Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, September 29, 2009

கோமாளியா தெரிஞ்சோமுங்க நாங்க...!!


கிட்டத் தட்ட ஒன்றரை மாசமா உங்கள தொந்தரவு பண்ணாம ரொம்ப கஷ்டமா போச்சு ங்க எனக்கு... அதான் திரும்பவும் கிறுக்கலாம்னு வந்துட்டேன்...!!

போன மாசம் 22 ஆம் தேதி நான் என் கணவரோட அலுவலக நண்பரோட மனைவியோட இந்தியாவுக்கு கிளம்பினேன்ங்க... ஜெர்மனி ல இருக்கறப்ப rediff news, அந்த news இந்த news னு படிச்ச எல்லாத்துலயும்... பன்றிக் காய்ச்சல் ரொம்ப அதிகமா பரவிற்றுக்கு எல்லா எடத்துலையும்னு தான் படிச்சேன்ங்க... அதனால நானும் என்னோட கூட வந்தப் பெண்ணும் முகக் கவசம், அப்புறம் கைக்கு alcohol sanitizer gel, gloves இதெல்லாம் வாங்கிக்டு போனோம்ங்க..

விமானத்துல போயி உக்காந்த்துக்கிட்டோம் நாங்க... ஆனா, ஒருத்தர் கூட முகக் கவசம்( face mask ) போட்டுக்கலைங்க... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... அதனால கொஞ்ச நேரம் நாங்களும் அதப் போட்டுக்கல... ஆனா, எங்க பக்கத்துல ( பக்கத்து row la ) உக்காந்துற்றுந்த ஒரு ஆளு இஷ்டத்துக்கு தும்பல் போட ஆரம்பிச்சிட்டாரு... அதனால, நாங்க ரெண்டு பேரும் பயந்து போயி உடனே முகத்துக்கு கவசத்த எடுத்து போட்டுக்கிட்டோம்... ஆறு மணி நேர பயணத்துக்கு அப்புறம் துபாய் விமான நிலையத்துக்கு வந்தது சேர்ந்தோம்.. அங்க தான் கூட்டம் அலை மோதுமே...! இங்க தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு பேசிக்கிட்டு நாங்க விமாத்த விட்டு இறங்கி நடந்துக்கிட்டு இருந்தோம்... எங்க ரெண்டு பேரத் தவிர வேற யாருமே கவசம் போடலீங்க...!! எங்க பக்கத்துல உக்காந்திருந்தவர் தும்மனார்னு தானங்க நாங்க mask போட்டுக்கிட்டோம்? கடைசியில என்னாச்சு தெரியுங்களா...?? அந்த ஆளு எங்கள பாத்து எதோ சொல்லிட்டு சிரிச்சிட்டு போறாரு... என்னத்த பண்றது??!!

அப்பவும் நாங்க கண்டுக்கலங்க... அப்டியே தான் நாங்க போக வேண்டிய கேட் (gate) ku போனோம்... போற வழில லாம் எல்லாரும் முக மூடி கொள்ளகாரங்கள பாக்கற விதமா பாத்தாங்க எங்கள!! எங்கள மாறி இன்னும் ரெண்டு பேர்(ரெண்டு பேர் னா எண்ணி ரெண்டு பேர் ங்க...) கவசம் போட்டுக்கிற்றுந்தாங்க! அதப் பாத்ததும் ஒரு வித திருப்தி வந்துச்சி எங்களுக்கு... சரி நமக்கு துணையா இன்னும் ரெண்டு பேர் இருக்காங்கங்கர நிம்மதியும் வந்துச்சி...

ஆனா... அவங்களும் வேறேதோ விமானத்துல போயிட்டாங்க போல... நாங்க போக வேண்டிய கேட்(gate) கு வரல அவங்க... :(

பெங்களூருக்கு போற விமானத்துல வந்து உக்காந்தும் ஆச்சு நாங்க... அந்த விமானத்துலையும் யாரும் முகக் கவசம் போடலைங்க... போதாக் குறைக்கு எங்கள கடத்தல் காரங்க, கொள்ளகாரங்கள பாக்கற மாறியே பாக்கறாங்க!! ஆனாலும் நாங்க கவசத்த களட்டல... நம்ம ஒடம்பு தானே ங்க நமக்கு முக்கியம்?? என்ன சொல்றீங்க?? ;)

