Friday, July 17, 2009

தமிழ் பரீட்சை


அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்... monthly test (மாத பரீட்சை) நடந்துகொண்டிருந்தது... அன்று எங்களுக்கு தமிழ் பரீட்சை. அனைத்துப்பாடத்தையும் தெளிவாக படித்து மனப்பாடமும் செய்து வந்தேன் நான்!

பரீட்சை ஆரம்பிக்கும் அறை மணி நேரம் முன்பு அனைத்துப்பாடங்களையும் மறு பார்வை அளிக்கலாம் என்று நினைத்து புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன்! அப்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவி புவனா (முழு பெயரும் வெளியிட விரும்ப வில்லை ) அழுது கொண்டிருந்தாள்! எனக்கு ஒன்றும் புரியவில்லை.. சரி கேட்கலாம் என்று நினைத்தேன் , நாங்கள் பேசியது பின்வருமாறு!

நான்: பரீட்சை நேரத்துல எதுக்கு டி அழுகுற?

புவனா: இல்ல டி, நான் தமிழ் பரீட்சைல நெறைய மார்க் வாங்கலன்னா எங்க அப்பா அடிப்பாரு..

நான்: சரி நீ படிச்சிட்ட தான? ஏன் அழுகுற? எல்லாம் நெறைய மார்க் வங்கிடுவே அழாத டி...

புவனா: இல்ல டி.... நான் படிக்கல... ப்ளீஸ் ப்ளீஸ்... நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்....

நான்: எது? நான் ஹெல்ப் பண்ணனுமா? ஏன்? நான் என்ன பண்ணனும்? எதுக்கு பண்ணனும்?

புவனா: இல்ல டி... நேத்திக்கு எனக்கு ஒடம்பு சரியில்ல... ஒரே தலைவலி டி... அதான் என்னால படிக்க முடியல... ப்ளீஸ் டி... நீ உன்னோட டெஸ்ட் நோட் அஹ தெறந்து வசி எழுத்து டி... நான் unna பாத்து எழுதிக்கறேன்... ஒரே ஒரு தடவ ஹெல்ப் பண்ணு டி... ப்ளீஸ்......

நான்: நான் மாட்டேன்... மிஸ்ஸுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க... உனக்கு ஒடம்பு சரியில்லஅணு தானே படிக்கல, அத உங்க அப்பா கிட்ட சொல்லு... ஒன்னும் சொல்ல மாட்டாரு!

புவனா: இல்ல டி.... எங்க அப்பா புரிஞ்சிக்க மாட்டாரு,... இத பாரு போன தடவ மார்க் கம்மியா vaanginathukkaaka அவரு என்ன அடிச்சது இன்னும் ஒரு தழும்பா இருக்கு பாரு...

நான்: அய்யோயோ!

இவ்வாறாக, அவள் மீது எனக்கு பரிதாபம் ஏற்ப்படுத்தி அவள் காரியத்தை சாதித்துக்கொண்ட புவனா, என்ன பாத்து அப்படியே எழுதியும் முடித்து vittaal ... விடைத்தாள்களை கொடுக்கும் நாளும் வந்தது! அனைவரின் மதிப்பெண்களையும் ஒரு முறை பார்த்து விட்டு தமிழ் ஆசிரியை ஒவ்வொருவராக கூப்பிட்டு அவரவர் தாள்களைக் கொடுத்தார்... எனக்கு எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கும் என்று அறிய மிகவும் ஆவலாய் காத்துக்கொண்டிருந்தேன்... என் தோழிகள் ரேவதி, அர்ச்சனா, சரஸ்வதி என எல்லோருக்கும் விடைத்தாள் கொடுத்துவிட்டார் ஆசிரியை... புவனாவுக்கும் வந்து விட்டது... எனக்கு மட்டும் இன்னும் வரவில்லை!

எனக்கு தாங்க மாட்டாமல், புவனாவைப் பார்த்து நீ எவ்ளோ மதிப்பெண் எடுத்தனு கேட்டேன்... அவள் 87endru சொன்னாள்! ஆஹா... மிகுந்த சந்தோஷத்தில்... அப்போ எனக்கும் அதே மதிப்பெண் தான் என்று உளறிவிட என் தோழிகள் என்னைப்பிடித்துக்கொண்டனர்... என்ன டி சொல்ற? அவளோட மதிப்பெண் தான் உனக்கும் வருமா? என்றார்கள்! நானும் வேறு வழியின்றி நடந்ததை சொல்லிவிட்டேன்.... என் தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என் விடைத்தாளுக்காக காத்துக்கொண்டிருந்தனர்( ennai vida aarvamaaga)!

என் பெயரைக் கூப்பிட்டார் ஆசிரியை.. அருகில் அழைத்து.. இதென்ன? இவ்ளோ தான் வாங்கி இருக்கனு செல்லமாக அதட்டிவிட்டு அதை என்னிடம் ஒப்படைத்தார்! அதைக்கொண்டு வந்து என் நாற்காலியில் உட்கார்ந்து தான் தாமதம்... என் தோழிகள் அதைப்பிடுங்கிக்கொண்டு புவனாவின் தாளையும் பிடுங்கிக்கொண்டு இரண்டையும் வைத்துப் பார்த்தனர்! நான் சொன்னது உண்மை என்று அறிந்து கொண்டு, அதை அப்படியே ஆசிரியையிடம் சொல்லியும் விட்டனர்!

அவர் என்னைக் கூப்பிட்டு நீ அவளுக்கு உன்தாளைக் காட்டினியா? என்றார்.. எனக்கு பயம் வீறிட்டது... எங்கே உண்மையைச் சொன்னால் என்னை அடிப்பாரோ என்று இல்லை என்று சொல்லி விட்டேன்! ஆனால் ஆசிரியை விடுவதாயில்லை... என்னை பொய் என் நாற்காலியில் அமரச்சொல்லிவிட்டு புவனாவை அழைத்தார்! விடைத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் ஒன்றைக் கேட்டார்... அவளுக்கு பதில் சொல்லத்தெரியவில்லை... உண்மையை அறிந்த ஆசிரியை கைத்தடியை ( scale ) க்கொண்டு அவளை அடிக்கத்துவங்கினார்... இத மாறி பண்ணுவியா? பண்னுவியானு கேட்டு கேட்டு அவளை அடித்த அடி இருக்கே! அப்பப்பா! என்னால் மறக்கவே முடியாத ஒன்னு...