தான் உணர்ச்சிகள செயல்பட வைத்து அதை வெளிப்படுத்தவும் உதவுகிறீர்கள்... ஆனால்... அவங்க உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளும் இறந்து போன பிறகும் சில நொடிகள் துடித்துக் கொண்டிருப்பவன் நானே!! இத்தகைய மதிப்பிற்குரியவனான என்னை மனிதர்கள் தங்கள் உறவான வாழ்க்கைத் துணையாக வரவிருப்பவருக்கு தங்கள் காதல் சின்னமாக சமர்ப்பிக்கின்றனர்!




Thursday, July 30, 2009

பாக்யலக்ஷ்மி...!!


தமிழ்ச்செல்வன் ஒரு பிரபல வங்கி ஊழியன். அனைவரிடமும் வெகு இயல்பாகப் பழகுவான். அன்பும், பண்பும் மிக்கவன். ஆனால் கொஞ்சம் கோபம் அதிகம். சட்டென்று எரிந்து விழுவான். பின்பு, தன் தவறை உணர்ந்து தானே சென்று தான் செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு விடுவான், அது யாராக இருந்தாலும் சரி!

ஆனால் ஒரு முறையும் அவனுக்கு இந்த வாய்ப்பை அளித்ததே இல்லை அவன் மனைவி பாக்யலக்ஷ்மி! பல முறை இவன் அவளைக் கோபித்திருக்கிறான், திட்டி அவளைப் புண்படுத்தி இருக்கிறான். ஆனால் இவன் கோபம் தணிந்து இவன் மன்னிப்பு கேட்க நினைப்பதற்குள் பாக்யா முந்திக்கொள்வாள்.

ஒருமுறை, அலுவலகம் செல்லும் பொழுது மறதியாலும், கிளம்பும் அவசரத்தாலும் அன்று எடுத்துச்செல்ல வேண்டிய காசோலையை மறந்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட்டான். பாதி வழியில் தான் அவனுக்கு காசோலையை மறந்து போன விடயம் நினைவிற்கு வந்தது! இவனுக்கு உடனே தன் மனைவியின் மீது தான் கோபம் வந்தது(அதன் முன் தினம் அந்த காசோலையை அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று அவளிடம் கூறி இருந்தான்!). காசோலையை எடுத்துச் செல்ல வேண்டி வீட்டிற்கு திரும்பிவந்துகொண்டிருந்தான்.

வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கையில் தற்செயலாக, அந்த காசோலையைப் பார்த்த அவன் மனைவிக்கு நேற்று தன் கணவன் சொன்னது நினைவிற்கு வரவே, உடனே அதை எடுத்துக் கொண்டு தன் கணவன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். வழியில் தன் கணவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று அதனை ஒப்படைத்தாள்! ஆனால், தமிழ்ச்செல்வன் மிகுந்த கோபத்துடன் அவளை முறைத்து விட்டு தாம் வீதியில் நிற்கின்றோம் என்பதையும் பாராமல் அவளைத் திட்ட ஆரம்பித்தான். அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக கேட்டு விட்டு பின் மன்னிப்பும் கேட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினாள்!

ஏனோ, அன்று முழுவதும் தமிழ்ச் செல்வனுக்கு தன் வேலையில் ஈடுபாடில்லாமல் போனது. காசோலையை மறந்தது மட்டுமல்லாது, தன் மனைவியை அவசியமில்லாமல் திட்டியது அவன் நினைவிலேயே இருந்தது. "இது இரண்டுமே என் தவறு! ஆயினும், என்னவள் என்னை சிறிதும் கோபிக்காமல் பொறுமை காத்தாள்! என் கோபத்தால் நான் அவளை புன்படுத்திவிட்டேனே !" என்று வருந்தினான். அன்றிரவு எதுவுமே நடக்காதது போல வெகு இயல்பாக தன் கணவனிடம் பேசினாள் பாக்யா...

இவ்வாறாக, எப்போதுமே தன் மனைவியின் பொறுமையையும் தன் மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் கண்டு வியப்பான் தமிழ்ச்செல்வன்!!

ஒரு நாள், இருவருமாக உட்கார்ந்து தம் கல்யாணப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும், எவரேனும் வந்து கதவைத் தட்டினால் கூடக் கேளாதவர் போல...அதில் மூழ்கியே விட்டனர்! சுவாரஸ்யமாக புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் தமிழ்ச்செல்வனிடம் பாக்யலக்ஷ்மி தம் கல்யாணத்தில் எதைப் பற்றியோ சொல்லி சிரிக்க அவனுக்கு கோபம் வீறிட்டது... கோபம் கொண்ட அவன் எதோ கத்த ஆரம்பிக்க பாக்யலக்ஷ்மிக்கு எதுவும் விளங்கவில்லை! அவனை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்ல முயல்கிறாள்... ஆனால், அவளால் அது முடியாமல் போனது...