நாலு மணி நேரத்துக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தோம்... அங்க immigration கு முன்னாடி பன்றி காய்ச்சல் இருக்கானு சோதிக்கப் போறதா சொன்னாங்க... சரி னு அங்க போனா... காய்ச்சல் இருக்கா னு temperature check (கடனே னு ) பண்ணிட்டு அனுப்பிட்டாங்க... அதுக்கப்பறம் immigration முடிஞ்சி ஒரு வழியா வெளிலயும் வந்துட்டோம்...
ஆனா, துபாய் லயாவது எங்களைத் தவிர இன்னும் ரெண்டு பேர் முகக் கவசம் போட்டுக்கிட்டு இருந்தாங்கங்க... இங்க... பெங்களூருல ஒருத்தங்க கூட போடல...

மக்கள் கிட்ட பன்றிக் காய்ச்சலைப் பத்தின விழிப்புணர்வு இல்லியா? இல்ல... பத்திரிகை ல லாம் படிச்சது லாம் பொய்யா?? (எதோ... வெளில போனாலே எல்லாரும் முகக் கவசத்தொடத் தான் போறாங்க, அப்டி இப்டி னு போட்டிருந்தாங்க..) எங்களுக்கு ஒன்னும் புரியல... மொத்தத்துல துபாய் விமான நிலையத்துலையும் சரி பெங்களூரு விமான நிலையத்துலையும் சரி... நானும் என்னோட கூட வந்த பெண்ணும் கோமாளிகளாட்டம் திரிஞ்சிக்கிற்றுந்தோம்... !!









தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Tuesday, August 11, 2009

ஆத்தாடி...!! எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...!!


அப்போ எனக்கு என்ன வயசிருந்திருக்கும்னு கூட எனக்கு நினைவில்ல! ஆனா நான் சின்ன புள்ளயா இருந்தப்ப தான் இந்த சம்பவம் நடந்துச்சி... எங்க அம்மாவும் அப்பாவும் வெளில எங்கயோ போக கிளம்பிக்கிற்றுந்தாங்க... என் பாட்டி(அப்பாவோட அம்மா) எங்க அத்த வீட்டுக்கு போயிருந்தாங்க, ஆனா எங்க பாட்டியோட அம்மா எங்க கூட இருந்தாங்க... அவங்க இருக்காங்கங்கர தைரியத்துல என்னையும், அண்ணாவையும் வீட்லயே விட்டுட்டு அம்மாவும் அப்பாவும் வெளில கிளம்பி போயிட்டாங்க(எங்க போனாங்கன்னு கூட எனக்கு சரியா நினைவில்ல)!...

பெரிய ஆயா(பாட்டி யோட அம்மாவ நாங்க அப்டித் தான் கூப்டுவோம்!) தொலைக்காட்சிப் பெட்டில எதோ பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நான், என் அண்ணா அப்பரம் என் வீதியில் வசிக்கும் என் தோழி மூவரும் விளையாடிக் கொண்டிருந்தோம்... கொஞ்ச நேரத்துல எங்க பெரிய ஆயா வந்து என் அண்ணாவ கூப்டாங்க..

" 'கோகு' ( என் அண்ணா பேர் கோகுலகிருஷ்ணன்) இங்க வாடா கண்ணா... யாரோ ஒருத்தர் வந்திருக்கார் பாரு.. உங்க அப்பா தான் அனுப்பினாராம்... வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கறதுக்காக பட்டி வாங்கிக்கிட்டு வரச்சொன்னாராம், நம்ம 'பித்தள அண்டா'வ எடுத்துக்கிட்டு போயி வாங்கிக்டு வந்து வீட்ல வெக்க சொன்னாராம் அப்பா வரதுக்குள்ள..." னு எங்க பெரிய ஆயா சொல்ல நானும் அண்ணாவும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு நின்னோம்... அப்பரம் அண்ணா- வந்திருக்கிற ஆள் கிட்ட "எங்க அப்பா எங்க கிட்ட ஏதும் சொல்லலியே! எப்போ சொன்னாங்க உங்க கிட்ட?"னு கேட்டான்...

