Wednesday, 22 July, 2009

எங்க நாய்க்குட்டிய சாப்ட வெக்க நாங்க நாயா பேயா அலையனுமுங்க!!


என்னம்மா அலம்பல் பண்ணும் தெரியுமாங்க என் நாய்க்குட்டி.. அது எங்க வீட்டுக்கு வந்தப்ப 2வாரக்குட்டிங்க... அதனாலேயே எங்கம்மா அதுக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க... நேரம் பாத்து பாத்து அதுக்கு சாப்பாடு போடுறது... அதுவும்... எப்டி தெரியுமா?? கீழ உக்காந்துக்டு அதோட கிண்ணத்த கைல பிடிசிக்க்டு சாப்டுடா செல்லம் சாப்டுனு சொல்லி சொல்லி சாப்ட வெப்பாங்க...!!

இது இப்டியே போயிற்றுந்துசுங்க.. நாளாக நாளாக எங்க நாய்க்கு(விக்கி) இது நல்லா பழகிடுச்சு... அம்மா கீழ உக்காந்துக்டு கைல கிண்ணத்த பிடிச்சிக்டு குடுத்தாத்தான் சாப்டும்.. இல்லன்னா எவ்ளோ நேரம் ஆனாலும் அப்டியே சாப்டாமலே இருக்கும்... இதுல.. சாப்பாடு கலந்து 3மணிநேரத்துக்கு மேல ஆயிடுச்சின்னா அத தொடவே தொடாது!! வேற புதுசா கலந்துக்டு வந்து அது கிட்ட கெஞ்சின்றுக்கணும்! சரி.. அது போகட்டும்...

இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்கப்பா...

கொஞ்ச நாள் கழிச்சி அதுக்கு அம்மா முகத்தையே பாத்து சாப்டு சாப்டு போர் அடிச்சிருக்கும் போல..!! எங்க எல்லாரையும் ஆட்டத்துல சேத்துக்கிச்சு... அம்மா உக்காந்துக்டு சாப்பாடு கிண்ணத்த பிடிச்சிக்குவாங்களாம், நானோ- இல்ல அண்ணாவோ -நாங்க ரெண்டு பேரும் இல்லன்னா எங்க அப்பாவோ அம்மா பக்கத்துல நின்னுக்டு அது(விக்கி) சாப்டறத பாக்கனுமாம்!!

அட!! நிக்கறது பரவால்லீங்க... அது சாப்டு முடிக்கிற வரைக்கும் வெச்ச கண்ணு எடுக்காம அதஎத் தான் பாத்துக்ற்றுக்கணும்!! சாப்டும் போது நடு நடுவுல அது நிமிந்து பாத்து அதைத் தான் பாத்துண்டிருக்கொமா இல்ல வேற எங்கயாவது பாக்ரோமானு "நோட்டம்" விடும்... அது பாக்கும் போது நாங்க... சரி சரி.. சாப்டுமா... "செல்லம்... என் பட்டு.. என் குட்டி.." இப்படிலாம் சொல்லணும்... சொன்னோம்னா சாப்டறத continue பண்ணும்!!

அப்டி இல்லாமவேற எதையாவது பாத்தோம்னா அவ்ளோதான்... சாப்டறத நிறுத்திடும் நிறுத்திப்புட்டு பெரிய மேதாவி மாறி அங்கிருந்து எந்திரிச்சி போயிடுமுங்க!! அப்புறம் அது பின்னாடியா 'நாயா பேயா 'அலையனும் அத சாப்ட வெக்கறதுக்கு!! இதையெல்லாம் நான் எங்கிட்டு போயிச் சொல்ல?? நீங்களே சொல்லுங்க!!

இந்த அநியாய அக்ரமத்த இது இரெண்டு வாரக் குட்டியா இருந்தப்போலேருந்து இன்னிக்கி(எப்டியோ எனக்கு கல்யாணமாகி வந்துட்டதனால நான் தப்பித்தேன்!) வரைக்கும் செஞ்சிக்க்டு இருக்குங்க!! என்னோட அண்ணனும் U.S. க்கு போயிட்டான்.. அதனால அவனும் பிழைத்துக்கொண்டான்.. பாவம், எங்க அம்மாவும் அப்பாவும் தான் எங்க விக்கி கிட்ட கெடந்து தவிக்கறாங்க!!

19 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

குப்பன்_யாஹூ said...

nice post

Priyanka said...

thank you...

tamil kathal said...

super

பிரியமுடன்.........வசந்த் said...

//நாய்க்கு(விக்கி)//

இன்னும் பேர மாத்தலையா தாயி

ஆனாலும் உங்க அகம்பாவம் குறையலயே தாயி ஆண்கள் இலக்காரமாகிட்டாங்களோ?

ஆனா சிரிப்பா எழுதுறீங்க தொடர்ச்சியா எழுதி பல பேர் வாழ்த்துக்கள் பெற வாழ்த்துக்கள் மேடம்.......

Priyanka said...

அய்யய்யோ... தப்பா நெனச்சிப்பிடாதீங்க வசந்த் அண்ணா(அப்டி கூப்டலாமுங்களா??)!!

இளக்காரம் அது இதுன்னு ஏதேதோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க!! :(அப்படிலாம் ஒன்னுமில்லேங்க....

என் நாய்க்கு இப்போ 9வயசு ஆவுதுகோ!! இதுக்கு மேல நான் அதோட பேர மாத்தினாலும் வேற பேர வச்சி கூப்டாலும் அதுக்கு புரியனுமுங்களே!!

