Friday, 31 July, 2009

காதல் சின்னம்- மூளையா இதயமா?


இதயத்துக்கும் உணர்ச்சிகளுக்கும்(அன்பு, காதல்...) சம்பந்தமே இல்லை தானே?! பிறகு ஏன் அதைக் காதல் சின்னம்னு சொல்றாங்க?

இதப்பத்தி யோசிச்சி நாம நம்ம தலைய பிச்சிக்க்ரத விட... வாங்களேன் இதயத்துக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் விவாதத்தைக் கேட்கலாம்!!

மூளை - வணக்கம் இதயம்! நல்லா இருக்கியா?

இதயம் - அடடே... வாங்க வாங்க... நான் நல்லா இருக்கேன்... நீங்க நல்லா இருக்கீங்களா?

மூளை - எதோ இருக்கேன் போங்க...

இதயம் - அட... என்னாச்சு?? ஏன் இப்டி சலிச்சிக்கறீங்க?

மூளை - சலிச்சிக்காம பின்ன வேற என்ன செய்யச்சொல்லுரீக? இந்த மனுஷ பயலுங்க தான் இப்டி நன்றி கெட்ட தனமா நடந்துக்கரானுங்கன்ன நீயும் அப்டித்தான் இருக்க! நீயாவது அவனுங்களுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லி புரியவெக்கப்படாதா? நீயும் இப்டி அவனுங்களோட சேந்து ஆடுறியே?!

இதயம் - என்ன? மூளையாரே! ஏதேதோ சொல்றீக! என்ன தான் சொல்ல வரீக நீங்க??

மூளை - இப்டி கேளு... நான் சொல்லுறேன்...
... நீ யாரு? உன்னோட வேலை என்ன? இந்த பாவி மனஷனுங்களோட ரத்தத்த சுத்திகரிச்சி அத இவனுங்க உடன்பு முழுக்க ஓட விடறதுக்கு உழைக்கறவன் தானே?

இதயம் - ஆமா... அதுக்கென்ன இப்போ? அதுக்கும் நீங்க சொல்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

மூளை - அட இருப்பா! என்ன பேச விடு... நான் கேக்கறதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு போதும்...

இதயம் - ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சரி கேளுங்க...

மூளை - நீ ரத்தத்த சுத்திகரிச்சி அத மனுஷ பயலுங்க ஒடம்புல ஓட விடுறவன்... சரி.. நான் யாரு? இவனுங்க உணர்ச்சிய செயல்படவெச்சி அத கட்டுப்படுத்தவும், அத வெளிப்படுத்தவும் உதவறவன்... என்ன? நான் சொல்றது சரி தானே?

இதயம் - ஆமாங்க.. சரி தான்..

மூளை - அப்படி இருக்கறப்ப இந்த மனுஷ பயலுங்க என்ன தான காதல் சின்னமா வெச்சிருக்கணும்? படுபாவிங்க.. எதுக்கு உன்ன சின்னமா சொல்றானுங்க?
அவனுங்க தான் அப்டி புத்தி கெட்டுப் போயி அப்டி செஞ்சானுங்கன்னா... உனக்கெங்க போச்சு புத்தி?? நீயாவது சொல்லி இருக்கனுமா வேணாமா?

அத விட்டுப்புட்டு, நீயும் ஈ னு இளிச்சிக்கிட்டே அவனுங்க பின்னாடி போற! உனக்கு வெக்கமா இல்ல?

இதயம் - நான் எடுத்துச் சொல்ல வேண்டியது மனுஷனுங்களுக்கில்லைய்யா... உனக்குத் தான்...

மூளை - என்ன கிண்டலா? என்ன சொல்லணும் எனக்கு? அதுவும் நீ?

இதயம்- உன்ன விட நான் தான் ஒசந்தவன்! அதனாலத் தான் என்ன மதிச்சி அவங்க காதல் சின்னம் னு சொல்றாங்க...மூளை - எது? நீ என்ன விட ஒசந்தவனா? ஹி ஹி... சர்தான் போயா

இதயம் - நான் சொல்றது உண்மைப்பா... நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது?

மூளை - சரி அதையும் பாத்துர்லாம்யா... எந்த விதத்துல நீ ஒசந்த்வனுங்கர நீ?

இதயம் - நான் உங்களோட போட்டி போட விரும்பல... சரி... இத மட்டும் கேளுங்க...

நீங்க தான் உணர்ச்சிகள செயல்பட வைத்து அதை வெளிப்படுத்தவும் உதவுகிறீர்கள்... ஆனால்... அவங்க உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளும் இறந்து போன பிறகும் சில நொடிகள் துடித்துக் கொண்டிருப்பவன் நானே!! இத்தகைய மதிப்பிற்குரியவனான என்னை மனிதர்கள் தங்கள் உறவான வாழ்க்கைத் துணையாக வரவிருப்பவருக்கு தங்கள் காதல் சின்னமாக சமர்ப்பிக்கின்றனர்!
Thursday, 30 July, 2009

பாக்யலக்ஷ்மி...!!


தமிழ்ச்செல்வன் ஒரு பிரபல வங்கி ஊழியன். அனைவரிடமும் வெகு இயல்பாகப் பழகுவான். அன்பும், பண்பும் மிக்கவன். ஆனால் கொஞ்சம் கோபம் அதிகம். சட்டென்று எரிந்து விழுவான். பின்பு, தன் தவறை உணர்ந்து தானே சென்று தான் செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு விடுவான், அது யாராக இருந்தாலும் சரி!

ஆனால் ஒரு முறையும் அவனுக்கு இந்த வாய்ப்பை அளித்ததே இல்லை அவன் மனைவி பாக்யலக்ஷ்மி! பல முறை இவன் அவளைக் கோபித்திருக்கிறான், திட்டி அவளைப் புண்படுத்தி இருக்கிறான். ஆனால் இவன் கோபம் தணிந்து இவன் மன்னிப்பு கேட்க நினைப்பதற்குள் பாக்யா முந்திக்கொள்வாள்.

ஒருமுறை, அலுவலகம் செல்லும் பொழுது மறதியாலும், கிளம்பும் அவசரத்தாலும் அன்று எடுத்துச்செல்ல வேண்டிய காசோலையை மறந்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட்டான். பாதி வழியில் தான் அவனுக்கு காசோலையை மறந்து போன விடயம் நினைவிற்கு வந்தது! இவனுக்கு உடனே தன் மனைவியின் மீது தான் கோபம் வந்தது(அதன் முன் தினம் அந்த காசோலையை அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று அவளிடம் கூறி இருந்தான்!). காசோலையை எடுத்துச் செல்ல வேண்டி வீட்டிற்கு திரும்பிவந்துகொண்டிருந்தான்.

வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கையில் தற்செயலாக, அந்த காசோலையைப் பார்த்த அவன் மனைவிக்கு நேற்று தன் கணவன் சொன்னது நினைவிற்கு வரவே, உடனே அதை எடுத்துக் கொண்டு தன் கணவன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். வழியில் தன் கணவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று அதனை ஒப்படைத்தாள்! ஆனால், தமிழ்ச்செல்வன் மிகுந்த கோபத்துடன் அவளை முறைத்து விட்டு தாம் வீதியில் நிற்கின்றோம் என்பதையும் பாராமல் அவளைத் திட்ட ஆரம்பித்தான். அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக கேட்டு விட்டு பின் மன்னிப்பும் கேட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினாள்!

ஏனோ, அன்று முழுவதும் தமிழ்ச் செல்வனுக்கு தன் வேலையில் ஈடுபாடில்லாமல் போனது. காசோலையை மறந்தது மட்டுமல்லாது, தன் மனைவியை அவசியமில்லாமல் திட்டியது அவன் நினைவிலேயே இருந்தது. "இது இரண்டுமே என் தவறு! ஆயினும், என்னவள் என்னை சிறிதும் கோபிக்காமல் பொறுமை காத்தாள்! என் கோபத்தால் நான் அவளை புன்படுத்திவிட்டேனே !" என்று வருந்தினான். அன்றிரவு எதுவுமே நடக்காதது போல வெகு இயல்பாக தன் கணவனிடம் பேசினாள் பாக்யா...

இவ்வாறாக, எப்போதுமே தன் மனைவியின் பொறுமையையும் தன் மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் கண்டு வியப்பான் தமிழ்ச்செல்வன்!!