இம்முறை ஏனோ பாக்யாவும் வாதிக்கத் தொடங்கினாள்! வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் பேசிக்கொள்வதையும் நிறுத்தி விட்டு இரவு சாப்பிடாமலேயே உறங்கிவிட்டனர்! மறுநாள் காலை எழுந்ததும் அரக்க பறக்க எதையோ சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு ஓடி விட்டான் தமிழ்ச்செல்வன். அலுவலகத்தில் வேலைபளுவால் மதியம் வரை அவனால் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. மதியம் சாப்பிடும் சமயம் தான் அவனுக்கு பாக்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றிற்று...

சரி தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம் என்று நினைத்தவன் தன் கைப்பேசியை எடுத்து பாக்யாவின் கைப்பேசி எண்ணைத் தேடினான். ஆனால் பாக்யா என்ற பெயரே அதில் இல்லை! ஐயோ.. என்ன இது? கோபத்தில் நேற்று அவள் எண்ணை அழித்துவிட்டோமா என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அவனுடைய கைப்பேசி அழைப்பு மணியை எழுப்பியது!

"உன் செல்லம் பாவம் ல? என்ன மன்னிச்சிடு டா!"

என்ற வரிகள் தோன்றியது அவன் கைப்பேசியில்... தன் கைப்பேசியை அழுத்திப் பேசினான்... பேசியது பாக்யா!! நேற்று இரவே தான் தூங்கும் சமயம் தன் பெயரை இப்படி மாற்றி வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு விளங்கியது. .. பேசிவிட்டு கைப்பேசியை அணைத்துவிட்டு அவன் நினைத்த வார்த்தைகள்...

"அடிக் கள்ளி! இம்முறையும் நீயே முந்திவிட்டாயடி!!"

Wednesday, July 29, 2009

ஜோடிப் புறாவில் ஒரு புறா!!


மேகம் கருத்து இடி இடிக்க
பூலோகம் இருட்டிட
மின்னல் கண் சிமிட்டி
அவ்விருளை விரட்டிட
அதிகாலை மழை பொழிகிறது!!



மரங்களும் செடிகொடிகளும்
மழையின் வருகையை தத்தம்
தலையசைத்து வரவேற்றன!!



பூத்துக் குலுங்கிய பூக்கள்
மேலும் சிரித்திட
சில்லென்ற காற்று என்
மேனியெங்கும் பரவிட
மெய்சிலிர்த்து நான் நின்றிட...







ஒரு ஜோடிப்புராவில் ஒன்று
மட்டும் தனியே கடந்து தவித்தது...
ஏ புறாவே உன் தவிப்பு என்னவோ?!


Tuesday, July 28, 2009

கிருஷ்ணாவின் அசட்டுத்தனமான சாமர்த்தியம்...!!



கிருஷ்ணா என் எதிர் வீட்டில் வசிக்கும் அக்காவின் குழந்தை.. அவன் ரொம்ப சுட்டி... எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்... உதாரணத்திற்கு, அவனுக்கு ஒரு கார் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அதை உருட்டிக்கொண்டுபோய் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு துளியும் இருக்காது.. அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்ய நினைப்பான்.. அவ்வளவும், கார் அவன் கையில் வந்த ஐந்து நிமிடங்களில்..!!



முதலில்... அவன் பெற்றோர் "அடடா.. எவ்வளவு ஆராய்ச்சி குணம் பாருங்க என் பையனுக்கு" என்பார்கள்... போகப் போக இவன் 'சில்மிஷங்கள்' அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலைத் தான் தந்தது.. அப்படி என்ன தான் செய்கிறான் என்கிறீர்களா?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... மேல படியுங்க..



ஒரு முறை... மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சமயத்தில் மெழுகுவர்த்தி ஏதும் சட்டென்று கிடைக்காதலால் கிருஷ்ணாவின் தந்தை ஒரு பழைய காகிதத்தைப் பற்றவைத்து அதன் பின் மெழுவர்த்தியை தேடி எடுத்துப்பற்ற வைத்தார்... மறுநாள் காலையில் விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு, சன்னல் கதவுகளையும் சாத்தி விட்டு இருட்டில் எதோ செய்து கொண்டிருந்தான் கிருஷ்ணா... தற்செயலாக இவனைத் தேடிவந்த இவன் தந்தைக்கு ஒரு நிமிடம் உயிரே நின்று விட்டது.. அவன் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா?? மேஜை மேல் வைத்திருந்த அவனுடைய தந்தையின் சட்டையை பற்ற வைத்து விட்டு தூரத்தில் வந்தமர்ந்து கொண்டு அது எரிகிறதா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்கிறான்...



