Monday 17 August 2009

நாயும் நம்மள மாறித் தானுங்க!!


நாய் நன்றியுள்ளது ன்னு நாம சொன்னாலும், பொதுவா... மிருகங்களுக்கு யோசிக்கற திறன் கிடையாது.. அதுங்களுக்கு 5அறிவு தான், அதனால எந்த ஒரு விஷயத்தையும் யோசிச்சி அதுக்கப்புறம் செயல்படத் தெரியாதுன்னு தான் நாம நினைக்கறோம்.. நானும் அப்டித் தானுங்க நெனச்சிக்கிட்ருந்தேன்...



ஏதாச்சும் படத்துல நாய் அழகா எதையாவது யோசிச்சி செஞ்சா.. உதாரணத்துக்கு

1.ஒரு பந்த தூக்கி போட்டா அத ஓடிப் போயி எடுத்துக்கிட்டு வரும் போது...

2.தன்னை வளர்ப்பவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துச்சின்னா அந்தத் தீங்க எதிர்த்துப் போராடறது..



அதுக்கு பழக்கப் படுத்தி இருக்காங்க ன்னு தான் நான் நெனச்சிக்குவேன்...



ஆனா, நான் நெனச்சது தப்புன்னு என்னோட 'விக்கி' எனக்கு (அதோட செயல்களால)புரிய வெச்சிடுச்சிங்க... அப்டி என்ன செஞ்சிதுன்னு பாக்கறீங்களா...?? பெருசா ஒன்னும் இல்லங்க... சாதாரண தினசரி வேலைகள் தான்...



உதாரணமா இதச் சொல்றேன்ங்க...

தெனமும் அதுக்கு(எங்க விக்கி கு) சாப்பாடு கொடுத்ததுக்கு அப்புறம் எங்க அம்மா குளிர்சாதனப் பெட்டி லேருந்து குடி தண்ணீர எடுத்து அதோட கிண்ணத்துல ஊத்தி வெப்பாங்க... அதுவும் சமத்தா அத குடிச்சிட்டு போயி படுத்துக்கும்!



ஒரு நாள், எங்க அம்மா அதுக்கு சாப்பாடு மட்டும் போட்டுட்டு... மறதில தண்ணிய குடுக்காம விட்டுட்டாங்க... அது கொஞ்ச நேரம் எங்க அம்மாவையே சுத்தி சுத்தி வந்துச்சி.. அப்பவும் எங்க அம்மாவுக்கு புரியல! அவங்களோட வேலைஎல்லாத்தையும் முடிச்சிட்டு போயி உக்காந்துட்டாங்க... எங்க விக்கி என்ன பண்ணுச்சி தெரியுமா ங்க? அம்மா வோட புடைவை அதோட வாயால பிடிச்சி இழுத்துக்கிட்டு சாப்பிடும் அறைக்கு(dining hall) போயி, குளிர்சாதனப் பெட்டி கிட்ட போயி நின்னு எங்க அம்மாவ பாத்துச்சி... அப்பவும் அது என்ன சொல்லுதுன்னு புரியாம 'என்ன டா? என்ன வேணும் உனக்கு?னு கேட்ருக்காங்க அம்மா... அது குளிர் சாதனப் பெட்டிய ஒரு முறை பாக்குது, அப்புறம் போயி அதோட சாப்பாடு தட்டையும் கிண்ணத்தையும் வெச்சிருக்ற அலமாரிய காட்டுது... திரும்ப வந்து குளிர்சாதனப் பெட்டிய காட்டுது...' அத பாத்துட்டு நான் அம்மா அது தண்ணி கேக்குதோ என்னமோ னு சொல்லி கொஞ்சம் தண்ணிய(குளிர்சாதனப் பெட்டி லேருந்து எடுத்து) ஊத்திக் குடுக்க அது அந்தத் தண்ணிய குடிச்சிட்டு போயி படுத்துக்கிச்சி!!



இன்னொரு உதாரணம் ங்க...



எங்க அப்பா தான் அத 'சூச்சு' போக வெளில கூட்டிக்கிட்டுப் போவாரு... ஆனா, மழை வந்துற்றுந்ததனால ஒரு நாள் ரொம்ப நேரம் ஆகியும் அப்பா அத வெளில கூட்டிட்டு போகல!! (எங்க விக்கி ரொம்ப சமத்துங்க... அவன் குட்டியா இருக்கும் போது ஒரு முறை தான் வீட்ல 'சூச்சூ' போயிட்டான், அப்போவே அவன அம்மா திருத்திட்டாங்க... அவன் சுச்சு போன எடத்த காட்டி வெளில தான் போகணும் னு சொன்னாங்க... அன்னிலேருந்து அவன் எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்குள்ள அப்டி போக மாட்டான்!!) வெளில னு சொன்னதும் நம்ம நண்பர் 'ராஜ்' அதாங்க... நம்ம 'குறை ஒன்றும் இல்லை ராஜ்' கௌண்டற கூட்டிக்கிட்டு 'தெருவ நாசம் பண்ணா மட்டும் பரவா இல்லியா ன்னு' வந்திடப் போறாரு...