அதுக்கு அந்த ஆளு இதோ இப்போ தான் வழில பாத்தேன் அப்பாவ.. உன்னையும் கூட்டிட்டு போகச்சொன்னாரு.. னு சொன்னார்.. அதோட, வாப்பா போகலாம் னு சொல்லிட்டு எங்க வீட்டு குளியலறையில இருந்த பித்தள அண்டாவ (நல்லா பெரிய, கனமான அண்டா ங்க அது, நல்ல வெல போகும்) எடுத்துக்கிட்டு போயி அவர் வந்த மிதிவண்டில உக்காந்துக் கிட்டு அண்ணாவ தூக்கி முன்னாடி உக்கார வெச்சிக்கிட்டு இதோ வந்துடறோம் னு சொல்லிட்டு போனார்...

ஐயோ... அண்ணாவ வேற கூட்டிட்டு போயிட்டாரே இந்த ஆளு... நாம எப்டி விளையாடறதுன்னு நானும் என் தோழியும் புலம்பிக்கிட்டே உள்ள போயி நாங்க மட்டும் விளையாட ஆரம்பிச்சோம்.. ஆனா... அண்ணாவும் அந்த ஆளும் போயி ரொம்ப நேரம் ஆச்சு, ரெண்டு பேரும் திரும்பி வரவே இல்ல.. எனக்கென்னமோ பயமா இருந்துச்சி... என் தோழி கிட்ட அதப் பத்தி சொல்ல.. அவளும் என்ன di செய்கிறது, சரி வா.. வெளில போயி பாக்கலாம்னு சொன்னா.. நாங்க ரெண்டு பெரும் வெளில வாசல் கிட்ட போயி நின்னுக்கிட்டு போற வரவங்களலாம் பாத்துக் கிற்றுந்தோம்... ஆனா அண்ணா வரல... :(

எனக்கு ஒன்னும் புரியல, என்ன பண்றதுன்னும் தெரியல! பெரிய ஆயா கிட்ட போயி இதப் பத்தி கேக்கலாம்னு பாத்தா "அவங்க பயத்துல அழவே ஆரம்பிச்சிட்டாங்க... ஐயோ, புள்ளைய தனியா அனுப்பிட்டனே நானு! இப்போ உங்க அப்பா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்னு தெரியலியே னு பாடறாங்க!"

ரெண்டு மணி நேரம் கழிச்சி, அண்ணா மட்டும் வந்தான்... 'அண்ணா' னு ஓடிப் போயி வந்துட்டியா? எங்க போயிட்ட நீ? பயந்தே போயிட்டோம் தெரியுமா னு நான் அழ ஆரம்பிக்க... அண்ணா சொன்னான்...

"இல்ல டா குட்டி... பிள்ளையார் கோவில் வர தான் டா போனோம்... அங்க போனதும் அந்த ஆளு என்ன கீழ எறக்கி விட்டுட்டு, நீ இங்கயே இருப்பா.. நான் மட்டும் போயி சுண்ணாம்பு பட்டி வாங்கிக்கிட்டு வந்துடறேன் னு சொல்லிட்டு போயிட்டாரு... போனவர் வரவே இல்ல.. நான் பாத்துப் பாத்து வீட்டுக்கு வந்துட்டேன்"

அப்பாவும், அம்மாவும் வெளில போறதையும் வீட்ல சின்ன புள்ளைங்களும், ஒரு வயசான பாட்டியும் தான் இருக்காங்க ங்கறதையும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு தான் அந்த ஆளு எங்க வீட்டுக்கு வந்து தெரிஞ்சவன மாறி ஆயா கிட்ட எங்க அப்பா பேர சொல்லி எங்கள ஏமாத்திட்டு அண்டாவ திருடிக்கிட்டு போயிற்றுக்கான்...

ஆத்தாடி...!! எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...!!