அதன் பின் அதன் மேல் தண்ணீரை ஊற்றி அதை அனைத்து விட்டு என்னடா இது என்ன செய்ற நீனு கேட்டா... அவன் சொன்ன பதில்...

"துணிய எரிச்சா எவ்ளோ வெளிச்சம் வருதுன்னு பாத்துற்றுந்தேன்பா!!"




இவன் அட்டகாசம் தாளாமல் 3வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டனர்... அங்கும் இவன் சில்மிஷங்கள் ஓய்ந்தபாடில்லை! மற்ற குழந்தைகளின் பொருட்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது, அதை உடைத்து பார்ப்பது என்றெல்லாம் செய்ய ஆரம்பித்தான்... இவன் கேட்ட பொருளை மற்ற குழந்தைகள் கொடுக்கவில்லையானால் அதைப்பிடுங்கி தூர எறிவது என்றெல்லாம் செய்து கொண்டிருந்தான்...




இவன் சில்மிஷத்தைக் குறைக்க நினைத்த ஆசிரியர் சக மாணவ மாணவியர் முன் திட்டினால் அவனுக்கு புரியும் என்று நினைத்தாரோ என்னவோ.. அவனை சக மாணவ மாணவியர் முன் அப்படி செய்யக் கூடாது என்று அதட்டினார்... அப்போது ஒரு மாணவி அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள்! இவனுக்கு கோபம் வந்திருக்கும் போல...



மதியவேளை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலைமுடியை (ஒரு பக்கத்து ஜடையைமட்டும்) 'பிளேடு' வைத்து அறுத்து விட்டான்... அறுத்தது மட்டும் அல்லாது அதை அவளிடம் காட்டி அவளை வெறுப்பேற்றி அதை குப்பைக் கூடையில் வீசி எரிந்து விட்டு வந்து அவன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்...



ஒ வென அந்தப் பெண் வீரிட்டு அழ அந்த வகுப்பாசிரியர் வகுப்பிற்கு விரைந்து வந்தார்.. கிருஷ்ணாவின் இந்த வேலையைக் கண்ட அவருக்கு கோபம் வர அவனை அழைத்து அடிக்க முற்பட்டார்.. அப்போது அவன், ஏன் டீச்சர் என்ன அடிக்கறீங்க? அவ எண்ணப் பாத்து சிரிச்சா.. எனக்கு கோபம் வந்துச்சி.. அதனால்தான் நான் அவ முடிய அறுத்துட்டேன்.. நான் அவ முடிய அருத்தேன்னு உங்களுக்கு கோபம் வந்துச்சின்னா நீங்க என் முடிய அறுத்துப் போட்டுடுங்க! என்று தன் மொட்டைத் தலையில் ஆங்காங்கு முளைத்திருக்கும் முடியைக் காண்பித்தான் வெகு சாமர்த்தியமாக.. அவன் சொன்ன பதிலில் சிரிப்பு தான் வந்தது ஆசிரியருக்கு!!

விமானங்கள்!!



இந்த வீடியோ எனக்கு மெயில் ல வந்ததுங்க..

இதுல கொஞ்சம் இருட்டா தெரியற பக்கம் இருக்கும் நாடுகளில் இரவு பொழுது... வெளிச்சமா தெரியற பக்கம் இருக்கும் நாடுகளில் பகல் பொழுது...

மஞ்சள் நிறத்தில் அங்கும் இங்குமாக அலையும் பூச்சிகள் போலக் காணப்படுவது விமானங்கள்!!

ஒரு நாளில் எத்தனை விமானங்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்றும் எப்போது திரும்ப வந்து சேர்கின்றன என்றும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்....

பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்கும் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்பும் விமானங்கள் தான் அதிகம்...


அழகான பூந்தோப்பு...


கீழ்காணும் லிங்கை அழுத்தி பின் அதனுள் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்து இழுக்கவும்... ( click and drag anywhere and all throughout the page/ wherever you like!)

அழகான பூந்தோப்பு நொடியில் உங்கள் கண்முன்னே!!

http://www.procreo.jp/labo/flower_garden.swf

பார்த்து விட்டு பிடித்திருந்தால் பின்னூட்டமும் உங்கள் வாக்கும் அளிக்கவும்!

Monday, July 27, 2009

என் நாய்க்குட்டி செய்த அட்டூழ்யங்கள்...!!





எங்க நாய்க்குட்டி பண்ற அட்டூழ்யத்துக்கு ஒரு அளவே இல்லீங்க! இரண்டு முறை அது இரண்டு பேர துரத்தி அடிச்சிருக்கு...


முதல் சம்பவம்...





