Tuesday, 29 September, 2009

கோமாளியா தெரிஞ்சோமுங்க நாங்க...!!


கிட்டத் தட்ட ஒன்றரை மாசமா உங்கள தொந்தரவு பண்ணாம ரொம்ப கஷ்டமா போச்சு ங்க எனக்கு... அதான் திரும்பவும் கிறுக்கலாம்னு வந்துட்டேன்...!!

போன மாசம் 22 ஆம் தேதி நான் என் கணவரோட அலுவலக நண்பரோட மனைவியோட இந்தியாவுக்கு கிளம்பினேன்ங்க... ஜெர்மனி ல இருக்கறப்ப rediff news, அந்த news இந்த news னு படிச்ச எல்லாத்துலயும்... பன்றிக் காய்ச்சல் ரொம்ப அதிகமா பரவிற்றுக்கு எல்லா எடத்துலையும்னு தான் படிச்சேன்ங்க... அதனால நானும் என்னோட கூட வந்தப் பெண்ணும் முகக் கவசம், அப்புறம் கைக்கு alcohol sanitizer gel, gloves இதெல்லாம் வாங்கிக்டு போனோம்ங்க..

விமானத்துல போயி உக்காந்த்துக்கிட்டோம் நாங்க... ஆனா, ஒருத்தர் கூட முகக் கவசம்( face mask ) போட்டுக்கலைங்க... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... அதனால கொஞ்ச நேரம் நாங்களும் அதப் போட்டுக்கல... ஆனா, எங்க பக்கத்துல ( பக்கத்து row la ) உக்காந்துற்றுந்த ஒரு ஆளு இஷ்டத்துக்கு தும்பல் போட ஆரம்பிச்சிட்டாரு... அதனால, நாங்க ரெண்டு பேரும் பயந்து போயி உடனே முகத்துக்கு கவசத்த எடுத்து போட்டுக்கிட்டோம்... ஆறு மணி நேர பயணத்துக்கு அப்புறம் துபாய் விமான நிலையத்துக்கு வந்தது சேர்ந்தோம்.. அங்க தான் கூட்டம் அலை மோதுமே...! இங்க தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு பேசிக்கிட்டு நாங்க விமாத்த விட்டு இறங்கி நடந்துக்கிட்டு இருந்தோம்... எங்க ரெண்டு பேரத் தவிர வேற யாருமே கவசம் போடலீங்க...!! எங்க பக்கத்துல உக்காந்திருந்தவர் தும்மனார்னு தானங்க நாங்க mask போட்டுக்கிட்டோம்? கடைசியில என்னாச்சு தெரியுங்களா...?? அந்த ஆளு எங்கள பாத்து எதோ சொல்லிட்டு சிரிச்சிட்டு போறாரு... என்னத்த பண்றது??!!

அப்பவும் நாங்க கண்டுக்கலங்க... அப்டியே தான் நாங்க போக வேண்டிய கேட் (gate) ku போனோம்... போற வழில லாம் எல்லாரும் முக மூடி கொள்ளகாரங்கள பாக்கற விதமா பாத்தாங்க எங்கள!! எங்கள மாறி இன்னும் ரெண்டு பேர்(ரெண்டு பேர் னா எண்ணி ரெண்டு பேர் ங்க...) கவசம் போட்டுக்கிற்றுந்தாங்க! அதப் பாத்ததும் ஒரு வித திருப்தி வந்துச்சி எங்களுக்கு... சரி நமக்கு துணையா இன்னும் ரெண்டு பேர் இருக்காங்கங்கர நிம்மதியும் வந்துச்சி...

ஆனா... அவங்களும் வேறேதோ விமானத்துல போயிட்டாங்க போல... நாங்க போக வேண்டிய கேட்(gate) கு வரல அவங்க... :(

பெங்களூருக்கு போற விமானத்துல வந்து உக்காந்தும் ஆச்சு நாங்க... அந்த விமானத்துலையும் யாரும் முகக் கவசம் போடலைங்க... போதாக் குறைக்கு எங்கள கடத்தல் காரங்க, கொள்ளகாரங்கள பாக்கற மாறியே பாக்கறாங்க!! ஆனாலும் நாங்க கவசத்த களட்டல... நம்ம ஒடம்பு தானே ங்க நமக்கு முக்கியம்?? என்ன சொல்றீங்க?? ;)

நாலு மணி நேரத்துக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தோம்... அங்க immigration கு முன்னாடி பன்றி காய்ச்சல் இருக்கானு சோதிக்கப் போறதா சொன்னாங்க... சரி னு அங்க போனா... காய்ச்சல் இருக்கா னு temperature check (கடனே னு ) பண்ணிட்டு அனுப்பிட்டாங்க... அதுக்கப்பறம் immigration முடிஞ்சி ஒரு வழியா வெளிலயும் வந்துட்டோம்...
ஆனா, துபாய் லயாவது எங்களைத் தவிர இன்னும் ரெண்டு பேர் முகக் கவசம் போட்டுக்கிட்டு இருந்தாங்கங்க... இங்க... பெங்களூருல ஒருத்தங்க கூட போடல...

