Monday, 10 August, 2009

பன்றிக்காய்ச்சல் கிருமியும்...அது பரவாமல் இருக்க பின்பற்றவேண்டிய வழிகளும்...


"வெளி நாடுகள்ல சுகாதாரமா இருப்பாங்க, நாமளும் அங்க போனா அப்டி இருக்க முடியும்...!!" ஒரு காலத்துல இப்டி தான் நெனச்சிற்றுந்தோம் எல்லாரும்... நம்ம இந்தியர்கள் நாலும் இந்தியான்னாலும் அவ்ளோ கேவலம் அவனுங்களுக்கு(வெள்ளக் காரனுங்களுக்கு)..

என்னமோ அவனுங்க எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கற மாறியும், நாமல்லாம் எதோ குப்ப மேட்டுல இருக்கற மாறியும் தான் பாப்பானுங்க நம்மள?! என்னத்த சுகாதாரமுங்க இருக்கு அங்க?? சும்மா சொல்லிக்கவேண்டியது தான்... இன்னும் சொல்லப் போனா மேலை நாடுகள்லேருந்து தான் எல்லா விதமான புதுப் புது நோயும் வருது நம்ம ஊருக்கு! :( "எய்ட்ஸ்"ங்கற கொடுமை இவனுங்க கிட்டேருந்து தான் நமக்கு தொத்திக்கிச்சி... அது போதாதுன்னு இப்ப புதுசா "பன்றிக்காய்ச்சல்"னு ஒரு கொடுமை வந்து எல்லாரையும் கலங்க வெச்சிக்கிற்றுக்கு... எய்ட்ஸ் கிருமி (HIV) பரவாம இருக்க நாம கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துட்டா மட்டும் போதும்...

ஆனா... இப்போ வந்திருக்கற பன்றிக் காய்ச்சல் கிருமி(H1N1) காத்துல பரவக்கூடிய ஒன்னு! இதக் கட்டுப்படுத்த முடியாம, அந்தக் கிருமி தாக்கியத கண்டுபிடிக்கறதுக்கு முன்னாலேயே இறந்து போனவங்களோட(போறவங்களோட) எண்ணிக்க எரிக்கிட்டேத் தான் போகுது... அப்பாவி மக்கள் எத்தன பேர் இதனால அவதிப் படறாங்கன்னு நினைக்கரச்சே கதி கலங்குது...

பன்றிக்காய்ச்சல் "FLU" என்னும் வகையைச் சேர்ந்தது... இவ்வகையான நோய்க்கு தடுப்பு ஊசி இருக்கு.. ஆனா, பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தற கிருமிக்கு(H1N1) இவ்வூசியைப் போட்டாலும் எவ்விதப் பயனுமில்லை... இன்னும் H1N1 கிருமிக்கு தடுப்பு ஊசி தயாரிக்கப்படலைங்கறது ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம்...
இந்தப் பன்றிக் காய்ச்சல் வராம தடுக்க தடுப்ப ஊசி(vaccine) ஏதும் இன்னும் இல்லைன்னாலும், இந்தக் காய்ச்சல் பரவாம தடுக்கறதுக்கு ஒரு சில வழிகள் இருக்கு...

அவை பின்வருமாறு...

1. இடைவெளி:

உடல் நிலை சரியில்லாதவர்களிடத்தில்( இருமல், தும்மல், காய்ச்சல் ) சற்று ஒதுங்கி உக்காருங்கள்.

2. ஓய்வெடுங்க:

உங்களுக்கு இருமலோ, தும்மலோ, காய்ச்சலோ இருந்தா வெளில(பள்ளி, கல்லூரி,அலுவலகம்,...) போகாம வீட்லயே இருந்திடுங்க. இதன் மூலம், ஒருவேளை உங்களை இந்தக் கிருமி தாக்கி இருந்தா அது மத்தவங்களுக்கு பரவாம நீங்க தடுக்க முடியும்!

3. மறைக்கவும்:

உங்களுக்கு தும்மலோ, இருமலோ வந்தா ஒரு கைத்துணியை(handkerchief) வைத்தோ அல்லது பயன்படுத்திய பின் தூக்கி எரியக்கூடிய காகிதத்தையோ (tissue paper) வைத்து உங்கள் வாயை மறையுங்கள்...

4. கை கழுவுங்கள்:

அடிக்கடி உங்கள் கையை கழுவுங்கள்... இதன் மூலம், கிருமி தாக்குதலை ஓரளவு கட்டுப் படுத்தலாம்... அடிக்கடி கை கழுவ இயலாதவர்கள் "alcohol based gel" (தமிழாக்கம் தெரியவில்லை மன்னிக்கவும் ) பயன்படுத்தவும்...

5. தொடாதீர்கள்:

இந்தக் கிருமி ஒரு மேஜையின் மீதோ அல்லது வேறெதும் பொருளின் மீதோ சில நொடிகள் உயிருடன் இருக்க வல்லது... எனவே, தேவையில்லாமல் உங்கள் கண், மூக்கு மற்றும் வாயினைத் தொடாதீர்கள்! ஏனென்றால் நீங்கள் உங்களையும் அறியாமல் அந்தக் கிருமியைத் தொட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது!

6. முக மூடி:

தேவைஎனில் உங்கள் முகத்தை (கண்களைத் தவிர்த்து) ஒரு முக மூடியை(mask) அணிந்து கொண்டு செல்லுங்கள்!

குறிப்பு:

இதெல்லாம் நான் கேள்விப்பட்ட, எனக்குத் தெரிஞ்ச வழிகள் (preventive measures)... வேற ஏதாவது விட்டுப் போயிருந்தா தயகூர்ந்து சொல்லுங்க!

நன்றி!!


தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

8 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

சப்ராஸ் அபூ பக்கர் said...

///என்னமோ அவனுங்க எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கற மாறியும், நாமல்லாம் எதோ குப்ப மேட்டுல இருக்கற மாறியும் தான் பாப்பானுங்க நம்மள?! என்னத்த சுகாதாரமுங்க இருக்கு அங்க?? சும்மா சொல்லிக்கவேண்டியது தான்...///

அடிச்சீங்க பாருங்க ஸிக்ஸர்....... வாவ்.....

நல்ல ஒரு தகவல். வாழ்த்துக்கள்.....

Priyanka said...

//அடிச்சீங்க பாருங்க ஸிக்ஸர்....... வாவ்.....

நல்ல ஒரு தகவல். வாழ்த்துக்கள்.....//


வாங்க சப்ராஸ் அபூ பக்கர்...!

உங்க வாழ்த்துக்கு நன்றிங்க...

உங்க வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி... :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல பகிர்வுங்க..நன்றி..

Priyanka said...

//நல்ல பகிர்வுங்க..நன்றி..//நன்றிங்க...

பிரியமுடன்.........வசந்த் said...

இடுகைக்கு நன்றி

பி பார்ம் பேசுகிறது

K.MURALI said...

Please find a link which will take you to a Tutorial on H1N1.
http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/h1n1flu/htm/_no_50_no_0.htm

Thanks.
Murali.K

Priyanka said...

//இடுகைக்கு நன்றி

பி பார்ம் பேசுகிறது//

நன்றி அண்ணா... :)

Priyanka said...

// K.MURALI said...
Please find a link which will take you to a Tutorial on H1N1.
http://www.nlm.nih.gov/medlineplus/tutorials/h1n1flu/htm/_no_50_no_0.htm //

thank you MURALI for your valuable info link and also for ur feedback... :)