எங்கள் வீதியில் கணேஷ் என்றொரு சிறுவன் இருந்தான்... கொழு கொழுவென அமுல் பேபி போல இருப்பான்! அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவார் என் தந்தை... குட்டி friend என்று தான் அவனை அழைப்பார்.. எனக்கே பொறாமை ஏற்ப்படும் அளவிற்கு இருவரும் நன்றாக விளையாடுவர்.. எங்க விக்கி என் அப்பா செல்லம்! எங்க அப்பான்னா அதுக்கு உயிர்...!! அதனிடம் மட்டும் தான் அப்பா செல்லம் காட்ட வேண்டும் என்று நினைக்கும்!! நான் அவர் பக்கத்துல உக்காந்து பேசிற்றுக்கும் போது கூட கோபமாக சில நேரம் குறைக்கும்...





எனவே கணேஷைப் பார்த்தால் அதற்கு ஆகாது! அவனைப் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்ததோ என்னவோ தெரியவில்லை...! ஒரு நாள் அவன் அப்பாவுடன் விளையாட என் வீட்டிற்கு வந்திருந்தான்.. அவன் வந்திருக்கிறானே என்று விக்கி யை கட்டிப் போட்டுவிட்டு நான் உள்ளே சென்றேன்... கணேஷும் விக்கி கட்டி தான் இருக்கிறதென்று உள்ளே வந்து விட்டான்.. அப்பாவும் அவனிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார்...





எங்கிருந்து வந்ததோ தெரியவில்லைங்க எங்க விக்கி கு அவ்ளோ ஆக்ரோஷம்?! அதைக் கட்டி வைத்திருந்த சங்கிலியையும் அறுத்துக் கொண்டு கணேஷை நோக்கி ஓட ஆரம்பித்தது... அவன் பாவம் இதைக் கண்டதும் பயந்து போயி தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்... இதுவும் விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டே இருக்கிறது! இருவரும் எங்கள் வீதியைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர்..






என் அப்பாவும் விக்கி பின்னால் ஓட ஆரம்பித்தார்... வேண்டாம் டா விக்கி.. வந்துடறா னு சொல்லி சொல்லி அதன் பின்னால் ஓடி அப்பாவுக்கு கால் வலியும் மூச்சு இறைத்தும் தான் மிச்சம்... பாவம், கணேஷை ஓட ஓட விரட்டி அடித்தது அது..!!





அதன் கோபம் தீர அவனை துரத்தி விட்டு அது பாட்டுக்கு "பெரிய மேதாவி" போல எங்க வீட்டிற்குள் நுழைந்து அதன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டது... கணேஷ் கு தான் பயத்தில் ஜுரமே வந்து விட்டது... அன்று எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தியவன் தான்...! இன்று வரை அவன் வரவே இல்லை...





ஆனால் இன்றும் எங்கள் வீட்டு வழியாகச் செல்லும் போது நின்று அதனிடத்தில் (விக்கி யிடம்) பேசிவிட்டுத் தான் செல்வான்..





என்ன பேசுவான் தெரியுமா....??





டேய் விக்கி... என்ன ஓட ஓட விரட்டிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி வால் ஆட்ரியா?? இரு இரு உன்ன கவனிச்சுக்கறேன்!!








இரண்டாவது சம்பவம்...





என் அண்ணா பள்ளி சுற்றுலாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம்... எங்கள் அத்தை மகன் ஒரு வேலையாக எங்க வீட்டிற்கு வந்திருந்தார்.. இரவு வேளை ஊருக்கு செல்ல வேண்டாம் என்று அப்பா சொன்னதால் எங்க வீட்டில் தங்கினார்... மாற்றுத் துணி ஏதும் கொண்டு வராததால் என் அண்ணனுடைய நைட் பான்ட் ஐ அணிந்து கொண்டு தூங்கி இருக்கிறார்.. மறுநாள் காலையில், என் அம்மா விக்கி க்கு பாலோ சாப்பாடோ கொடுப்பதற்காக அதனை உள்ளே அழைத்து வந்தார்... அப்போது அங்கு உறங்கிக் கொண்டிருந்த எங்க அத்தை மகன் அணிந்திருந்த என் அண்ணாவினுடைய (pant) பான்ட்டை அது பார்த்து விட்டு அண்ணா தான் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டது போலும்! ஓடி சென்று அவர் படுத்திருந்த படுக்கையின் மேல் எரிக் கொண்டு அவருடைய காலை நக்க ஆரம்பித்தது... இதனைப்பார்த்து பயந்து போன அவர் வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தார்!





