Friday, 31 July, 2009

காதல் சின்னம்- மூளையா இதயமா?


இதயத்துக்கும் உணர்ச்சிகளுக்கும்(அன்பு, காதல்...) சம்பந்தமே இல்லை தானே?! பிறகு ஏன் அதைக் காதல் சின்னம்னு சொல்றாங்க?

இதப்பத்தி யோசிச்சி நாம நம்ம தலைய பிச்சிக்க்ரத விட... வாங்களேன் இதயத்துக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் விவாதத்தைக் கேட்கலாம்!!

மூளை - வணக்கம் இதயம்! நல்லா இருக்கியா?

இதயம் - அடடே... வாங்க வாங்க... நான் நல்லா இருக்கேன்... நீங்க நல்லா இருக்கீங்களா?

மூளை - எதோ இருக்கேன் போங்க...

இதயம் - அட... என்னாச்சு?? ஏன் இப்டி சலிச்சிக்கறீங்க?

மூளை - சலிச்சிக்காம பின்ன வேற என்ன செய்யச்சொல்லுரீக? இந்த மனுஷ பயலுங்க தான் இப்டி நன்றி கெட்ட தனமா நடந்துக்கரானுங்கன்ன நீயும் அப்டித்தான் இருக்க! நீயாவது அவனுங்களுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லி புரியவெக்கப்படாதா? நீயும் இப்டி அவனுங்களோட சேந்து ஆடுறியே?!

இதயம் - என்ன? மூளையாரே! ஏதேதோ சொல்றீக! என்ன தான் சொல்ல வரீக நீங்க??

மூளை - இப்டி கேளு... நான் சொல்லுறேன்...
... நீ யாரு? உன்னோட வேலை என்ன? இந்த பாவி மனஷனுங்களோட ரத்தத்த சுத்திகரிச்சி அத இவனுங்க உடன்பு முழுக்க ஓட விடறதுக்கு உழைக்கறவன் தானே?

இதயம் - ஆமா... அதுக்கென்ன இப்போ? அதுக்கும் நீங்க சொல்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

மூளை - அட இருப்பா! என்ன பேச விடு... நான் கேக்கறதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு போதும்...

இதயம் - ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சரி கேளுங்க...

மூளை - நீ ரத்தத்த சுத்திகரிச்சி அத மனுஷ பயலுங்க ஒடம்புல ஓட விடுறவன்... சரி.. நான் யாரு? இவனுங்க உணர்ச்சிய செயல்படவெச்சி அத கட்டுப்படுத்தவும், அத வெளிப்படுத்தவும் உதவறவன்... என்ன? நான் சொல்றது சரி தானே?

இதயம் - ஆமாங்க.. சரி தான்..

மூளை - அப்படி இருக்கறப்ப இந்த மனுஷ பயலுங்க என்ன தான காதல் சின்னமா வெச்சிருக்கணும்? படுபாவிங்க.. எதுக்கு உன்ன சின்னமா சொல்றானுங்க?
அவனுங்க தான் அப்டி புத்தி கெட்டுப் போயி அப்டி செஞ்சானுங்கன்னா... உனக்கெங்க போச்சு புத்தி?? நீயாவது சொல்லி இருக்கனுமா வேணாமா?

அத விட்டுப்புட்டு, நீயும் ஈ னு இளிச்சிக்கிட்டே அவனுங்க பின்னாடி போற! உனக்கு வெக்கமா இல்ல?

இதயம் - நான் எடுத்துச் சொல்ல வேண்டியது மனுஷனுங்களுக்கில்லைய்யா... உனக்குத் தான்...

மூளை - என்ன கிண்டலா? என்ன சொல்லணும் எனக்கு? அதுவும் நீ?

இதயம்- உன்ன விட நான் தான் ஒசந்தவன்! அதனாலத் தான் என்ன மதிச்சி அவங்க காதல் சின்னம் னு சொல்றாங்க...மூளை - எது? நீ என்ன விட ஒசந்தவனா? ஹி ஹி... சர்தான் போயா

இதயம் - நான் சொல்றது உண்மைப்பா... நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது?

மூளை - சரி அதையும் பாத்துர்லாம்யா... எந்த விதத்துல நீ ஒசந்த்வனுங்கர நீ?

இதயம் - நான் உங்களோட போட்டி போட விரும்பல... சரி... இத மட்டும் கேளுங்க...

நீங்க தான் உணர்ச்சிகள செயல்பட வைத்து அதை வெளிப்படுத்தவும் உதவுகிறீர்கள்... ஆனால்... அவங்க உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளும் இறந்து போன பிறகும் சில நொடிகள் துடித்துக் கொண்டிருப்பவன் நானே!! இத்தகைய மதிப்பிற்குரியவனான என்னை மனிதர்கள் தங்கள் உறவான வாழ்க்கைத் துணையாக வரவிருப்பவருக்கு தங்கள் காதல் சின்னமாக சமர்ப்பிக்கின்றனர்!
5 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

Suresh Kumar said...

ஐ இதயமும் மூளையும் பேசுதே நல்லா வந்திருக்கு

இங்கேயும் வங்க

http://www.sureshkumar.info/2009/07/blog-post_31.html

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க.. ரொம்ப ஆராய்சியா? காதல அனுபவிங்க் ஆராயாதீங்க :)

வண்ணத்துபூச்சியார் said...

The heart is always right if there's a question of choosing between the mind and the heart because mind is a creation of
the society. It has been educated. You have been given it by the society, not by existence. The heart is unpolluted..

=============================

Falling in love you remain a child; rising in love you mature. By and by love becomes not a relationship, it becomes a state of your being. Not that you are in love now you are love.....

==ஓஷோ.

இது நம்ம ஆளு said...

உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளும் இறந்து போன பிறகும் சில நொடிகள் துடித்துக் கொண்டிருப்பவன் நானே!! இத்தகைய மதிப்பிற்குரியவனான என்னை மனிதர்கள் தங்கள் உறவான வாழ்க்கைத் துணையாக வரவிருப்பவருக்கு தங்கள் காதல் சின்னமாக சமர்ப்பிக்கின்றனர்!

அருமை .வாங்க நம்ம பதிவுக்கும்

SUBBU said...

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய :))))))