இதெல்லாம் நடந்து முடியரதுக்கும், அம்மா அப்பா வீட்டுக்கு வரதுக்கும் சரியா இருந்துச்சி... அப்பா கிட்ட நடந்தத சொன்னதும் பயந்து போயிட்டாங்க பாவம்.. ஆனா 'அண்ணாவுக்கு நல்லா திட்டும் விழுந்துச்சி'... யாராச்சும் வந்து என் பேர சொன்னா உடனே போயிடுவியா? யார் என்னனு விசாரிக்கரதில்லியா? இப்டிலாம் கேட்டு திட்டினாங்க... எனக்கு அப்பா மேல கோவம் தான் வந்துச்சி அப்போ... அண்ணாவ போக சொன்னது பெரிய ஆயா தான? அப்போ அவங்கள தான திட்டனும், பாவம் அண்ணாவ மட்டும் திட்டறாங்க இந்த அப்பானு நெனச்சிக்கிட்டேன்... (இப்போ தான புரியுது அவங்கள திட்ட முடியாம தான் அண்ணாவ திட்டி இருப்பாங்க அப்பானு!)

எது எப்டியோங்க... அண்டா போனது போயிட்டு போகுது... அந்த அண்டா இல்லன்னா வேற வாங்க முடியும் காசிருந்தா! அந்த அண்டாவ திருடிக்கிட்டு போனவன் எங்க அண்ணாவையும் கூட கூட்டிட்டு போயி யார்டயாவது வித்துற்றுந்தா... என்ன ஆகறது?? அய்யய்யோ... யோசிக்கரதுக்கே பயமாவுல இருக்கு... :(






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Wednesday, August 5, 2009

என் அண்ணன்...!!


இன்று ரக்க்ஷா பந்தன்... நம் நாட்டில் ஒவ்வொரு தங்கையும், (அக்காவும் தான்) தன் அண்ணனுக்காக (தம்பிக்கும் தான்) நோன்பு இருந்து அவன் நன்றாக நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் நாள்!! இது வட இந்திய கலாச்சாரம் அல்லது பண்டிகை என்று சிலர் நினைக்கலாம்... உண்மை தான், நாம் அப்படிப் பார்த்தால் தீபாவளி கூட தமிழர் பண்டிகை இல்லையே!! தமிழர் பண்டிகை என்று பெயர் பெற்றது பொங்கல் மட்டுமே!!

இந்த இனிய நாளில் நானும் என் அண்ணனுக்கு ஆண்டு தோறும் ராக்கி கட்டி விட்டு அவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுவேன்... இது எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து செய்து வருகிறேன்... ஆனால் இந்த வருடம் என்னால் என் அண்ணனை நேரில் கூட பார்க்க முடியவில்லை (தற்சமயம் வெவ்வேறு நாட்டில் வசித்து வருகிறோமென்பதால் !)... என்னதான் இப்பொழுது மின்னஞ்சல், தொலைப்பேசி என்று அனைத்தும் நாம் உபயோகப்படுத்தினாலும் நேரில் பார்த்துக் கொள்ளும் பேசிக் கொள்ளும் தருணங்களின் நெகிழ்ச்சி இவற்றில் வருவதில்லையே?!

என்னடா இது... பெரிய பாச மலர் சிவாஜி கணேசன் சாவித்திரி அண்ணன் தங்கை போல் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்கள் தானே? சிறு வயதில் நாங்கள் போடாத சண்டையென்று ஒன்று கிடையவே கிடையாது! ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வோம்... ஆனால் வேறொருவரிடம் இது நாள் வரையில் இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை... இந்த சமயத்தில் எனக்கு "ஸர்ப் எக்ஸ்செல்" இன் ஒரு விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது...

அந்த விளம்பரம் வந்து சில ஆண்டுகள் ஆகின்றது.. ஆனால்.. அதைப் பார்க்கும் போது எனக்கு என் அண்ணன் நினைவு தான் வரும்... அந்த விளம்பரத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்... ஆனால் அது ஹிந்தியில் தான் கிடைத்தது... அதைக் கீழே உள்ள லிங்கில் தொடுத்துள்ளேன்.. பாருங்களேன்...

அருமையா எடுத்திருப்பாங்க இந்த விளம்பரத்த...!! என் அண்ணனை நான் பிரிந்திருக்கும் இந்தத் தருணத்தில் அவனை நினைத்துக் கொண்டிருந்த போது என் மனதில் தோன்றிய வரிகள்...

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த

நம் பெற்றோர்- ஒன்று

சேர்ந்தனர் திருமணத்தில்!

இருவரின் பாசப்பிணைப்பில் பிறந்தவர்கள்

நாம் இருவர்!