ஒரு நாள், இருவருமாக உட்கார்ந்து தம் கல்யாணப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும், எவரேனும் வந்து கதவைத் தட்டினால் கூடக் கேளாதவர் போல...அதில் மூழ்கியே விட்டனர்! சுவாரஸ்யமாக புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் தமிழ்ச்செல்வனிடம் பாக்யலக்ஷ்மி தம் கல்யாணத்தில் எதைப் பற்றியோ சொல்லி சிரிக்க அவனுக்கு கோபம் வீறிட்டது... கோபம் கொண்ட அவன் எதோ கத்த ஆரம்பிக்க பாக்யலக்ஷ்மிக்கு எதுவும் விளங்கவில்லை! அவனை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்ல முயல்கிறாள்... ஆனால், அவளால் அது முடியாமல் போனது...

இம்முறை ஏனோ பாக்யாவும் வாதிக்கத் தொடங்கினாள்! வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் பேசிக்கொள்வதையும் நிறுத்தி விட்டு இரவு சாப்பிடாமலேயே உறங்கிவிட்டனர்! மறுநாள் காலை எழுந்ததும் அரக்க பறக்க எதையோ சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு ஓடி விட்டான் தமிழ்ச்செல்வன். அலுவலகத்தில் வேலைபளுவால் மதியம் வரை அவனால் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. மதியம் சாப்பிடும் சமயம் தான் அவனுக்கு பாக்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றிற்று...

சரி தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம் என்று நினைத்தவன் தன் கைப்பேசியை எடுத்து பாக்யாவின் கைப்பேசி எண்ணைத் தேடினான். ஆனால் பாக்யா என்ற பெயரே அதில் இல்லை! ஐயோ.. என்ன இது? கோபத்தில் நேற்று அவள் எண்ணை அழித்துவிட்டோமா என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அவனுடைய கைப்பேசி அழைப்பு மணியை எழுப்பியது!

"உன் செல்லம் பாவம் ல? என்ன மன்னிச்சிடு டா!"

என்ற வரிகள் தோன்றியது அவன் கைப்பேசியில்... தன் கைப்பேசியை அழுத்திப் பேசினான்... பேசியது பாக்யா!! நேற்று இரவே தான் தூங்கும் சமயம் தன் பெயரை இப்படி மாற்றி வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு விளங்கியது. .. பேசிவிட்டு கைப்பேசியை அணைத்துவிட்டு அவன் நினைத்த வார்த்தைகள்...

"அடிக் கள்ளி! இம்முறையும் நீயே முந்திவிட்டாயடி!!"

Wednesday, 29 July, 2009

ஜோடிப் புறாவில் ஒரு புறா!!


மேகம் கருத்து இடி இடிக்க
பூலோகம் இருட்டிட
மின்னல் கண் சிமிட்டி
அவ்விருளை விரட்டிட
அதிகாலை மழை பொழிகிறது!!மரங்களும் செடிகொடிகளும்
மழையின் வருகையை தத்தம்
தலையசைத்து வரவேற்றன!!பூத்துக் குலுங்கிய பூக்கள்
மேலும் சிரித்திட
சில்லென்ற காற்று என்
மேனியெங்கும் பரவிட
மெய்சிலிர்த்து நான் நின்றிட...ஒரு ஜோடிப்புராவில் ஒன்று
மட்டும் தனியே கடந்து தவித்தது...
ஏ புறாவே உன் தவிப்பு என்னவோ?!


Tuesday, 28 July, 2009

கிருஷ்ணாவின் அசட்டுத்தனமான சாமர்த்தியம்...!!கிருஷ்ணா என் எதிர் வீட்டில் வசிக்கும் அக்காவின் குழந்தை.. அவன் ரொம்ப சுட்டி... எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்... உதாரணத்திற்கு, அவனுக்கு ஒரு கார் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அதை உருட்டிக்கொண்டுபோய் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு துளியும் இருக்காது.. அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்ய நினைப்பான்.. அவ்வளவும், கார் அவன் கையில் வந்த ஐந்து நிமிடங்களில்..!!முதலில்... அவன் பெற்றோர் "அடடா.. எவ்வளவு ஆராய்ச்சி குணம் பாருங்க என் பையனுக்கு" என்பார்கள்... போகப் போக இவன் 'சில்மிஷங்கள்' அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலைத் தான் தந்தது.. அப்படி என்ன தான் செய்கிறான் என்கிறீர்களா?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... மேல படியுங்க..ஒரு முறை... மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சமயத்தில் மெழுகுவர்த்தி ஏதும் சட்டென்று கிடைக்காதலால் கிருஷ்ணாவின் தந்தை ஒரு பழைய காகிதத்தைப் பற்றவைத்து அதன் பின் மெழுவர்த்தியை தேடி எடுத்துப்பற்ற வைத்தார்... மறுநாள் காலையில் விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு, சன்னல் கதவுகளையும் சாத்தி விட்டு இருட்டில் எதோ செய்து கொண்டிருந்தான் கிருஷ்ணா... தற்செயலாக இவனைத் தேடிவந்த இவன் தந்தைக்கு ஒரு நிமிடம் உயிரே நின்று விட்டது.. அவன் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா?? மேஜை மேல் வைத்திருந்த அவனுடைய தந்தையின் சட்டையை பற்ற வைத்து விட்டு தூரத்தில் வந்தமர்ந்து கொண்டு அது எரிகிறதா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்கிறான்...அதன் பின் அதன் மேல் தண்ணீரை ஊற்றி அதை அனைத்து விட்டு என்னடா இது என்ன செய்ற நீனு கேட்டா... அவன் சொன்ன பதில்...

"துணிய எரிச்சா எவ்ளோ வெளிச்சம் வருதுன்னு பாத்துற்றுந்தேன்பா!!"
இவன் அட்டகாசம் தாளாமல் 3வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டனர்... அங்கும் இவன் சில்மிஷங்கள் ஓய்ந்தபாடில்லை! மற்ற குழந்தைகளின் பொருட்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது, அதை உடைத்து பார்ப்பது என்றெல்லாம் செய்ய ஆரம்பித்தான்... இவன் கேட்ட பொருளை மற்ற குழந்தைகள் கொடுக்கவில்லையானால் அதைப்பிடுங்கி தூர எறிவது என்றெல்லாம் செய்து கொண்டிருந்தான்...
இவன் சில்மிஷத்தைக் குறைக்க நினைத்த ஆசிரியர் சக மாணவ மாணவியர் முன் திட்டினால் அவனுக்கு புரியும் என்று நினைத்தாரோ என்னவோ.. அவனை சக மாணவ மாணவியர் முன் அப்படி செய்யக் கூடாது என்று அதட்டினார்... அப்போது ஒரு மாணவி அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள்! இவனுக்கு கோபம் வந்திருக்கும் போல...மதியவேளை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலைமுடியை (ஒரு பக்கத்து ஜடையைமட்டும்) 'பிளேடு' வைத்து அறுத்து விட்டான்... அறுத்தது மட்டும் அல்லாது அதை அவளிடம் காட்டி அவளை வெறுப்பேற்றி அதை குப்பைக் கூடையில் வீசி எரிந்து விட்டு வந்து அவன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்...ஒ வென அந்தப் பெண் வீரிட்டு அழ அந்த வகுப்பாசிரியர் வகுப்பிற்கு விரைந்து வந்தார்.. கிருஷ்ணாவின் இந்த வேலையைக் கண்ட அவருக்கு கோபம் வர அவனை அழைத்து அடிக்க முற்பட்டார்.. அப்போது அவன், ஏன் டீச்சர் என்ன அடிக்கறீங்க? அவ எண்ணப் பாத்து சிரிச்சா.. எனக்கு கோபம் வந்துச்சி.. அதனால்தான் நான் அவ முடிய அறுத்துட்டேன்.. நான் அவ முடிய அருத்தேன்னு உங்களுக்கு கோபம் வந்துச்சின்னா நீங்க என் முடிய அறுத்துப் போட்டுடுங்க! என்று தன் மொட்டைத் தலையில் ஆங்காங்கு முளைத்திருக்கும் முடியைக் காண்பித்தான் வெகு சாமர்த்தியமாக.. அவன் சொன்ன பதிலில் சிரிப்பு தான் வந்தது ஆசிரியருக்கு!!

விமானங்கள்!!இந்த வீடியோ எனக்கு மெயில் ல வந்ததுங்க..

இதுல கொஞ்சம் இருட்டா தெரியற பக்கம் இருக்கும் நாடுகளில் இரவு பொழுது... வெளிச்சமா தெரியற பக்கம் இருக்கும் நாடுகளில் பகல் பொழுது...

மஞ்சள் நிறத்தில் அங்கும் இங்குமாக அலையும் பூச்சிகள் போலக் காணப்படுவது விமானங்கள்!!

ஒரு நாளில் எத்தனை விமானங்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்றும் எப்போது திரும்ப வந்து சேர்கின்றன என்றும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்....

பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்கும் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்பும் விமானங்கள் தான் அதிகம்...


அழகான பூந்தோப்பு...


கீழ்காணும் லிங்கை அழுத்தி பின் அதனுள் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்து இழுக்கவும்... ( click and drag anywhere and all throughout the page/ wherever you like!)

அழகான பூந்தோப்பு நொடியில் உங்கள் கண்முன்னே!!

http://www.procreo.jp/labo/flower_garden.swf

பார்த்து விட்டு பிடித்திருந்தால் பின்னூட்டமும் உங்கள் வாக்கும் அளிக்கவும்!

Monday, 27 July, 2009

என் நாய்க்குட்டி செய்த அட்டூழ்யங்கள்...!!

எங்க நாய்க்குட்டி பண்ற அட்டூழ்யத்துக்கு ஒரு அளவே இல்லீங்க! இரண்டு முறை அது இரண்டு பேர துரத்தி அடிச்சிருக்கு...


முதல் சம்பவம்...

எங்கள் வீதியில் கணேஷ் என்றொரு சிறுவன் இருந்தான்... கொழு கொழுவென அமுல் பேபி போல இருப்பான்! அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவார் என் தந்தை... குட்டி friend என்று தான் அவனை அழைப்பார்.. எனக்கே பொறாமை ஏற்ப்படும் அளவிற்கு இருவரும் நன்றாக விளையாடுவர்.. எங்க விக்கி என் அப்பா செல்லம்! எங்க அப்பான்னா அதுக்கு உயிர்...!! அதனிடம் மட்டும் தான் அப்பா செல்லம் காட்ட வேண்டும் என்று நினைக்கும்!! நான் அவர் பக்கத்துல உக்காந்து பேசிற்றுக்கும் போது கூட கோபமாக சில நேரம் குறைக்கும்...

எனவே கணேஷைப் பார்த்தால் அதற்கு ஆகாது! அவனைப் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்ததோ என்னவோ தெரியவில்லை...! ஒரு நாள் அவன் அப்பாவுடன் விளையாட என் வீட்டிற்கு வந்திருந்தான்.. அவன் வந்திருக்கிறானே என்று விக்கி யை கட்டிப் போட்டுவிட்டு நான் உள்ளே சென்றேன்... கணேஷும் விக்கி கட்டி தான் இருக்கிறதென்று உள்ளே வந்து விட்டான்.. அப்பாவும் அவனிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார்...

எங்கிருந்து வந்ததோ தெரியவில்லைங்க எங்க விக்கி கு அவ்ளோ ஆக்ரோஷம்?! அதைக் கட்டி வைத்திருந்த சங்கிலியையும் அறுத்துக் கொண்டு கணேஷை நோக்கி ஓட ஆரம்பித்தது... அவன் பாவம் இதைக் கண்டதும் பயந்து போயி தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்... இதுவும் விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டே இருக்கிறது! இருவரும் எங்கள் வீதியைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர்..


என் அப்பாவும் விக்கி பின்னால் ஓட ஆரம்பித்தார்... வேண்டாம் டா விக்கி.. வந்துடறா னு சொல்லி சொல்லி அதன் பின்னால் ஓடி அப்பாவுக்கு கால் வலியும் மூச்சு இறைத்தும் தான் மிச்சம்... பாவம், கணேஷை ஓட ஓட விரட்டி அடித்தது அது..!!

அதன் கோபம் தீர அவனை துரத்தி விட்டு அது பாட்டுக்கு "பெரிய மேதாவி" போல எங்க வீட்டிற்குள் நுழைந்து அதன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டது... கணேஷ் கு தான் பயத்தில் ஜுரமே வந்து விட்டது... அன்று எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தியவன் தான்...! இன்று வரை அவன் வரவே இல்லை...

ஆனால் இன்றும் எங்கள் வீட்டு வழியாகச் செல்லும் போது நின்று அதனிடத்தில் (விக்கி யிடம்) பேசிவிட்டுத் தான் செல்வான்..

என்ன பேசுவான் தெரியுமா....??

டேய் விக்கி... என்ன ஓட ஓட விரட்டிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி வால் ஆட்ரியா?? இரு இரு உன்ன கவனிச்சுக்கறேன்!!
இரண்டாவது சம்பவம்...

என் அண்ணா பள்ளி சுற்றுலாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம்... எங்கள் அத்தை மகன் ஒரு வேலையாக எங்க வீட்டிற்கு வந்திருந்தார்.. இரவு வேளை ஊருக்கு செல்ல வேண்டாம் என்று அப்பா சொன்னதால் எங்க வீட்டில் தங்கினார்... மாற்றுத் துணி ஏதும் கொண்டு வராததால் என் அண்ணனுடைய நைட் பான்ட் ஐ அணிந்து கொண்டு தூங்கி இருக்கிறார்.. மறுநாள் காலையில், என் அம்மா விக்கி க்கு பாலோ சாப்பாடோ கொடுப்பதற்காக அதனை உள்ளே அழைத்து வந்தார்... அப்போது அங்கு உறங்கிக் கொண்டிருந்த எங்க அத்தை மகன் அணிந்திருந்த என் அண்ணாவினுடைய (pant) பான்ட்டை அது பார்த்து விட்டு அண்ணா தான் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டது போலும்! ஓடி சென்று அவர் படுத்திருந்த படுக்கையின் மேல் எரிக் கொண்டு அவருடைய காலை நக்க ஆரம்பித்தது... இதனைப்பார்த்து பயந்து போன அவர் வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தார்!

அது என் அண்ணா இல்லை என்று அறிந்ததும் விக்கி யும் அவரைத் துரத்த ஆரம்பித்தது... அவரை ஏற்க்கனவே ஒரு நாய் கடித்திருப்பதால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அந்த அறையின் கதவின் மேல் ஏறிக்கொண்டு கத்த ஆரம்பித்தார்... அதன் பின் என் அப்பா ஓடி வந்து அதனை கட்டிப்போட்டார்..

உயிரோட்டமற்ற நொடி..!!என்னவர் என்னை விடுத்து பனி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த வேளையில் மழை வந்து கொண்டிருந்த சமயம் நான் கிறுக்கியது....!!


நீல வானம் கரு கருக்க...


பூமியைச் சுட்டெடுக்கும் சூரியன் ஓய்வெடுத்தது...!!குளிர்ந்த நீரால் குளித்துப்


புத்துயிர் பெற்ற பூக்கள் சிரிக்கின்றன..!!


அதனை மேலும் சிரிக்க வைக்க...


மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன...!!ஆயினும்...இன்னொடிக்கு உயிரோட்டம்தர


என்னுடன் என்னவன் இல்லையே!!


என்ன செய்ய?!-பிரியங்கா


அம்மா!!


உயிரைக் கொடுத்தாள்
என் உயிரென இருப்பவள்!!

எனக்கென இருக்கிறாள்
என்றும் எனக்கெனத் துடிப்பவள்!!

மென்மையான மலரவள்...
என் வாழ்வின் அர்த்தமவள்!!

என்றும் என்றென்றும் இனியவள்...
என் உயிரின் உயிரோட்டம் அவள்!!

ரோஜா தன்னைச் சூடும் பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்....


ரோஜா... தன்னைப் பறித்து அழகு பார்த்து பின் அவள் தலையில் சூடிய பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்...உன் ஆசைத் தீண்டல்களும்
என் கூச்ச சிணுங்கல்களும்...

உன் இதமான உரசல்களும்
என் செல்ல முனகல்களும்...

என்றும் மறவா உன் மென்மையான கூந்தலும்,
அழகான ஸ்பரிசமும்...
என்றுமே எனக்கு மட்டுமே சொந்தமானது!!

எனக்கே உரியது!!
வேறு யாருக்கும் நான் விட்டுக்கொடுக்க
முடியாதது, விரும்பாதது!!

நீரின்றி உயிரில்லை! அன்பே நீயின்றி நானில்லை!!


என் கண்ணுக்குள் நுழைந்து
கண் இமைகளில் ஒலி தந்தாய் நீ!

பகலாய் என்னுள் நுழைந்து
என்னுள் இருந்த இருளை நீக்கினாய் நீ!

மாலைப் பொழுதின் மயக்கமாக நான்!
என்னுள் சுவாசிக்கும் இசையாக நீ!

நீரின்றி உயிரில்லை இவ்வுலகில்!
அன்பே...
நீயின்றி நானில்லை ஒருபோதும்!!

-பிரியங்கா.

Wednesday, 22 July, 2009

எங்க நாய்க்குட்டிய சாப்ட வெக்க நாங்க நாயா பேயா அலையனுமுங்க!!