மக்கள் கிட்ட பன்றிக் காய்ச்சலைப் பத்தின விழிப்புணர்வு இல்லியா? இல்ல... பத்திரிகை ல லாம் படிச்சது லாம் பொய்யா?? (எதோ... வெளில போனாலே எல்லாரும் முகக் கவசத்தொடத் தான் போறாங்க, அப்டி இப்டி னு போட்டிருந்தாங்க..) எங்களுக்கு ஒன்னும் புரியல... மொத்தத்துல துபாய் விமான நிலையத்துலையும் சரி பெங்களூரு விமான நிலையத்துலையும் சரி... நானும் என்னோட கூட வந்த பெண்ணும் கோமாளிகளாட்டம் திரிஞ்சிக்கிற்றுந்தோம்... !!

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

12 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

Mrs.Menagasathia said...

பிரியங்கா நலமா?குட்டி என்ன சொல்றாங்க.நல்லபடியாக இந்தியா சேர்ந்ததில் சந்தோஷம்.நம்ம நாட்டிலே தான் விழிப்புணர்வு இல்லையே அப்புறம் எப்படி அவங்க கவசத்தை போடுவாங்க?

நிலாமதி said...

வேடிக்கையாக் இருந்தது ..ஒருவேளை மக்கள் கவன்க்குறைவாக் இருக்காங்களோ ? உங்கள் வருகைக்கு மிக மகிழ்ச்சி ...நல்மாக் இருகீங்களா? உடல் நலனைபார்த்து கொள்ளுங்கள்.

பித்தனின் வாக்கு said...

திரும்பவும் பதிவு எழுதியதில் சந்தொசம், இந்தியா சுற்றுலா பத்தி பதிவு போடவும், அப்புறம் எந்த விமான நிலையத்திலும் உங்க நேயாளிகள் நினத்து ஓரங் கட்டுலையா. ஏன்னா நீங்க மட்டும் முகமூடி போட்டா உங்களுக்கு அந்த நேய் இருக்குனு நினைக்க சாத்தியக் கூறுகள் அதிகம்.

பிரியமுடன்...வசந்த் said...

பிரியா எப்பிடிம்மா இருக்க?

மருமகன் என்ன சொல்றான்?

takecare...

திரும்ப நீ எழுத வந்ததுல ரொம்ப சந்தோசம்

"பிரியங்கா" said...

Mrs.Menagasathia said...
பிரியங்கா நலமா?குட்டி என்ன சொல்றாங்க.நல்லபடியாக இந்தியா சேர்ந்ததில் சந்தோஷம்.நம்ம நாட்டிலே தான் விழிப்புணர்வு இல்லையே அப்புறம் எப்படி அவங்க கவசத்தை போடுவாங்க?

//

ம்ம்ம்ம்ம்... நலமா இருக்கேன் ங்க மேனகா... :)நீங்க எப்டி இருக்கீங்க?? குட்டி பாப்பா வும் நலம்... உங்க அன்புக்கு நன்றி...
உண்மை தான்ங்க... விழிப்புணர்வு கம்மி தான் இங்க... :(

"பிரியங்கா" said...

நிலாமதி said...
வேடிக்கையாக் இருந்தது ..ஒருவேளை மக்கள் கவன்க்குறைவாக் இருக்காங்களோ ? உங்கள் வருகைக்கு மிக மகிழ்ச்சி ...நல்மாக் இருகீங்களா? உடல் நலனைபார்த்து கொள்ளுங்கள்.

//

நலமா இருக்கேன்ங்க ஆன்டி... நீங்க எப்டி இருக்கீங்க?? :) உங்க பதிவுகள் லாம் இன்னும் படிக்கல நானு... பொறுமையா படிச்சிட்டு பின்னூட்டமிடனும் னு இருக்கேன்... :)

"பிரியங்கா" said...

பித்தனின் வாக்கு said...
திரும்பவும் பதிவு எழுதியதில் சந்தொசம், இந்தியா சுற்றுலா பத்தி பதிவு போடவும், அப்புறம் எந்த விமான நிலையத்திலும் உங்க நேயாளிகள் நினத்து ஓரங் கட்டுலையா. ஏன்னா நீங்க மட்டும் முகமூடி போட்டா உங்களுக்கு அந்த நேய் இருக்குனு நினைக்க சாத்தியக் கூறுகள் அதிகம்.

//

உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிங்க... :) ஆமாம்ங்க... எங்கள தான் நோயாளி மாறி பாத்துட்ருந்தாங்க...

"பிரியங்கா" said...

பிரியமுடன்...வசந்த் said...
பிரியா எப்பிடிம்மா இருக்க?

மருமகன் என்ன சொல்றான்?

takecare...

திரும்ப நீ எழுத வந்ததுல ரொம்ப சந்தோசம்

//


நல்லா இருக்கேன் அண்ணா... :)
என்ன அண்ணா?? மருமகளா இருந்தா வேணாமா உங்களுக்கு?? :) உங்களுக்கு மருமகனா, மருமகளா தெரியலியே இன்னும்... ;) :)

சிங்கக்குட்டி said...

எப்படி இருந்தது உங்கள் இந்திய பயணம்.

பித்தனின் வாக்கு said...

என்னங்க பிரியா பதிவே கானம். குழந்தை எப்படி இருக்கா? நல்லா இருக்காளா? குறும்பு பண்ணறாளா?. பதிவு போட டயம் கொடுக்க மாட்டிங்கறாளா? நலாமாய் இருக்க பிரார்த்திக்கின்றேன். நன்றி.

angel said...

arilum savu nurilum savu itha thapa purinjikitanga

வால்பையன் said...

எங்க போயிட்டிங்க!?