அது என் அண்ணா இல்லை என்று அறிந்ததும் விக்கி யும் அவரைத் துரத்த ஆரம்பித்தது... அவரை ஏற்க்கனவே ஒரு நாய் கடித்திருப்பதால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அந்த அறையின் கதவின் மேல் ஏறிக்கொண்டு கத்த ஆரம்பித்தார்... அதன் பின் என் அப்பா ஓடி வந்து அதனை கட்டிப்போட்டார்..

உயிரோட்டமற்ற நொடி..!!



என்னவர் என்னை விடுத்து பனி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த வேளையில் மழை வந்து கொண்டிருந்த சமயம் நான் கிறுக்கியது....!!


நீல வானம் கரு கருக்க...


பூமியைச் சுட்டெடுக்கும் சூரியன் ஓய்வெடுத்தது...!!



குளிர்ந்த நீரால் குளித்துப்


புத்துயிர் பெற்ற பூக்கள் சிரிக்கின்றன..!!


அதனை மேலும் சிரிக்க வைக்க...


மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன...!!



ஆயினும்...



இன்னொடிக்கு உயிரோட்டம்தர


என்னுடன் என்னவன் இல்லையே!!


என்ன செய்ய?!



-பிரியங்கா


அம்மா!!


உயிரைக் கொடுத்தாள்
என் உயிரென இருப்பவள்!!

எனக்கென இருக்கிறாள்
என்றும் எனக்கெனத் துடிப்பவள்!!

மென்மையான மலரவள்...
என் வாழ்வின் அர்த்தமவள்!!

என்றும் என்றென்றும் இனியவள்...
என் உயிரின் உயிரோட்டம் அவள்!!

ரோஜா தன்னைச் சூடும் பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்....


ரோஜா... தன்னைப் பறித்து அழகு பார்த்து பின் அவள் தலையில் சூடிய பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்...



உன் ஆசைத் தீண்டல்களும்
என் கூச்ச சிணுங்கல்களும்...

உன் இதமான உரசல்களும்
என் செல்ல முனகல்களும்...

என்றும் மறவா உன் மென்மையான கூந்தலும்,
அழகான ஸ்பரிசமும்...
என்றுமே எனக்கு மட்டுமே சொந்தமானது!!

எனக்கே உரியது!!
வேறு யாருக்கும் நான் விட்டுக்கொடுக்க
முடியாதது, விரும்பாதது!!

நீரின்றி உயிரில்லை! அன்பே நீயின்றி நானில்லை!!


என் கண்ணுக்குள் நுழைந்து
கண் இமைகளில் ஒலி தந்தாய் நீ!

பகலாய் என்னுள் நுழைந்து
என்னுள் இருந்த இருளை நீக்கினாய் நீ!

மாலைப் பொழுதின் மயக்கமாக நான்!
என்னுள் சுவாசிக்கும் இசையாக நீ!

நீரின்றி உயிரில்லை இவ்வுலகில்!
அன்பே...
நீயின்றி நானில்லை ஒருபோதும்!!

-பிரியங்கா.

Wednesday, July 22, 2009

எங்க நாய்க்குட்டிய சாப்ட வெக்க நாங்க நாயா பேயா அலையனுமுங்க!!


என்னம்மா அலம்பல் பண்ணும் தெரியுமாங்க என் நாய்க்குட்டி.. அது எங்க வீட்டுக்கு வந்தப்ப 2வாரக்குட்டிங்க... அதனாலேயே எங்கம்மா அதுக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க... நேரம் பாத்து பாத்து அதுக்கு சாப்பாடு போடுறது... அதுவும்... எப்டி தெரியுமா?? கீழ உக்காந்துக்டு அதோட கிண்ணத்த கைல பிடிசிக்க்டு சாப்டுடா செல்லம் சாப்டுனு சொல்லி சொல்லி சாப்ட வெப்பாங்க...!!

இது இப்டியே போயிற்றுந்துசுங்க.. நாளாக நாளாக எங்க நாய்க்கு(விக்கி) இது நல்லா பழகிடுச்சு... அம்மா கீழ உக்காந்துக்டு கைல கிண்ணத்த பிடிச்சிக்டு குடுத்தாத்தான் சாப்டும்.. இல்லன்னா எவ்ளோ நேரம் ஆனாலும் அப்டியே சாப்டாமலே இருக்கும்... இதுல.. சாப்பாடு கலந்து 3மணிநேரத்துக்கு மேல ஆயிடுச்சின்னா அத தொடவே தொடாது!! வேற புதுசா கலந்துக்டு வந்து அது கிட்ட கெஞ்சின்றுக்கணும்! சரி.. அது போகட்டும்...

இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்கப்பா...