என்னம்மா அலம்பல் பண்ணும் தெரியுமாங்க என் நாய்க்குட்டி.. அது எங்க வீட்டுக்கு வந்தப்ப 2வாரக்குட்டிங்க... அதனாலேயே எங்கம்மா அதுக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க... நேரம் பாத்து பாத்து அதுக்கு சாப்பாடு போடுறது... அதுவும்... எப்டி தெரியுமா?? கீழ உக்காந்துக்டு அதோட கிண்ணத்த கைல பிடிசிக்க்டு சாப்டுடா செல்லம் சாப்டுனு சொல்லி சொல்லி சாப்ட வெப்பாங்க...!!

இது இப்டியே போயிற்றுந்துசுங்க.. நாளாக நாளாக எங்க நாய்க்கு(விக்கி) இது நல்லா பழகிடுச்சு... அம்மா கீழ உக்காந்துக்டு கைல கிண்ணத்த பிடிச்சிக்டு குடுத்தாத்தான் சாப்டும்.. இல்லன்னா எவ்ளோ நேரம் ஆனாலும் அப்டியே சாப்டாமலே இருக்கும்... இதுல.. சாப்பாடு கலந்து 3மணிநேரத்துக்கு மேல ஆயிடுச்சின்னா அத தொடவே தொடாது!! வேற புதுசா கலந்துக்டு வந்து அது கிட்ட கெஞ்சின்றுக்கணும்! சரி.. அது போகட்டும்...

இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்கப்பா...

கொஞ்ச நாள் கழிச்சி அதுக்கு அம்மா முகத்தையே பாத்து சாப்டு சாப்டு போர் அடிச்சிருக்கும் போல..!! எங்க எல்லாரையும் ஆட்டத்துல சேத்துக்கிச்சு... அம்மா உக்காந்துக்டு சாப்பாடு கிண்ணத்த பிடிச்சிக்குவாங்களாம், நானோ- இல்ல அண்ணாவோ -நாங்க ரெண்டு பேரும் இல்லன்னா எங்க அப்பாவோ அம்மா பக்கத்துல நின்னுக்டு அது(விக்கி) சாப்டறத பாக்கனுமாம்!!

அட!! நிக்கறது பரவால்லீங்க... அது சாப்டு முடிக்கிற வரைக்கும் வெச்ச கண்ணு எடுக்காம அதஎத் தான் பாத்துக்ற்றுக்கணும்!! சாப்டும் போது நடு நடுவுல அது நிமிந்து பாத்து அதைத் தான் பாத்துண்டிருக்கொமா இல்ல வேற எங்கயாவது பாக்ரோமானு "நோட்டம்" விடும்... அது பாக்கும் போது நாங்க... சரி சரி.. சாப்டுமா... "செல்லம்... என் பட்டு.. என் குட்டி.." இப்படிலாம் சொல்லணும்... சொன்னோம்னா சாப்டறத continue பண்ணும்!!

அப்டி இல்லாமவேற எதையாவது பாத்தோம்னா அவ்ளோதான்... சாப்டறத நிறுத்திடும் நிறுத்திப்புட்டு பெரிய மேதாவி மாறி அங்கிருந்து எந்திரிச்சி போயிடுமுங்க!! அப்புறம் அது பின்னாடியா 'நாயா பேயா 'அலையனும் அத சாப்ட வெக்கறதுக்கு!! இதையெல்லாம் நான் எங்கிட்டு போயிச் சொல்ல?? நீங்களே சொல்லுங்க!!

இந்த அநியாய அக்ரமத்த இது இரெண்டு வாரக் குட்டியா இருந்தப்போலேருந்து இன்னிக்கி(எப்டியோ எனக்கு கல்யாணமாகி வந்துட்டதனால நான் தப்பித்தேன்!) வரைக்கும் செஞ்சிக்க்டு இருக்குங்க!! என்னோட அண்ணனும் U.S. க்கு போயிட்டான்.. அதனால அவனும் பிழைத்துக்கொண்டான்.. பாவம், எங்க அம்மாவும் அப்பாவும் தான் எங்க விக்கி கிட்ட கெடந்து தவிக்கறாங்க!!

பெயர் சூட்டு விழா!!


ஹ்ம்ம்ம்ம்ம்ம்... நாய்க் குட்டி வீட்டுக்கு வந்தாச்சு! அதுக்கு சாப்பாடு குடுத்து, அதோட விளையாடவும் ஆரம்பிச்சாச்சு... அடுத்து அதுக்கு ஒரு பெயர் வெக்கணுமே!! என்ன பேர் வெக்கலாம்? யோசிக்க ஆரம்பித்தேன்.. யோசித்துக் கொண்டிருக்கையில் எதிர் வீட்டு ஆன்டி... என்னம்மா? எதோ யோசிக்கற போலனுகேட்க நானும் நாய்குட்டிக்கு பெயர் வைக்க போறேன் ஆன்டி... என்ன பேர் வெக்கலாம்னு யோசிச்சிற்றுக்கேன்னு சொன்னேன்... ! அதுக்கு அவங்க என்ன பாத்து சிரிச்சிட்டு, நல்ல பொண்ணுமானு சொல்லிட்டு சரி சரி... நாய்க்கு 'இ' இல்லனா 'ஐ' னு முடியற மாறி தான் வெக்கணும்.. அப்ப தான் அதுக்கு புரியும்னு சொன்னாங்க...அதுவும் சரி தான் நான் கூப்பிடுவது அதுக்கு புரிஞ்சா தானே நான் அதைக் கூப்டும் போது அது திரும்பி பாக்கும்? சரி ஆன்டி னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டேன்.. பள்ளிக்கு நேரம் ஆகிவிடவே நான் குளித்து கிளம்பி பள்ளிக்குச் சென்றுவிட்டேன்... என் தோழி ரேவதியிடன் என் குட்டி நாயைப் பற்றிச் சொன்னேன்... அதற்க்கு பெயர் வைக்க வேண்டும் என்றும் சொல்லி அவளையும் யோசிக்கச் சொன்னேன்... அவள் யோசித்து விட்டு இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னாள்... இதற்கிடையில்.. எங்களுக்கு அன்று "history paper"-- மாதத்தேர்வுக்கான விடைத்தாளைக் கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியை..

எனக்கு ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவன் மீது வெறுப்பு... அவன் பெயர் விக்ரம்.... eppothum என்னுடன் போட்டி போட்டுக் kondiruppaan... entha vidaithaal koduththaalum சரி( தினந்தோறும் வைக்கும் சின்ன தேர்வாக இருந்தாலும்...) அவன் தாளையும் என் தாளையும் வைத்துப் பார்பான்.. எனக்கு அவனை விட ஒரு மதிப்பெண் அதிகம் வந்திருந்தால் கூட அவனால் பொறுக்கவே முடியாது! உடனே அந்த ஆசிரியரிடம் சென்று சண்டையிடுவான், என்னை விட ஒரு மதிப்பென்னாவது அதிகமா ஏதாவது ஒரு கேள்விக்கான விடையில் வாங்கிவிட்டு தான் வகுப்பிற்கே வருவான்!

அன்றும் அப்படித் தான் செய்தான்... history paper இல் என் மதிப்பெண் 82... அவன் மதிப்பெண் 80... எண்கள் ஆசிரியை எல்லோருக்கும் அவரவர் தேர்வுத் தாளைக் கொடுத்து விட்டு இறுதியில் அனைவரின் பெயர்களையும் அவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் படித்து விட்டுச் சென்றார்.. என் மதிப்பெண்ணைக் கேட்ட உடன் விக்ரம் நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வந்து என் விடைத்தாளைக் கேட்டான்.. எதற்கு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட நான் தர மாட்டேன் போ என்று சொன்னேன்.. ஆனாலும் அவன் விடவில்லை.. என் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு வகுப்பின் வெளியே ஓடிவிட்டான்... நானும் இந்த முறை அவனை விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்!