கொஞ்சம் பொறுமையா மேல படியுங்க ராஜ்... நான் வெளில னு சொன்னது எங்க வீட்டுக்கு வெளில தான், சாலைல இல்ல... எங்க தோட்டத்துல ஒரு எடத்த ஒதுக்கிட்டோம் அவனுக்காக!! :)



சரி நானு என்ன சொல்ல வரேன் னு சொல்லிடறேனே... மழை வந்ததால ரொம்ப நேரமா விக்கி ய அப்பா வெளில கூட்டிட்டு போகல! மழை வருதுங்கறதால அதுவும் பேசாம இருந்துச்சி... ஆனா, மழை நின்னுப் போன அப்புறம் அப்பா எதோ வேலையா விக்கி ய வெளில கூட்டிட்டு போகாம விட்டத மறந்துட்டாரு போல.. அது... அப்பாவா நம்மள கூட்டிட்டு போவாங்க னு பாத்து பாத்து இது ஆவறதில்ல னு நெனச்சிதோ என்னவோ... நேரா போயி அப்பாவோட ஆடைய பிடிச்சி இழுத்துது... அப்பாவுக்கு ஒன்னும் புரியாம 'என்ன டா?னு கேட்டு அது பின்னாடியே நடந்து போனாருங்க... அது, வாசல் வர போயி நின்னுக்கிட்டு, அப்பாவ ஒரு முறை பாக்குது, வாசல் கதவ ஒரு முறை பாக்குது...'





அப்பவும் அப்பாவுக்கு புரியல!! போடா னு சொல்லிட்டு ஹால் ல வந்து உக்காந்துக்கிட்டாறு... அது திரும்பவும் வது அப்பாவ ஒரு முறை பாத்துட்டு, வாசல் கதவ காட்டுச்சி... அப்பவும் என்னன்னு புரியாம அப்பா அத பாக்கவே... நேரா போயி வாசல் கிட்ட நின்னுக்கிட்டு அதோட கால தூக்கி அது சூச்சு போற பாணியில ஒரு முறை நின்னு காட்டிட்டு கால எறக்கிட்டு திரும்பவும் அப்பாவ பாத்துட்டு வாசல் கதவ காட்டுச்சி!!



இத்தனிக்கும், நாங்க எங்க விக்கி ய பழக்கப்படுத்தல் ங்க... அதாங்க... training குடுக்கல... ஆனாலும் எவ்ளோ யோசிக்குது பாருங்க அது?! இந்த ரெண்டு உதாரணம் தான் இருக்கு னு நெனைக்காதீங்க... நான் எங்க விக்கி ய பத்தி சொல்ல ஆரம்பிச்சேன் நா ஒரு நாள் இல்ல எத்தன நாள் ஆனாலும் சொல்லிக்கிட்டே இருக்கலாம்... ஆனா, 'நீங்க ல்லாம் பாவம்'ல... அதான் இதோட நிறுத்திக்கறேன்(இப்போதைக்கு.. ஹி ஹி ;))!!




தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

14 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

பிரியமுடன்...வசந்த் said...

அதானே.....

உன்ன திருத்தவே முடியாதாdi

நாய்க்கடிக்கு விரைவில் ஆளாவாய்

:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்க பேர பேசாம மேனகான்னு மாத்திக்கோங்க.. ஏன்னா பிரியங்கானு பேர வச்சிகிட்டு மேனகா காந்தி வேலைய பாக்கிறீங்க..






ஆமா.. இனிமே உங்க விக்கிய பத்தி எழுதுவீங்களா?

நிலாமதி said...

உங்க விக்கியின் சாகசங்கள் ரொம்ப அருமை தொடருங்க.

இராகவன் நைஜிரியா said...

நாய் மட்டுமல்ல, நிறைய மிருகங்கள் தன்னை வளர்ப்பவரிடம் ரொம்ப நன்றி உடையதாகவும், பாசம் காட்டுவதாகவும் இருக்கின்றன.

நன்றி காட்டுவதில் சில மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ மேலானாதாக இருக்கின்றன.

இது நம்ம ஆளு said...