கொஞ்ச நாள் கழிச்சி அதுக்கு அம்மா முகத்தையே பாத்து சாப்டு சாப்டு போர் அடிச்சிருக்கும் போல..!! எங்க எல்லாரையும் ஆட்டத்துல சேத்துக்கிச்சு... அம்மா உக்காந்துக்டு சாப்பாடு கிண்ணத்த பிடிச்சிக்குவாங்களாம், நானோ- இல்ல அண்ணாவோ -நாங்க ரெண்டு பேரும் இல்லன்னா எங்க அப்பாவோ அம்மா பக்கத்துல நின்னுக்டு அது(விக்கி) சாப்டறத பாக்கனுமாம்!!

அட!! நிக்கறது பரவால்லீங்க... அது சாப்டு முடிக்கிற வரைக்கும் வெச்ச கண்ணு எடுக்காம அதஎத் தான் பாத்துக்ற்றுக்கணும்!! சாப்டும் போது நடு நடுவுல அது நிமிந்து பாத்து அதைத் தான் பாத்துண்டிருக்கொமா இல்ல வேற எங்கயாவது பாக்ரோமானு "நோட்டம்" விடும்... அது பாக்கும் போது நாங்க... சரி சரி.. சாப்டுமா... "செல்லம்... என் பட்டு.. என் குட்டி.." இப்படிலாம் சொல்லணும்... சொன்னோம்னா சாப்டறத continue பண்ணும்!!

அப்டி இல்லாமவேற எதையாவது பாத்தோம்னா அவ்ளோதான்... சாப்டறத நிறுத்திடும் நிறுத்திப்புட்டு பெரிய மேதாவி மாறி அங்கிருந்து எந்திரிச்சி போயிடுமுங்க!! அப்புறம் அது பின்னாடியா 'நாயா பேயா 'அலையனும் அத சாப்ட வெக்கறதுக்கு!! இதையெல்லாம் நான் எங்கிட்டு போயிச் சொல்ல?? நீங்களே சொல்லுங்க!!

இந்த அநியாய அக்ரமத்த இது இரெண்டு வாரக் குட்டியா இருந்தப்போலேருந்து இன்னிக்கி(எப்டியோ எனக்கு கல்யாணமாகி வந்துட்டதனால நான் தப்பித்தேன்!) வரைக்கும் செஞ்சிக்க்டு இருக்குங்க!! என்னோட அண்ணனும் U.S. க்கு போயிட்டான்.. அதனால அவனும் பிழைத்துக்கொண்டான்.. பாவம், எங்க அம்மாவும் அப்பாவும் தான் எங்க விக்கி கிட்ட கெடந்து தவிக்கறாங்க!!

பெயர் சூட்டு விழா!!


ஹ்ம்ம்ம்ம்ம்ம்... நாய்க் குட்டி வீட்டுக்கு வந்தாச்சு! அதுக்கு சாப்பாடு குடுத்து, அதோட விளையாடவும் ஆரம்பிச்சாச்சு... அடுத்து அதுக்கு ஒரு பெயர் வெக்கணுமே!! என்ன பேர் வெக்கலாம்? யோசிக்க ஆரம்பித்தேன்.. யோசித்துக் கொண்டிருக்கையில் எதிர் வீட்டு ஆன்டி... என்னம்மா? எதோ யோசிக்கற போலனுகேட்க நானும் நாய்குட்டிக்கு பெயர் வைக்க போறேன் ஆன்டி... என்ன பேர் வெக்கலாம்னு யோசிச்சிற்றுக்கேன்னு சொன்னேன்... ! அதுக்கு அவங்க என்ன பாத்து சிரிச்சிட்டு, நல்ல பொண்ணுமானு சொல்லிட்டு சரி சரி... நாய்க்கு 'இ' இல்லனா 'ஐ' னு முடியற மாறி தான் வெக்கணும்.. அப்ப தான் அதுக்கு புரியும்னு சொன்னாங்க...



அதுவும் சரி தான் நான் கூப்பிடுவது அதுக்கு புரிஞ்சா தானே நான் அதைக் கூப்டும் போது அது திரும்பி பாக்கும்? சரி ஆன்டி னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டேன்.. பள்ளிக்கு நேரம் ஆகிவிடவே நான் குளித்து கிளம்பி பள்ளிக்குச் சென்றுவிட்டேன்... என் தோழி ரேவதியிடன் என் குட்டி நாயைப் பற்றிச் சொன்னேன்... அதற்க்கு பெயர் வைக்க வேண்டும் என்றும் சொல்லி அவளையும் யோசிக்கச் சொன்னேன்... அவள் யோசித்து விட்டு இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னாள்... இதற்கிடையில்.. எங்களுக்கு அன்று "history paper"-- மாதத்தேர்வுக்கான விடைத்தாளைக் கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியை..