அவன் நேராக எங்கள் history ஆசிரியையிடம் தான் சென்றான்.. மூச்சிரைக்க ஓடி வந்திருக்கும் எங்களைப் பார்த்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை... நான் பேச ஆரம்பிப்பதற்குள் அவன் முந்தினான்... அதெப்படி நீங்க எனக்கு இவளை விட இரண்டு மதிப்பெண் குறைவாக போட்டீங்கன்னு கேட்டான்.. ஆசிரியைக்கு ஒன்றும் விளங்கவில்லை... ஆனால் அவனை கோபமாக முறைத்தார்! அதற்குள் அங்கு வந்த எங்கள் தமிழ் ஆசிரியை(சின்ன வகுப்பிலிருந்தே எங்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவர்!) என்ன விக்ரம்? ஆரம்பிச்சிட்டியா திரும்பவும் என்று கேட்டு விட்டு history ஆசிரியையிடம் அவனைப் பற்றி சொல்லி.... "அவன் நீங்கள் அவனுக்கு ஒரு மதிப்பெண் ஆவது அந்தப் பெண்ணை விட அதிகமா போடலைன்னா விடமாட்டான்" என்றார்... என்ன? ஆசிரியையிடம் இப்படி பேசறான்? அவன் சண்டையிட்டால்....! அதற்க்கு நான் ஆள் இல்லை என்று சொல்லி விட்டு, விக்ரமைப் பார்த்து இன்னொரு முறை இப்படி என் கிட்ட வந்தீன நான் உன்ன பிரின்சிபால்(principal) கிட்ட கூட்டிட்டு போயிடுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.. அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!! ஹப்பா!! என்ன ஒரு கோபம்? என்ன ஒரு வெறுப்பு? நான் சிரித்துக் கொண்டே என் விடைத் தாளை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றேன்.. ஆனால் எனக்கு அவன் செய்த இந்த வேலை(விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது) எனக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது... இவனை நல்லா வெறுப்பேத்தனும்னு முடிவு பண்ணேன்!

vikram என் வீட்டின் அருகில் தான் வசிக்கிறான்.. (விக்கி என்று தான் அவன் வீட்டில் அழைப்பார்கள்) ... அவனுக்கு நாய் என்றாலே பிடிக்காது... அதை பயன் படுத்திக்கொண்டு என் நாய்க்கு நான் விக்கி என்று பெயர் வைக்க முடிவே பண்ணிட்டேன்... மாலை வீட்டிற்குச் சென்றவுடன் அம்மாவிடம் என் நாய்க் குட்டிக்கு விக்கி என்ற பெயர் வைக்கப்போவதாகச் சொன்னேன்.. அம்மாவுக்கும் அந்தப் பெயர் பிடித்தது! (பெயர்க் காரணம் தெரியாதலால்..)அண்ணாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்த பிறகு பெயர் சூட்டு vizhaa அரங்கேறியது.. ஆனால் விக்ரமை வெறுப்பேற்ற எனக்கு மனது வரவில்லை! எதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது எனக்குள்!!

அழகா புசு புசுன்னு ஒரு நாய்!


நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்போது! என் பள்ளியின் அருகில் வசிக்கும் என் வயதுப் பெண் ஒருத்தி, தினமும் மாலை வேளையில்(நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சமயம்!) ஒரு அழகான பொமேரியன் நாய்க் குட்டியை அழைத்துக் கொண்டு வீதியில் நடந்து செல்வாள்.. அதைப் பார்க்கையில் எனக்கும் ஒரு நாயை வளர்க்கணும்ங்கற ஆசை வந்தது... அதனால், என் தந்தையிடம் சென்று நாயை வாங்கித் தரச்சொல்லி கேட்டேன்! அவர் வேணாம்னு சொல்லிட்டார்... எனக்கு விட மனதில்லை! அடம் பிடித்தேன்... நீங்க எனக்கு நாய்க் குட்டி வாங்கித்தரலைன்னா நான் சாப்டமாட்டேன், படிக்க மாட்டேன், எதுவும் செய்யமாட்டேன்னு சொன்னேன்... அதை செய்யவும் செய்தேன்!

குழந்தை சாப்பிடாமல் இருந்தால் எந்த அப்பாவுக்கு தான் மனசு கேக்கும்? அவர் சரி, வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார்... நானும், நாய்க்குட்டி வரப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்...
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடோடி வந்தேன்... அம்மாவிடம் அப்பா எப்போ வருவாங்கன்னு கேட்டேன்.. அம்மா சொன்னாங்க..., "நீ தான் நாய்க் குட்டி கேட்டியே? அப்பாவோட கூட வேல பாக்கிற ஆன்டி(aunty!) ஒரு நாய்க் குட்டி வச்சிருக்காங்களாம்.. நீ கேட்டனு சொன்னதும் அத எடுத்துக்கிட்டு போகச் சொன்னாங்களாம் அவங்க.... இப்போ அவங்க வீட்லேருந்து தான் போன் பண்ணாங்க உங்க அப்பா.. நாய்க் குட்டியை எடுத்துக்டு ஆட்டோல(auto) வந்துற்றுக்காங்களாம்!"

மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதந்து கொண்டிருந்தேன் நான்! அழகான, வெள்ளையான, புசு புசுவென்ற நாய்க்குட்டி ஒன்றை அப்பா எடுத்துக் கொண்டு வரப் போகிறார் என்ற கனவு வேறு! வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது... வெள்ளை பொமேரியன் நாயை எதிர்ப் பார்த்த எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம்!:(
காக்கி கலரில் அதன் உடம்பில் முடியே இல்லாத ஒரு நாய்க்குட்டியை கையில் ஏந்தியபடி வந்தார் அப்பா! எனக்கு பிடிக்கவே இல்லை:( அப்பா மீது கோபித்துக் கொண்டு அதைத் தொடக் கூட தொடாமல் என் அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுக் கொண்டு அப்படியே தூங்கியும் விட்டேன்... அப்பாவிற்கு ஒன்றும் புரியலை பாவம்.. என்னை அழைத்து அழைத்து அறையின் கதவைத் தட்டி தட்டி ஓய்ந்து விட்டார்... மறு நாள் காலையில் தான் கோபித்துக் கொண்ட காரணத்தை நான் சொன்னேன்!

அவர் என்னைப் பார்த்து சிரித்து விட்டு.. அட குட்டி!( என்னை அப்பா அப்படித் தான் அழைப்பார்..)... இந்த நாய்க் குட்டியும் அழகா தான் இருக்கும்டா... இது கிராஸ் (cross variety).... பொமேரியன்-பொஷெர் (pomerian-boxer) இரண்டும் கலந்த வகையைச் சார்ந்தது என்றார்... நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அப்போது அப்பா எடுத்து வந்த அந்த குட்டி நாய் என் கால்களுக்கிடையில் வந்து நின்று கொண்டு கால் விரல்களை நக்க ஆரம்பித்தது! அதை சற்றும் எதிர்பாராத நான் சட்டென்று விலகிக்கொள்ள, அது அப்படியே துவண்டு விழுந்தது.. விழுந்துவிட்டு என்னைப் பரிதாபமாக பார்த்தது! ஐயோ பாவம் என்று அதை நான் கையில் எடுத்து கொண்டு தடவி கொடுக்க அது என் அப்படியே என் மீது சாய்ந்து கொண்டுவிட்டது! அதன்பின் நான் என் கோபத்தையெல்லாம் மறந்து விட்டு தினமும் என் செல்ல நாயுடன் விளையாட ஆரம்பித்து விட்டேன்...

நாய்க் குட்டிஎன்றால் அதற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அலசி ஆராய்ந்த கதையை அடுத்த இடுகையில் பார்ப்போம்!;) ;) ;)

'இட்லி'கள் மீது நடத்தும் தாக்குதல்!!


எனக்கு ஒரு 5வயசு இருக்குமுங்க அப்போ!! எனக்கு எங்க வீட்டு தோட்டத்துல 'இட்லி' ஊட்டிக்கிற்றுந்தாங்க என் அம்மா.. நான் பாதி இட்லி சாப்டுட்டு போதும்னு அடம் பிடிச்சிக்கிட்டிருந்தேன்!! அம்மா என்ன சாப்ட வெக்க போராடிற்றுந்தாங்க...அப்போ, பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி வெளில வந்தாங்க... அம்மா என்னோட போராடிக்கிற்றுக்ரத பாத்துட்டு என்னம்மா? என்னாச்சு? கொழந்தை என்ன சொல்றா?னு கேட்டாங்க.. அதுக்கு அம்மா நான் பாதி இட்லியைச் சாப்டுட்டு போதும்னு சொல்றேன்னு சொல்ல, அந்த மாமி என்னைப் பாத்து...."என்னடி கொழந்தே? அர இட்லி சாப்டா எப்டி வளருவ நீ? உன் வயசுக்கு நல்லா ஒரு 5இட்லி 6இட்லி சாப்ட வேணாமோ? நான் லாம் உன் வயசுல அப்படித் தான் சாப்ட்டேன்னு சொல்லிட்டு... நல்லா சாப்டா தான் நல்லா ஆரோக்கியமா வளரமுடியும்னு சொன்னாங்க!அதற்க்கு நான் வாயைப் பிளந்து கொண்டு...