அப்பரம் உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி...

பிரியமுடன்.........வசந்த் said...

// Priyanka said...
அய்யய்யோ... தப்பா நெனச்சிப்பிடாதீங்க வசந்த் அண்ணா(அப்டி கூப்டலாமுங்களா??)!//

பாசமலரே ....வரவேற்கிறேன்....

டி,ராஜேந்தர்
விஜயடி,ராஜேந்தர் புரியுதுங்களா பேர மாத்தல அடுத்தவாட்டி வரமாட்டேன் சத்தியமா........

Priyanka said...

:-) ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா...


டி,ராஜேந்தர்
விஜயடி,ராஜேந்தர் புரியுதுங்களா பேர மாத்தல அடுத்தவாட்டி வரமாட்டேன் சத்தியமா........

இவங்கல்லாம் வரவேணாம் அண்ணா... இங்க.. நீங்க மட்டும் வந்தீங்கன்னா போதும்.. :-)

பிரியமுடன்.........வசந்த் said...

//:-) ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா...


டி,ராஜேந்தர்
விஜயடி,ராஜேந்தர் புரியுதுங்களா பேர மாத்தல அடுத்தவாட்டி வரமாட்டேன் சத்தியமா........

இவங்கல்லாம் வரவேணாம் அண்ணா... இங்க.. நீங்க மட்டும் வந்தீங்கன்னா போதும்.. :-)//

பிரியா உனக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாய்டுச்சுdi

Priyanka said...

:)

सुREஷ் कुMAர் said...

ஆஹா.. சூப்பரா இருக்கு.. உங்களுக்கு கொடுத்துவெச்சிருக்கு..

அதுங்கள வளர்ப்பதே தனி சுகம்தான்..

நல்ல பகிர்வு..

எப்டியோ பெத்த புள்ளைங்க ரெண்டுபேர் இருந்தும் பெத்தவங்க அந்த ஜீவனோட வாழ்ந்துட்டு இருக்காங்க..

(கருத்தில் ஏதும் தவறு இருப்பின் மன்னிக்கவும்..)

SUMAZLA/சுமஜ்லா said...

நாய் குட்டி கதை நல்லா இருக்குங்க!

Priyanka said...

//ஆஹா.. சூப்பரா இருக்கு.. உங்களுக்கு கொடுத்துவெச்சிருக்கு..

அதுங்கள வளர்ப்பதே தனி சுகம்தான்..

நல்ல பகிர்வு..

எப்டியோ பெத்த புள்ளைங்க ரெண்டுபேர் இருந்தும் பெத்தவங்க அந்த ஜீவனோட வாழ்ந்துட்டு இருக்காங்க..

(கருத்தில் ஏதும் தவறு இருப்பின் மன்னிக்கவும்..)//நன்றி...!! தவறா ஏதும் நீங்க சொன்ன மேரி தெரியலீங்க...

Priyanka said...

//நாய் குட்டி கதை நல்லா இருக்குங்க!//


மிக்க நன்றி...!!

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html

please take it

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : டேய் கரிச்சட்டி மண்டையா .. இங்கே பாருடா ஒரு குடும்பமே விக்கிய (ஆமா அத நாம் நாயின்னு சொல்ல அதுக்கு அந்த குடும்பம் சண்டைக்கு வந்தாலும் வருவாங்க ) எப்படி பாத்துக்கராங்கன்னு ?? இனிமேலாவது கல்ல மடியில கட்டி நாய அடிக்கிற வேல வச்சுக்காதே ....

Priyanka said...

//கவுண்டர் : டேய் கரிச்சட்டி மண்டையா .. இங்கே பாருடா ஒரு குடும்பமே விக்கிய (ஆமா அத நாம் நாயின்னு சொல்ல அதுக்கு அந்த குடும்பம் சண்டைக்கு வந்தாலும் வருவாங்க ) எப்படி பாத்துக்கராங்கன்னு ?? இனிமேலாவது கல்ல மடியில கட்டி நாய அடிக்கிற வேல வச்சுக்காதே ....//அட!! இதுல சந்தேகப்படரதுக்கு எதுவுமே இல்லீங்க... கண்டிப்பா சண்டைக்கு தான் வருவோம்!

முடிஞ்சா உங்க கிட்ட இருக்குற கல்ல பிடிங்கி உங்களையே அடிப்போம்..!! ;-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//முடிஞ்சா உங்க கிட்ட இருக்குற கல்ல பிடிங்கி உங்களையே அடிப்போம்..!! ;-)//

கவுண்டர் : வாம்மா .. விக்கிக்கு பாலும் தேனும் , எனக்கு கல்லா ? பெரியோர்களே .. இந்த அநியாயத்த யாரும் கேட்க மாட்டீங்களா ?

Priyanka said...

//கவுண்டர் : வாம்மா .. விக்கிக்கு பாலும் தேனும் , எனக்கு கல்லா ? //

:-) பின்ன..?? எங்க ஆசை நாய்க்குட்டிய கல்லெடுத்து அடிச்சா சும்மாவா விடுவோம் நாங்க?? :)

(தவறா நினைக்க வேண்டாம்! நான் சொன்னது உங்களை வருத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இனிமேலாவது கல்ல மடியில கட்டி நாய அடிக்கிற வேல வச்சுக்காதே ....//

/
கவுண்டர் : ஏம்மா நான் அந்த கரிச்சட்டி மண்டயன தான அடிக்க வேணாம்னு சொன்னேன் !!!