எனக்கு ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவன் மீது வெறுப்பு... அவன் பெயர் விக்ரம்.... eppothum என்னுடன் போட்டி போட்டுக் kondiruppaan... entha vidaithaal koduththaalum சரி( தினந்தோறும் வைக்கும் சின்ன தேர்வாக இருந்தாலும்...) அவன் தாளையும் என் தாளையும் வைத்துப் பார்பான்.. எனக்கு அவனை விட ஒரு மதிப்பெண் அதிகம் வந்திருந்தால் கூட அவனால் பொறுக்கவே முடியாது! உடனே அந்த ஆசிரியரிடம் சென்று சண்டையிடுவான், என்னை விட ஒரு மதிப்பென்னாவது அதிகமா ஏதாவது ஒரு கேள்விக்கான விடையில் வாங்கிவிட்டு தான் வகுப்பிற்கே வருவான்!





அன்றும் அப்படித் தான் செய்தான்... history paper இல் என் மதிப்பெண் 82... அவன் மதிப்பெண் 80... எண்கள் ஆசிரியை எல்லோருக்கும் அவரவர் தேர்வுத் தாளைக் கொடுத்து விட்டு இறுதியில் அனைவரின் பெயர்களையும் அவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் படித்து விட்டுச் சென்றார்.. என் மதிப்பெண்ணைக் கேட்ட உடன் விக்ரம் நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வந்து என் விடைத்தாளைக் கேட்டான்.. எதற்கு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட நான் தர மாட்டேன் போ என்று சொன்னேன்.. ஆனாலும் அவன் விடவில்லை.. என் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு வகுப்பின் வெளியே ஓடிவிட்டான்... நானும் இந்த முறை அவனை விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்!





அவன் நேராக எங்கள் history ஆசிரியையிடம் தான் சென்றான்.. மூச்சிரைக்க ஓடி வந்திருக்கும் எங்களைப் பார்த்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை... நான் பேச ஆரம்பிப்பதற்குள் அவன் முந்தினான்... அதெப்படி நீங்க எனக்கு இவளை விட இரண்டு மதிப்பெண் குறைவாக போட்டீங்கன்னு கேட்டான்.. ஆசிரியைக்கு ஒன்றும் விளங்கவில்லை... ஆனால் அவனை கோபமாக முறைத்தார்! அதற்குள் அங்கு வந்த எங்கள் தமிழ் ஆசிரியை(சின்ன வகுப்பிலிருந்தே எங்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவர்!) என்ன விக்ரம்? ஆரம்பிச்சிட்டியா திரும்பவும் என்று கேட்டு விட்டு history ஆசிரியையிடம் அவனைப் பற்றி சொல்லி.... "அவன் நீங்கள் அவனுக்கு ஒரு மதிப்பெண் ஆவது அந்தப் பெண்ணை விட அதிகமா போடலைன்னா விடமாட்டான்" என்றார்... என்ன? ஆசிரியையிடம் இப்படி பேசறான்? அவன் சண்டையிட்டால்....! அதற்க்கு நான் ஆள் இல்லை என்று சொல்லி விட்டு, விக்ரமைப் பார்த்து இன்னொரு முறை இப்படி என் கிட்ட வந்தீன நான் உன்ன பிரின்சிபால்(principal) கிட்ட கூட்டிட்டு போயிடுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.. அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!! ஹப்பா!! என்ன ஒரு கோபம்? என்ன ஒரு வெறுப்பு? நான் சிரித்துக் கொண்டே என் விடைத் தாளை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றேன்.. ஆனால் எனக்கு அவன் செய்த இந்த வேலை(விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது) எனக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது... இவனை நல்லா வெறுப்பேத்தனும்னு முடிவு பண்ணேன்!





vikram என் வீட்டின் அருகில் தான் வசிக்கிறான்.. (விக்கி என்று தான் அவன் வீட்டில் அழைப்பார்கள்) ... அவனுக்கு நாய் என்றாலே பிடிக்காது... அதை பயன் படுத்திக்கொண்டு என் நாய்க்கு நான் விக்கி என்று பெயர் வைக்க முடிவே பண்ணிட்டேன்... மாலை வீட்டிற்குச் சென்றவுடன் அம்மாவிடம் என் நாய்க் குட்டிக்கு விக்கி என்ற பெயர் வைக்கப்போவதாகச் சொன்னேன்.. அம்மாவுக்கும் அந்தப் பெயர் பிடித்தது! (பெயர்க் காரணம் தெரியாதலால்..)



அண்ணாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்த பிறகு பெயர் சூட்டு vizhaa அரங்கேறியது.. ஆனால் விக்ரமை வெறுப்பேற்ற எனக்கு மனது வரவில்லை! எதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது எனக்குள்!!

அழகா புசு புசுன்னு ஒரு நாய்!


நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்போது! என் பள்ளியின் அருகில் வசிக்கும் என் வயதுப் பெண் ஒருத்தி, தினமும் மாலை வேளையில்(நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சமயம்!) ஒரு அழகான பொமேரியன் நாய்க் குட்டியை அழைத்துக் கொண்டு வீதியில் நடந்து செல்வாள்.. அதைப் பார்க்கையில் எனக்கும் ஒரு நாயை வளர்க்கணும்ங்கற ஆசை வந்தது... அதனால், என் தந்தையிடம் சென்று நாயை வாங்கித் தரச்சொல்லி கேட்டேன்! அவர் வேணாம்னு சொல்லிட்டார்... எனக்கு விட மனதில்லை! அடம் பிடித்தேன்... நீங்க எனக்கு நாய்க் குட்டி வாங்கித்தரலைன்னா நான் சாப்டமாட்டேன், படிக்க மாட்டேன், எதுவும் செய்யமாட்டேன்னு சொன்னேன்... அதை செய்யவும் செய்தேன்!

குழந்தை சாப்பிடாமல் இருந்தால் எந்த அப்பாவுக்கு தான் மனசு கேக்கும்? அவர் சரி, வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார்... நானும், நாய்க்குட்டி வரப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்...
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடோடி வந்தேன்... அம்மாவிடம் அப்பா எப்போ வருவாங்கன்னு கேட்டேன்.. அம்மா சொன்னாங்க..., "நீ தான் நாய்க் குட்டி கேட்டியே? அப்பாவோட கூட வேல பாக்கிற ஆன்டி(aunty!) ஒரு நாய்க் குட்டி வச்சிருக்காங்களாம்.. நீ கேட்டனு சொன்னதும் அத எடுத்துக்கிட்டு போகச் சொன்னாங்களாம் அவங்க.... இப்போ அவங்க வீட்லேருந்து தான் போன் பண்ணாங்க உங்க அப்பா.. நாய்க் குட்டியை எடுத்துக்டு ஆட்டோல(auto) வந்துற்றுக்காங்களாம்!"

மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதந்து கொண்டிருந்தேன் நான்! அழகான, வெள்ளையான, புசு புசுவென்ற நாய்க்குட்டி ஒன்றை அப்பா எடுத்துக் கொண்டு வரப் போகிறார் என்ற கனவு வேறு! வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது... வெள்ளை பொமேரியன் நாயை எதிர்ப் பார்த்த எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம்!:(
காக்கி கலரில் அதன் உடம்பில் முடியே இல்லாத ஒரு நாய்க்குட்டியை கையில் ஏந்தியபடி வந்தார் அப்பா! எனக்கு பிடிக்கவே இல்லை:( அப்பா மீது கோபித்துக் கொண்டு அதைத் தொடக் கூட தொடாமல் என் அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுக் கொண்டு அப்படியே தூங்கியும் விட்டேன்... அப்பாவிற்கு ஒன்றும் புரியலை பாவம்.. என்னை அழைத்து அழைத்து அறையின் கதவைத் தட்டி தட்டி ஓய்ந்து விட்டார்... மறு நாள் காலையில் தான் கோபித்துக் கொண்ட காரணத்தை நான் சொன்னேன்!

அவர் என்னைப் பார்த்து சிரித்து விட்டு.. அட குட்டி!( என்னை அப்பா அப்படித் தான் அழைப்பார்..)... இந்த நாய்க் குட்டியும் அழகா தான் இருக்கும்டா... இது கிராஸ் (cross variety).... பொமேரியன்-பொஷெர் (pomerian-boxer) இரண்டும் கலந்த வகையைச் சார்ந்தது என்றார்... நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அப்போது அப்பா எடுத்து வந்த அந்த குட்டி நாய் என் கால்களுக்கிடையில் வந்து நின்று கொண்டு கால் விரல்களை நக்க ஆரம்பித்தது! அதை சற்றும் எதிர்பாராத நான் சட்டென்று விலகிக்கொள்ள, அது அப்படியே துவண்டு விழுந்தது.. விழுந்துவிட்டு என்னைப் பரிதாபமாக பார்த்தது! ஐயோ பாவம் என்று அதை நான் கையில் எடுத்து கொண்டு தடவி கொடுக்க அது என் அப்படியே என் மீது சாய்ந்து கொண்டுவிட்டது! அதன்பின் நான் என் கோபத்தையெல்லாம் மறந்து விட்டு தினமும் என் செல்ல நாயுடன் விளையாட ஆரம்பித்து விட்டேன்...

நாய்க் குட்டிஎன்றால் அதற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அலசி ஆராய்ந்த கதையை அடுத்த இடுகையில் பார்ப்போம்!;) ;) ;)