"5இட்லி, 6இட்லியா? அய்யய்யோ!! ஆன்டி... அவ்ளோ இட்லி சாப்டா அதுக்கு பேர் சாப்டறதில்ல ஆன்டி, இட்லி ய நாம தாக்ரோம்னு அர்த்தம்!" என்று சொல்ல, அந்த மாமி வாயடைத்துப் போனார்..

Tuesday, 21 July, 2009

அய்யய்யோ!! யாராச்சும் என் தலை முடியைக் காப்பாத்துங்களேன்!!


உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே ...!! இந்த பாட்டு(காதலில் விழுந்தேன்) நாம் எல்லோரும் அறிந்தததே! நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று! எனக்கு கல்யாணம் ஆன புதிதில் வந்த படம் வேறு...!

ஒரு முறை நான் இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே சமைத்துக்கொண்டிருந்தேன்... திடீரென்று என்னவர் என்னிடம் வந்து "அப்போ நீ காலம் பூரா அழுதுக்கிட்டே தான் இருக்கணும்"...ங்கறார்...! எனக்கு ஒரு நிமிடம் ஒன்னும் புரியலைங்க... அப்புறம் தான் அவரோட தலை முடி நினைவிற்கு வந்தது.. அவரை தலை நிறைய முடியுடன் நான் புகைப்படத்தில் தான் பார்த்திருக்கிறேன்... கல்லூரியில் படிக்கும் போது அழகா கரு கருன்னு என்னமா இருக்கும் (இருந்திருக்கிறது) தெரியுமாங்க அவர் தலைமுடி? இப்பொழுது அதென்னவோ வேண்டா வெறுப்பாக அவர் தலையில் இருப்பது போலத்தான் தெரியுது...இது என்னவருக்கு மட்டுமே வந்த கொடுமையல்ல.. பெரும்பான்மையானோர் தங்கள் புகைப்படங்களைப் பார்த்துப்புலம்பும் ஒன்று! என்னங்க? சரிதானே?! முதலில் அவர் புலம்ப ஆரம்பித்த போது நான் அவரைத் தான் குறை கூறினேன்..

"சும்மா கதை சொல்லாதீங்க! அதெப்படி தன்னால முடி கொட்டிடும்? நீங்க அத ஒழுங்க கவனிச்சி இருக்க மாட்டீங்கன்னு நான் சொல்ல... என்னவர் சொன்னார்... ஒழுங்கா கவனிக்கறதா? அதென்ன ஒழுங்கா கவனிக்கறது? தனியா பிடுங்கி வெச்சு ஆரத்தி காட்ட சொல்றியானு நக்கல் அடிக்கறார்...""இந்த கிண்டலுக்கு ஒன்னும்குறைச்சல் இல்ல உங்களுக்கு... தலைக்கு வாரா வாரம் எண்ணைத்தேச்சு குளிச்சி, தினமும் எண்ணை தடவி இருந்தா எல்லாம் நல்லா தான் இருந்திருக்கும் உங்க முடியும்... காலேஜ் படிக்கும் போது எல்லா ஆட்டமும் ஆடினா இப்டித்தான் ஆகும்னு நான் தத்துவம் பேச அவரும் வேறு என்ன சொல்வதென்று தெரியாமல் விட்டு விட்டார்... ஆனா இப்போ வர வர நானும் என்னவர் லிஸ்ட் (list)ல சேந்துடுவேன் போல இருக்குங்க...

பாவி 'முடி' என்னமா அராஜகம் பண்ணுது? வாரத்துக்கு இரெண்டு தடவ அதுக்கு எண்ணைக்குளியலென்ன? தினமும் எண்ணை என்ன? ஆனாலும் என் தலைமுடிக்கு என் தலையைவிட என் சீப்பின் மீதுதான் அதீதக் காதல்?! எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் நீளமான கூந்தல்ங்க... அத அவ்ளோ பொறுமையா (அப்போவே சொன்ன மாறி) பாத்துக்குவேன் நானு.. இப்போ தான் கொஞ்ச நாளா தான்...(கொஞ்ச நாளா ன்னா ஒரு ஆறு ஏழு மாசம் இருக்கும்ங்க...!) இப்படி அநியாயத்துக்கு கொட்டுது என் தலைமுடி...என்னவரிடம் புலம்பினால் அதற்கு என்னம்மா பண்றது? ங்கறார் சர்வ சாதாரணமாக... அவருக்கென்னங்க? நான் தானே இவ்ளோ நாள் வளத்தேன் என் முடிய?நான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்... 'என்ன ஆச்சு? எதுக்கு இந்த திடீர் மாற்றம் என்று...? இறுதியில் அதற்கான காரணமும் ஓரளவு விளங்கிவிட்டது எனக்கு.... 'அதாவது..."நான் பிறந்து வளர்ந்தது சென்னை மாநகரிலே! வாக்கப்பட்டது வேலூரிலே! நானும் என்னவரும் இருப்பதோ பெங்களூரிலே! நாங்க மாதத்திற்கு இருமுறையேனும் வேலூரிர்க்குப்போவோமுங்க.. அங்கத்து தண்ணியும் இங்கத்து தண்ணியும் மாறி மாறி (மாத்தி மாத்தி) ஊத்தினா என் தலை முடி கொட்றது மட்டுமில்லீங்க சீக்ரமே என் தலை மொட்டையானாலும் சொல்ரதுக்கில்லீங்க...!"சரி.... காரணம் கண்டு பிடித்தாயிற்று.. அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நம் நாட்டு மருந்துக் கடை ஞாபகம் வந்தது எனக்கு... என் அம்மா வீட்டிற்கு (சென்னைக்கு) சென்றிருந்தபோது இந்த யோசனை வரவே நானே கடைக்கு புறப்பட்டேன்!... ஒரு நாட்டு மருந்துக் கடையில் சீயக்காய், புன்கங்காய், செம்பருத்தி இலை என்று எனக்குத்தெரிந்த மூலிகைகளை வாங்கிகிட்டேன்... அதோடு விட்டிருக்கலாம்ளங்க நானு... சும்மா இல்லாம அந்தக்கடைக்காரரிடம்(சிறுவயதிலிருந்து எனக்குத் தெரிந்தவர்) வேறு ஏதேனும் சீயக்காயில் போடலாமானு கேட்டேன்... அவரும் மருத்துவப்பட்டம் படித்த மருத்துவரைப் போல... அட, தலைமுடி கொட்டுதாம்மா? இரு நான் உனக்கு ஒரு அருமையான பொடியைத் தாரேன்னு சொல்லி என்னை கடைக்குள் ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு.... உள்ளே போனாலும் போனார்.. வெகு நேரம் ஆகியும் வெளியே வரவே இல்லை... கால் மணி நேரம் ஆயிற்று...அறை மணி நேரம் ஆயிற்று .... அவர் வெளியே வரவே இல்லை... ஐயோ இதென்ன வம்பா போச்சேன்னு நெனச்சிக்கிட்டு நான் உக்காந்துக்க்டு இருந்தா இதுல ஒருத்தர் வந்து எதோ மூலிகை பேரச்சொல்லி அதக் குடுங்கறார்! நான் என்னத்தச் சொல்ல? என்ன பண்றது? நான் கடைகாரியல்ல என்று அவருக்குச் சொல்லி தானே ஆகணும்? சரின்னு நான் சீயக்காய் வாங்க வந்தக் கதையையும் கடைக்காரர் உள்ளே சென்று இன்னும் வராத கதையையும் அவரிடம் சொல்லி முடித்து கொஞ்ச நேரம் காத்திருங்கன்னு சொன்னா... அவர் சொல்கிறார்... என்னம்மா நீ? எவ்ளோ நேரம் காத்திருப்பது, உன் வீட்டுக்காரர் எப்போ வர்றது எப்போ போயி நான் சொன்ன மூலிகையை எடுத்துத் தருவதுங்கறார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்னங்க சொல்றீங்கனு அவரிடம் நான் கேட்கவும் கடைக்காரர் வெளியே வரவும் சரியாக இருந்தது! என் சாமானை (அதானுங்க, அந்த பொடியை) என்னிடம் கொடுத்து விட்டு... என்னமா? என்னாச்சு? ஏதாவது ப்ரெச்சனை பண்ணானா இந்தக் கிழவன் என்றார் அவர்... இல்ல இல்லங்க... எதோ மூலிகை கேட்டார்... நீங்க வர வரைக்கும் காத்திருக்க சொன்னேன்... அதுக்கு தான் ஏதேதோ சொல்கிறார்னு நான் சொன்னேன்..அதற்கு அந்தக் கடைக்காரர் சொன்ன பதில் என்ன தெரியுமாங்க?"அட...! நீ வேற மா... இந்த ஆளுக்கு இதே தான் வேல... அவனுக்கு மன நிலை சரியில்லை.. காது சரியா கேக்கவும் கேக்காது! தினமும் இப்டி தான் வந்துடுவான், ஏதாவது சொல்லி அது வேணும்பான்.. ஏதாவது சாப்ட குடுத்துட்டா போயிடுவான், இல்லன்னா பேசிக்கிட்டே இருப்பான் எதையாவது"ஆஹா... இதென்னடா கொடுமைனு நெனச்சிக்கிட்டு.. சரி நம்ம வேலைய பாப்போம்னு அவருக்கு காசு குடுத்திட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.. சீயக்காயுடன் மாற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து வந்து வாரம் இரு முறை தலைக்கு குளிக்க ஆரம்பித்தேன்!இதோடு என் புலம்பலுக்கு தீர்வு வந்துட்டதுன்னு தானே நினைக்கறீங்க? இல்லவே இல்லீங்க... இன்னும் ஜாஸ்த்தியா கொட்ட ஆரம்பிச்சிடுத்து என் தலைமுடி... அது போதாத குறைக்கு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் எனக்கு செங்கல் பொடியில் குளித்த மாதிரியே இருக்கும்! எங்க பக்கத்து வீட்டுல மாடியில வீடு கட்டிக்கிட்டு இருந்ததால அங்கேருந்து தான் எதோ வாசனை வருதுன்னு நெனச்சிக்கிட்டு ஒவ்வொரு முறையும் நானும் விட்டுடுவேன்.... ஆனா போகப் போக என் தலை முடி வறண்டு போய்கிட்டே இருந்துச்சு...ஒரு முறை என் அம்மா எனக்கு போன் பண்ணி இருந்தப்போ எதோ பேச்சு வாக்கில் அந்த கடைக்காரர் கொடுத்த பொடியைப் பற்றியும் என் தலை முடி வறண்டு போனதைப் பற்றியும் நான் சொன்னேன்... "முதல்ல போயி அந்த சீயக்கய குப்பைல கொட்டுனு சொல்லிட்டாங்க எங்க அம்மா..." நான் என்னம்மா இப்டி சொல்றனு கேட்டா... அந்த கடைக்காரன் சமீபத்துல வ்யாபாரம் சரிஞ்சி போயிடுச்சுன்னு அவர் கிட்ட வரவங்க கிட்ட எதையாவது சொல்லி தலைல கட்டிகிட்டிருந்தாராம்.... இது இப்படியாக.. இரெண்டு நாளுக்கு முன்னாடி தான் ஒரு அம்மா அந்த கடைக்கு முன்னாடி வந்து சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்களாம்.. என்னன்னு பாத்தா, அவர் (என்னை ஏமாற்றியதைப் போல!)