நீ முன்னே செல்ல

...உன்னைத் தொடர்ந்தவள் நான்!

வாழ்க்கையில் வரும் மேடு பள்ளங்களை

எதிர்கொண்டு அதனைத்

தனிமனிதனாய்க் கடந்து வந்தவன் நீ...!

அவற்றை நான் எதிர்கொள்ளும்

சூழ்நிலையில் என்னை

வழிநடத்தியவன் நீ!!

என் வாழ்க்கையென்னும் பாதையிலே

சிறு சிறு தோல்வி கண்டு

நான் அஞ்சிடவே...

முயற்சி திருவினையாக்குமென்பதை

உணர்த்தி என்னை வழிநடத்தியவன் நீ!!

உன்னைப் போலவே

என்னைத் தாங்குபவனாக...

ஒருவனைத் தேடிப்பிடித்து- என்

வாழ்க்கைத் துணையாக்கினாய் நீ!!

என் ஒவ்வொரு வெற்றியிலும்

என் உயிர் மூச்சாய் இருந்த நீ...

இக்கணம் என்னைத் தாங்க

இன்னொருவன் வந்துவிட்டாநென

ஓய்வெடுக்க நினைத்துவிட்டாயோ?!!

Thursday, July 16, 2009

இந்தியன் நா அவ்ளோ கேவலமா?


ஜெர்மனி ல எங்க வீட்டு பக்கத்துல ஒரு தமிழ் குடும்பம் இருக்குங்க... அந்த வீட்ல இருக்கும் கலைச்செல்வி என்னோட தோழி தானுங்க... ரொம்ப நல்லவங்க.. அமைதியானவங்க, நற்பண்பு கொண்டவங்க, சாதுவானவங்க, வாயில்லா பூச்சி ... இன்னும் சொல்லிக்கிட்டே போலாமுங்க!

சரி, நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்! அந்த கலைச்செல்வி அண்மையில் சென்னைக்கு போயிருக்காங்க... துபாய் வழியா தான் போனாங்க... துபாய் duty free பத்தி தான் உங்களுக்கு தெரியுமே! இவங்களும், தன் அக்கா மகளுக்கு ஒரு பொம்மைய வாங்கலாம்னு போயிருக்காங்க.... ஒரு பொம்மைய தேர்வு பண்ணி அத வாங்கிக்கலாம்னு counter க்கு போயிருக்காங்க! அங்க ஒரு ஆளு ( dubai shek போலும்! ) இவங்கள மேலையும் கீளையுமா பாத்திருக்கான்... இத கவனிக்காத நம்ம கலை யும் இத pack பண்ணுங்கன்னு சொல்லிட்டு காசு எடுத்து நீட்டி இருக்கார் ( euros )... ஆனா அந்த ஆளு இவர் கிட்ட வம்பு பண்ணனும் நு நெனச்சானோ என்னவோ euros லாம் வாங்கறதில்ல நு சொன்னானாம்... அந்த ஆளோட நோக்கம் புரியாத இவர் சரி அப்போ இந்தியன் ருபீஸ் ( indian rupees ) வாங்கிப்பீங்கலானு நம்ம காசை எடுத்து நீட்டி இருக்கார்!

இதுக்காகவே காத்துக்கிட்டிருந்தான் போல அந்தாளு!

"WE ACCEPT ALL CURRENCIES EXCEPT BLOODY INDIAN CURRENCY" நு சொல்லி இருக்கான்... இப்போது தான் அவனுடைய எண்ணம் புரிந்திருக்கிறது நம்ம கலைக்கு!
நான் தான் ஏற்கனவே சொன்னேனேங்க கலை ரொம்ப சாது, வாயில்லா பூச்சின்னு... பாவம், என்ன செய்றதுன்னு தெரியாம அங்கிருந்து வந்துற்றுக்கார்.. ஆனா இந்தியனையும் இந்திய நாட்டையும் கேவலமா பேசினவன சும்மா விட்டுட்டு வந்துட்டோமேங்கர வருத்தம் தாங்காம அவர் கண்லேருந்து மாலை மாலையா கண்ணீர் வழிந்திருக்கு!

இப்போ சொல்லுங்க.... இந்தியன் நா அவ்ளோ கேவலமா?