உண்மை

நாய் அழகா எதையாவது யோசிச்சி செஞ்சா.. உதாரணத்துக்கு

நம்ம பதிவுக்கு வரவும்

"பிரியங்கா" said...

பிரியமுடன்...வசந்த் said...
அதானே.....

உன்ன திருத்தவே முடியாதாdi

நாய்க்கடிக்கு விரைவில் ஆளாவாய்

:)

//


ஹை... அண்ணா... கொழந்த படம் க்யுடா இருக்கு... :)

ம்ம்ஹ்ம்ம்... சான்சே இல்ல!! ;) அதெல்லாம் ஏற்கனவே ரெண்டு முறை கடிச்சிருக்கு என்ன...(விக்கி தான்)

ஆனாலும் நல்ல ஆச ண்ணா உங்களுக்கு!:(

"பிரியங்கா" said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
உங்க பேர பேசாம மேனகான்னு மாத்திக்கோங்க.. ஏன்னா பிரியங்கானு பேர வச்சிகிட்டு மேனகா காந்தி வேலைய பாக்கிறீங்க..






ஆமா.. இனிமே உங்க விக்கிய பத்தி எழுதுவீங்களா?

//


ஏனுங்க?? ஏன் உங்களுக்கு இந்த வேல?? அரசியல்வாதி மாறி தெரியுதா உங்களுக்கு என்ன பாத்தா?? இப்டிலாம் சொன்னீங்கன்னா நான் எப்டி இன்னொரு முறை என் விக்கி ய பத்தி எழுதறது??
சத்தியமா இனிமே...நானு...
நானு... விக்கி ய பத்தி... எழுதவே மாட்டேன்... 'இப்டி சொல்வேன் னு எதிர்பாக்கரீங்களா??'

NO WAY!! என் விக்கி ய பத்தி நான் எழுதாம வேற யாரு நீங்க எழுதுவீங்களா??;) :)

"பிரியங்கா" said...

நிலாமதி said...
உங்க விக்கியின் சாகசங்கள் ரொம்ப அருமை தொடருங்க.

//

நன்றிங்க... நீங்களும் தொடர்ந்து இந்தப் பக்கம் வாங்க..!! :)

"பிரியங்கா" said...

இராகவன் நைஜிரியா said...
நாய் மட்டுமல்ல, நிறைய மிருகங்கள் தன்னை வளர்ப்பவரிடம் ரொம்ப நன்றி உடையதாகவும், பாசம் காட்டுவதாகவும் இருக்கின்றன.

நன்றி காட்டுவதில் சில மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ மேலானாதாக இருக்கின்றன.

//

100 சதவிகிதம் உண்மை ங்க... :)

"பிரியங்கா" said...

இது நம்ம ஆளு said...
உண்மை

நாய் அழகா எதையாவது யோசிச்சி செஞ்சா.. உதாரணத்துக்கு

நம்ம பதிவுக்கு வரவும்
//

நன்றிங்க... :) இதோ வரேன்.. :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல வேலை விக்கி பாசம் ஓவராகி நாயும் நம்மள மாதிறி தான்னு சொல்லாம நாமளும் நாய் மாதிறி தான்னு சொல்லாம விட்டீங்களே..

ஆமா சென்னை வந்தாச்சா?

"பிரியங்கா" said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல வேலை விக்கி பாசம் ஓவராகி நாயும் நம்மள மாதிறி தான்னு சொல்லாம நாமளும் நாய் மாதிறி தான்னு சொல்லாம விட்டீங்களே..

ஆமா சென்னை வந்தாச்சா?

//


:) ஹ்ம்ம்ம்ம்... நக்கலு...??

ம்ம்ம்ம்... இன்னும் இல்லீங்க.. அதப்பத்தி உங்களுக்கு மின்னஞ்சல்ல அனுப்பறேன்ங்க.. :)

சப்ராஸ் அபூ பக்கர் said...

நாயும் நம்மள மாதிரின்னு சொல்லிட்டீகளே..... முடியல... நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்... (லொள்....)

ஆனால் ஆக்கம் சூப்பரோ சூப்பர்........

"பிரியங்கா" said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
நாயும் நம்மள மாதிரின்னு சொல்லிட்டீகளே..... முடியல... நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்... (லொள்....)

ஆனால் ஆக்கம் சூப்பரோ சூப்பர்........
//


நீங்க ஒத்துக்கலைன்னாலும் அது உண்மை தான் ங்க... ;) :) நம்மள மாதிரித் தான் அதுக்கும் உணர்வுகள் இருக்கும், பாசம் இருக்கும், அதோட உண்மையான பாசத்தோட இருக்கும்!!


உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிங்க... :) தொடர்ந்து வாங்க... :)