மூலிகை பொடின்னு சொல்லி செங்கல் பொடியை சீயக்காயுடன் அரைக்க கொடுத்துட்டாராம்! அந்த பெண் போட்ட சத்தத்தில் அந்தக் கடையையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டாராம் அந்தக் கடைக்காரர்!

அதைக்கேட்டு ஒரு நிமிடம் நான் ஆடிப்போனேன்.... அட... இப்படியுமா ஏமாற்றுவார்கள்?சரி இப்போ நம்ம கதைக்கு வருவோம்... என் தலை முடிய இப்போ நான் எப்டித் தாங்க சரி பண்றது? கொஞ்சம் உதவுங்களேன்! ப்ளீஸ்....

Monday, 20 July, 2009

கையொப்பம்!!


நான் அப்போது S.t.John's உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்!

அன்றைய முன் தினம் எங்களுக்கு ரிப்போர்ட் கார்டு கொடுத்திருந்தார்கள்... அதில் மறுநாளே கட்டாயம் பெற்றோரின் கையொப்பம் பெற்றுவர வேண்டும் என்றும் கூறினார் ஆசிரியர்... ஆனால் நான் அதை மறந்தே விட்டேன்! காலை என் தோழி ரேவதி கேட்ட பின்பு தான் அது என் நினைவுக்கே வந்தது... அப்பொழுது தான் என் அம்மா என்னைப்பள்ளியில் விட்டுச்சென்றார்! அவர் வெகு தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை, அதனால் ஓடிச்சென்று கையெழுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கிளம்பினேன்...

ஆனால், பள்ளியின் வாசலில் இரண்டு மாணவர்கள் என்னை வழி மறைத்தார்கள்(ஸ்கூல் volunteers)! வெளியே செல்லக்கூடாது என்றார்கள்... நான்... " அண்ணா ரிப்போர்ட் கார்டுல கையொப்பம் வாங்கனும் எங்க அம்மா கிட்ட... வாங்கலைன்னா ஆசிரியை என்னை அடிப்பார் என்றேன் அழுதுகொண்டே!"

அதில் ஒருத்தருக்கு மட்டும் என்னைப்பார்க்க பாவமாய் இருந்திருக்கும் போல... பாவம்டா, போயிட்டு வரட்டும்னு சொல்ல, இன்னொருவர் எங்க போறாங்க உங்க அம்மா? நீ போனா அவங்கள பாக்க முடியுமான்னு கேட்டார்... நான்... போயிடுவேன் என்றேன்.. அவர்கள் அனுப்புவதாயில்லை.. என்ன செய்வது என்று யோசித்த நான் அதோ அண்ணா அங்க தான் போறாங்க எங்க அம்மா என்று அந்த வீதிக்கடைசியில் போகும் ஒருவரைக்காட்ட சரி என்று என்னை அனுப்பி வைத்தனர்....

நான் ஒரே ஓட்டமாக ஓடி அந்த வீதியைத்தாண்டி ஓடிவந்துவிட்டேன்... என் அம்மா சிறிது தூரத்தில் அவர் தோழியுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து என் ஓட்டத்தை மேலும் அதிகரித்தேன்! அப்பொழுது யாரோ என்னைத்துரத்துவது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது எனக்கு.. ஆனால் திரும்பிப்பார்க்க கூட நேரமில்லை... ஓடிக்கொண்டே இருந்தேன்... ஒரு வழியாக அம்மாவின் அருகில் வந்தடைந்தேன்! அவரிடம் கையொப்பமும் வாங்கிவிட்டு மணியைப்பார்த்தேன்... மணி 8 .40, பள்ளிவாசர்க்கதவை அடைக்க இன்னும் 15 நிமிடங்கள் இருந்தது! அப்பாடா என்று பெருமூச்சு விட்டுவிட்டு சாவகாசமாய் நடந்துகொண்டிருந்தேன்... அப்போது தான் எனக்கு யார் நம்மைத்துரத்தினார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.. அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில் ஒரு அண்ணா எங்கள் பள்ளி உடையை அணிந்து கொண்டு மூச்சிரைக்க எனக்கு முன்னால் பள்ளி வாசலில் சென்று நின்றுகொண்டார்... அவரைப்பார்த்தேன்... என்னைப்பாவம் பார்த்து போகட்டும்டா என்று இன்னொருவரிடம்(volunteer) சொன்னாரே, அவர் தான்... என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி வேர்த்து இருக்கு... எங்க போயிட்டு வராரு? என்று யோசித்துக்கொண்டே என் வகுப்பிற்கு சென்று விட்டேன்...

பிறகு தான் புரிந்தது நான் வீதியோரத்தில் இருக்கிறார் என் அம்மா என்று சொல்லி விட்டு அந்த வீதியையும் தாண்டிச்சென்றதால் அவர்களுக்கு சந்த்தேகம் வந்திருக்கிறது... நான் பொய் சொல்லிவிட்டு எங்கோ ஓடிவிட பார்க்கிறேன் என்று நினைத்தார்கள் போலும்... பாவம் அந்த அண்ணா என்று நினைத்துக்கொண்டேன்....

(அந்த ரிப்போர்ட் கார்டைப்பற்றி ஆசிரியை கேட்காமல் போனது வேறு கதை...!!) :(

Friday, 17 July, 2009

தமிழ் பரீட்சை


அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்... monthly test (மாத பரீட்சை) நடந்துகொண்டிருந்தது... அன்று எங்களுக்கு தமிழ் பரீட்சை. அனைத்துப்பாடத்தையும் தெளிவாக படித்து மனப்பாடமும் செய்து வந்தேன் நான்!

பரீட்சை ஆரம்பிக்கும் அறை மணி நேரம் முன்பு அனைத்துப்பாடங்களையும் மறு பார்வை அளிக்கலாம் என்று நினைத்து புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன்! அப்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவி புவனா (முழு பெயரும் வெளியிட விரும்ப வில்லை ) அழுது கொண்டிருந்தாள்! எனக்கு ஒன்றும் புரியவில்லை.. சரி கேட்கலாம் என்று நினைத்தேன் , நாங்கள் பேசியது பின்வருமாறு!

நான்: பரீட்சை நேரத்துல எதுக்கு டி அழுகுற?

புவனா: இல்ல டி, நான் தமிழ் பரீட்சைல நெறைய மார்க் வாங்கலன்னா எங்க அப்பா அடிப்பாரு..

நான்: சரி நீ படிச்சிட்ட தான? ஏன் அழுகுற? எல்லாம் நெறைய மார்க் வங்கிடுவே அழாத டி...

புவனா: இல்ல டி.... நான் படிக்கல... ப்ளீஸ் ப்ளீஸ்... நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்....

நான்: எது? நான் ஹெல்ப் பண்ணனுமா? ஏன்? நான் என்ன பண்ணனும்? எதுக்கு பண்ணனும்?

புவனா: இல்ல டி... நேத்திக்கு எனக்கு ஒடம்பு சரியில்ல... ஒரே தலைவலி டி... அதான் என்னால படிக்க முடியல... ப்ளீஸ் டி... நீ உன்னோட டெஸ்ட் நோட் அஹ தெறந்து வசி எழுத்து டி... நான் unna பாத்து எழுதிக்கறேன்... ஒரே ஒரு தடவ ஹெல்ப் பண்ணு டி... ப்ளீஸ்......

நான்: நான் மாட்டேன்... மிஸ்ஸுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க... உனக்கு ஒடம்பு சரியில்லஅணு தானே படிக்கல, அத உங்க அப்பா கிட்ட சொல்லு... ஒன்னும் சொல்ல மாட்டாரு!

புவனா: இல்ல டி.... எங்க அப்பா புரிஞ்சிக்க மாட்டாரு,... இத பாரு போன தடவ மார்க் கம்மியா vaanginathukkaaka அவரு என்ன அடிச்சது இன்னும் ஒரு தழும்பா இருக்கு பாரு...

நான்: அய்யோயோ!

இவ்வாறாக, அவள் மீது எனக்கு பரிதாபம் ஏற்ப்படுத்தி அவள் காரியத்தை சாதித்துக்கொண்ட புவனா, என்ன பாத்து அப்படியே எழுதியும் முடித்து vittaal ... விடைத்தாள்களை கொடுக்கும் நாளும் வந்தது! அனைவரின் மதிப்பெண்களையும் ஒரு முறை பார்த்து விட்டு தமிழ் ஆசிரியை ஒவ்வொருவராக கூப்பிட்டு அவரவர் தாள்களைக் கொடுத்தார்... எனக்கு எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கும் என்று அறிய மிகவும் ஆவலாய் காத்துக்கொண்டிருந்தேன்... என் தோழிகள் ரேவதி, அர்ச்சனா, சரஸ்வதி என எல்லோருக்கும் விடைத்தாள் கொடுத்துவிட்டார் ஆசிரியை... புவனாவுக்கும் வந்து விட்டது... எனக்கு மட்டும் இன்னும் வரவில்லை!

எனக்கு தாங்க மாட்டாமல், புவனாவைப் பார்த்து நீ எவ்ளோ மதிப்பெண் எடுத்தனு கேட்டேன்... அவள் 87endru சொன்னாள்! ஆஹா... மிகுந்த சந்தோஷத்தில்... அப்போ எனக்கும் அதே மதிப்பெண் தான் என்று உளறிவிட என் தோழிகள் என்னைப்பிடித்துக்கொண்டனர்... என்ன டி சொல்ற? அவளோட மதிப்பெண் தான் உனக்கும் வருமா? என்றார்கள்! நானும் வேறு வழியின்றி நடந்ததை சொல்லிவிட்டேன்.... என் தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என் விடைத்தாளுக்காக காத்துக்கொண்டிருந்தனர்( ennai vida aarvamaaga)!

என் பெயரைக் கூப்பிட்டார் ஆசிரியை.. அருகில் அழைத்து.. இதென்ன? இவ்ளோ தான் வாங்கி இருக்கனு செல்லமாக அதட்டிவிட்டு அதை என்னிடம் ஒப்படைத்தார்! அதைக்கொண்டு வந்து என் நாற்காலியில் உட்கார்ந்து தான் தாமதம்... என் தோழிகள் அதைப்பிடுங்கிக்கொண்டு புவனாவின் தாளையும் பிடுங்கிக்கொண்டு இரண்டையும் வைத்துப் பார்த்தனர்! நான் சொன்னது உண்மை என்று அறிந்து கொண்டு, அதை அப்படியே ஆசிரியையிடம் சொல்லியும் விட்டனர்!

அவர் என்னைக் கூப்பிட்டு நீ அவளுக்கு உன்தாளைக் காட்டினியா? என்றார்.. எனக்கு பயம் வீறிட்டது... எங்கே உண்மையைச் சொன்னால் என்னை அடிப்பாரோ என்று இல்லை என்று சொல்லி விட்டேன்! ஆனால் ஆசிரியை விடுவதாயில்லை... என்னை பொய் என் நாற்காலியில் அமரச்சொல்லிவிட்டு புவனாவை அழைத்தார்! விடைத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் ஒன்றைக் கேட்டார்... அவளுக்கு பதில் சொல்லத்தெரியவில்லை... உண்மையை அறிந்த ஆசிரியை கைத்தடியை ( scale ) க்கொண்டு அவளை அடிக்கத்துவங்கினார்... இத மாறி பண்ணுவியா? பண்னுவியானு கேட்டு கேட்டு அவளை அடித்த அடி இருக்கே! அப்பப்பா! என்னால் மறக்கவே முடியாத ஒன்னு...

Thursday, 16 July, 2009

இந்தியன் நா அவ்ளோ கேவலமா?


ஜெர்மனி ல எங்க வீட்டு பக்கத்துல ஒரு தமிழ் குடும்பம் இருக்குங்க... அந்த வீட்ல இருக்கும் கலைச்செல்வி என்னோட தோழி தானுங்க... ரொம்ப நல்லவங்க.. அமைதியானவங்க, நற்பண்பு கொண்டவங்க, சாதுவானவங்க, வாயில்லா பூச்சி ... இன்னும் சொல்லிக்கிட்டே போலாமுங்க!

சரி, நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்! அந்த கலைச்செல்வி அண்மையில் சென்னைக்கு போயிருக்காங்க... துபாய் வழியா தான் போனாங்க... துபாய் duty free பத்தி தான் உங்களுக்கு தெரியுமே! இவங்களும், தன் அக்கா மகளுக்கு ஒரு பொம்மைய வாங்கலாம்னு போயிருக்காங்க.... ஒரு பொம்மைய தேர்வு பண்ணி அத வாங்கிக்கலாம்னு counter க்கு போயிருக்காங்க! அங்க ஒரு ஆளு ( dubai shek போலும்! ) இவங்கள மேலையும் கீளையுமா பாத்திருக்கான்... இத கவனிக்காத நம்ம கலை யும் இத pack பண்ணுங்கன்னு சொல்லிட்டு காசு எடுத்து நீட்டி இருக்கார் ( euros )... ஆனா அந்த ஆளு இவர் கிட்ட வம்பு பண்ணனும் நு நெனச்சானோ என்னவோ euros லாம் வாங்கறதில்ல நு சொன்னானாம்... அந்த ஆளோட நோக்கம் புரியாத இவர் சரி அப்போ இந்தியன் ருபீஸ் ( indian rupees ) வாங்கிப்பீங்கலானு நம்ம காசை எடுத்து நீட்டி இருக்கார்!

இதுக்காகவே காத்துக்கிட்டிருந்தான் போல அந்தாளு!

"WE ACCEPT ALL CURRENCIES EXCEPT BLOODY INDIAN CURRENCY" நு சொல்லி இருக்கான்... இப்போது தான் அவனுடைய எண்ணம் புரிந்திருக்கிறது நம்ம கலைக்கு!
நான் தான் ஏற்கனவே சொன்னேனேங்க கலை ரொம்ப சாது, வாயில்லா பூச்சின்னு... பாவம், என்ன செய்றதுன்னு தெரியாம அங்கிருந்து வந்துற்றுக்கார்.. ஆனா இந்தியனையும் இந்திய நாட்டையும் கேவலமா பேசினவன சும்மா விட்டுட்டு வந்துட்டோமேங்கர வருத்தம் தாங்காம அவர் கண்லேருந்து மாலை மாலையா கண்ணீர் வழிந்திருக்கு!

இப்போ சொல்லுங்க.... இந்தியன் நா அவ்ளோ கேவலமா?